அரிசி விலை கிலோ 1000 ரூபாய்

சென்னையில் சில்லறைக் கடைகளில் விற்கப்படும் விலையையொட்டியே, தமிழகம் முழுக்க விற்பனையாகிறது. தக்காளி கிலோ அறுபது ரூபாய், கோஸ் 30  ரூபாய், உருளைக் கிழங்கு 25 ரூபாய், கேரட் அறுபது ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், முள்ளங்கி முப்பது ரூபாய், நூல்கோல் 28 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய்,  அவரைக் காய் 60 ரூபாய், பச்சை பட்டாணி 30 ரூபாய், சேனைக் கிழங்கு 25 ரூபாய், சேப்பங்கிழங்கு 25 ரூபாய், வெண்டைக்காய் 52 ரூபாய், முருங்கை 90  ரூபாய்  இவையெல்லாம் இந்த வார நிலவரம். பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகளின் விலை இன்னமும் எகிறும் என அச்சம் தெரிவிக்கின்றனர்  விவசாயிகள்.

சாதாரணமாக சென்னையில் 15 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், கடந்த வாரம் கிலோ 100 ரூபாயைத் தொட்டது. மலிவாகக் கிடைக்கும் சத்து உணவான கீரை  கூட ஒரு கட்டு 15 ரூபாயைத் தொட்டு விட்டது. மல்லி ஒரு கட்டு 7 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பூண்டு ரூ. 300க்கும் புளி ரூ.100க்கும் விற்கப்படுகிறது.  சாதாரணமாக காய்கறிகளை கிலோ கணக்கில் வாங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர்கள் தற்போது ஒவ்வொன்றிலும் கால்கிலோ மட்டுமே வாங்கிச் செல்கின்றனர்.

உயர்ரக அரிசியின் விலை ரூ.60 ஆகவும் சாதாரண ரக அரிசியின் விலை ரூ. 30 வரையும் விற்கப்படுகிறது. அனைத்து வகையான பருப்புகளின் விலையும்  விண்ணைத் தொட்டு வருகிறது.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

மேற்கண்ட பத்தி இந்த வார ரிப்போர்ட்டரில் வெளி வந்திருக்கிறது. திமுக அரசும், காங்கிரஸ் அரசும் செய்து வரும் மக்கள் விரோத ஆட்சியின் லட்சணம் தான் மேலே இருப்பது. இப்படியே செல்லும் பட்சத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூபாய் 1000 ஆனாலும் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.

காய்கறிகள் மட்டுமல்ல, மருத்துவமனைகளின் கட்டணங்களும் உயர்ந்து விட்டன. மருந்துகளின் விலை பற்றிச் சொல்லவே வேண்டாம். இவ்வாறு உயர்ந்து கொண்டே போகும் விலைவாசிக்கு என்ன காரணம் ?

“ ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் ஊழல் பணமும்தான் காரணம்”

– பஞ்சரு பலராமன்

4 Responses to அரிசி விலை கிலோ 1000 ரூபாய்

 1. Ramesh J சொல்கிறார்:

  Balaraman sir,

  Nam makkal than ilavasa arisi, tv ithuku asaipattu avargalai vazha vaiththu kolkirargal….

 2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  NAAM ERUMAITHTHOL KONDA MAAAAKKAL, NAMAKKU SOODU SORANAI,VARAATHU. “”ELLAAM NAMATHU THALAI VITHI”” ENTRU IRUNTHU VIDUVOOM!!

 3. krishna சொல்கிறார்:

  இதை படிக்க படிக்க ரத்தம் கொதிக்கிறது… என்னதான் நடக்கிறது ….. எந்த அரசியல்வாதியும் மக்களை பற்றி சிந்திப்பதில்லை ….. அவனவன் ஊழல் செய்யவே நேரம் போதாத பொது எங்கிருந்து மக்களை பற்றியும் விலைவாசியை பற்றியும் யோசிக்க போகிறான்…???? என்னதான் காய்கறிகளின் விலை உயர்ந்தாலும் விவசாயிக்கு மட்டும் அதனால் எந்த பயனும் இல்லை… மக்கள் முன்வந்து பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும். அரசு விரைவில் இதற்க்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்… விஷயம் தெரிந்தவன் மட்டுமே ஆட்சி செய்யவேண்டும்… இங்குதான் வசனம் eluthuravarum வாய்சவடால் விடுபவரும் ஆட்சி செய்கிறார்களே….என்னத்தை சொல்வது… எல்லாம் விதி விட்ட வழி என்று பொய் சேரவேண்டியதுதான்…

  • அனாதி சொல்கிறார்:

   அடப் போங்க கிருஷ்ணா ! நீங்களே பாருங்கள் ! இந்தியா தனக்கான தலைவர்களை தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இன்றைக்கு இருக்கும் ஆட்சியும், அன்றைய இந்தியாவை ஆண்ட ஆங்கில ஆட்சிக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்பதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். இன்றைய ஆட்சியாளர்கள் மக்களை போராடத் தூண்டி வருகிறார்கள். மக்கள் போராட ஆரம்பித்தால் இன்றைக்கு செல்வாக்கின் உச்சத்திலிருப்போரின் கதியை எண்ணிப் பார்த்தால் படு பயங்கரமாய் இருக்கிறது.

   கடவுள் இருக்கிறார் கிருஷ்ணா ! அது நீங்களே – பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: