எதுவுமே உண்மையில்லை

நீங்கள் படிக்கும், அறிய நேரிடும் எந்த ஒரு அரசியல், சினிமா மற்றும் வரலாறு சம்பந்தமான செய்திகள் எதுவும் அதன் முழுமையான விபரத்தோடு வெளியிடப்படுவதில்லை என்பதை நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட இந்திய பத்திரிக்கைகள் பெரும்பாலானவை அரசியல் ஆதிக்கச் சக்திகளின் கைகளிலும், கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைகளிலும் சிக்கி இருக்கின்றன.

தமிழ் நாட்டு சங்கதியைக் கேட்கவே வேண்டாம். அனைத்துப் பத்திரிக்கைகளும் அரசியல் சார்புடையதாக இருக்கின்றன. அவ்வப்போது சில சாமனியர்களின் செய்திகளை பரபரப்பாய் வெளியிட்டு நாங்களும் பத்திரிக்கை தர்மத்தைக் காப்பாற்றுகிறோம் என்று பீற்றிக் கொள்வார்கள்.

இந்த லட்சணத்தில் பத்திரிக்கை உலகம் இருக்கும் நேரத்தில், விக்கிலீக்ஸின் பணி மகத்தானது.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அயோக்கிய சிகாமணிகளாய் இருக்கும் போது, நாம் மட்டும் யோக்கியமாய் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட உலகச் சூழலில் சிக்கி இருக்கும் நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதே மேற்கண்ட அரசியல்சக்திகளும், கார்ப்பொரேட் நிறுவனங்களும் தான்.

கத்திரிக்காய் விலை 60 விற்கிறது. பூண்டு விலை கிலோ 450  ரூபாய் விற்கிறது. வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது. யாருக்காவது சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிறதா என்று கேட்டால், இல்லையென்றுதான் சொல்வீர்கள்.

40 வருடங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை உயர்ந்தாலோ, காய்கறிகளின் விலை உயர்ந்தாலோ பொதுமக்களே சாலை மறியல் செய்வார்கள். ஊரெங்கும் சாலை மறியல்கள் நிகழும். அரசு ஸ்தம்பித்து விடும் அளவுக்கு போராட்டங்களை நிகழ்த்துவார்கள். அன்றைக்கு மக்களிடையே பொது நல எண்ணம் மேலோங்கி இருந்தது.

ஆனால் இன்றைக்கோ, சுய நலம் சார்ந்த பொருளியல் வாழ்க்கையை வாழ முயலும் சமூகத்தின் ஆசையை, மேற்கண்ட அழிவு சக்திகள் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்தி வருகின்றன.

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி இந்தியப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எட்டு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. எவராலும் அரசை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு கட்சியும் கொள்கைகளை மறந்து விட்டு, கொள்ளையடிப்பதை தங்கள் கொள்கையாக்கி விட்டன.

மக்களை காசு சம்பாதிக்கும் இயந்திரமாய் மாற்றிக் காட்டியதில் கணிப்பொறிக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. மக்களை மடையர்களாய் மாற்றிக் காட்டுவதில் அரசியல் அழிவு சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. கார்பொரேட் நிறுவனங்கள் தங்களின் ஆக்டோபஸ் கைகளால் மக்களை மூடியிருக்கின்றன. மக்களின் ஒவ்வொரு துளி ரத்தமும் அவர்களை அறியாமலே இந்த நிறுவனங்கள் உறிஞ்சுகின்றன. அதற்கு கையூட்டு பெறுகின்ற அரசியல் சக்திகள்.

மக்களுக்கு பொது நல எண்ணம் மேலோங்கினால் மட்டுமே, அவர்களுக்கான வாழ்வை வாழ முடியும். இல்லையென்றால் 100 வயது என்று இருந்த மனித வாழ்க்கை 50 வயதுக்குள் முடிந்து விடும்.

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

– பஞ்சரு பலராமன்

 

 

7 Responses to எதுவுமே உண்மையில்லை

 1. kratos சொல்கிறார்:

  really wikileaks rocks

 2. Ramesh J சொல்கிறார்:

  Balaraman Sir,

  Indha real estate vandhu ellathaiyum kedukuthu sir…..

  China policy vendum real-estate-la…
  Neenga enna solreenga….

  • அனாதி சொல்கிறார்:

   ரியல் எஸ்டேட் தொழில் மட்டுமல்ல காரணம். அதையொட்டிய மிகப் பெரிய பிரச்சினை ஒன்றினை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். படித்துக் கொள்ளவும். ரியல் எஸ்டேட்டை மிகப் பெரிய பிசினஸ்ஸாக மாற்றியதில் அரசியல்வாதிகளுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஊழல் பணம் அத்தனையும் ரியல் எஸ்டேட்டில் மறைமுகமாக முதலீடு செய்யப்படுவதால், விலையேற்றம் ஏற்படுகிறது – பஞ்சரு

 3. D. Chandramouli சொல்கிறார்:

  You neatly expressed the deep frustration and helplessness of the general public. It’s time that a mass leader with clean conscience emerges in the country, more particularly, in Tamil Nadu, to channel the aspirations of the people. The million dollar question is “who is that person that can lead a people’s movement?” I have been reading scores of blogs written by eminent writers, and almost all, like you, agree on the steep downfall in ethics and morality in public and corporate life.

  • அனாதி சொல்கிறார்:

   மக்கள் சரியில்லை மவுலி சார். இலங்கையில் தமிழ் இனம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டது. தமிழக அரசால் அக்கொலைகளை தடுக்க வாய்ப்பிருந்தும், தடுக்கவில்லை. இந்த அரசு ஏற்பாடு செய்த செம்மொழி மா நாட்டில் குடும்பத்தோடு கூடிய மக்கள் இருக்கையில், எந்த அரசியல்வாதியும் திருந்தப் போவதில்லை மவுலி சார். மக்கள் சரியில்லை என்பதால் ஆள்பவனும் சரியில்லை. அவ்வளவுதான் சொல்ல இருக்கிறது. – பஞ்சரு பலராமன்

 4. anvarsha சொல்கிறார்:

  முற்றிலும் உண்மை. எப்போதும் பெரிய அழிவிற்கு பிறகுதான் நல்லது நடக்கும் என்றால் அந்த நல்லது நடக்க கூடிய தருணம் இது. நாம் அழிவின் விளிம்பில் இருக்கிறோம்!

 5. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  mika nalla muraiyil solliulliirkal, nantri!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: