காந்தி என்ற மாயை

நேற்றைய செய்தித் தாளில் சோனியா ஆவேசம் என்று தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதே தினசரியில் ஊழல் கண்காணிப்புத் துறைக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் வரலாற்றினை எழுதியிருந்தார்கள். அடுத்த பக்கத்தில் உலகமகா ஊழல் மன்னன் ராஜாவைப் பற்றியும், அவரின் நில ஊழல் பற்றியும் செய்திக் கட்டுரைகள் வெளியாகி இருந்தன.

திருமதி சோனியா அவர்களின் ஆவேசம் சிரிப்பைத் தருகிறது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் மயம். ஊழல் செய்யாதவரே கிடையாது என்றுச் சொல்லும் வகையில் இந்திய ஆட்சியினை நடத்தி வரும் இவர், ஊழலுக்கு எதிராய் போர் தொடுக்க வேண்டும் என்றுச் சொல்வது, கேட்பவன் கேனயனாக இருந்தால் கேழ்வரகில் இட்லி வரும் என்று சொல்வது போல இருக்கிறது.

தகுதியும், திறமையும் அற்றவர்களை தலைமைப் பொறுப்பிற்கு வரவைப்பது காங்கிரஸ்ஸில் ஒன்றும் புதிதல்ல. சோனியா காந்தி எப்படி காங்கிரஸ்ஸுக்கு தலைவரானார்? ராகுல் காந்திக்கு பட்டம் சூட்ட காங்கிரஸ் காய்களை நகர்த்தி வருவதையும் செய்திகள் மூலம் அறிய நேரிடுகிறது.

ராகுல் காந்தி மாயை பீகார் தேர்தலில் படுகுப்புற விழுந்து விட்டது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் காந்தியின் பெயரைச் சொல்லி காங்கிரஸ் கண்ணாமூச்சி ஆடும்? இதுவரை நடந்து வந்த ஆட்சிகளிலெல்லாம் மிக மோசமான ஆட்சியாய் சோனியா காந்தி, காங்கிரஸ்ஸுக்கு தலைவியாய் வந்த பிறகே ஆனது. இல்லையென்று இவரால் மறுக்க முடியுமா?

ஆளுமைத் தன்மையும், பன் முக சிந்தனையும் அற்றவர்களால் தான் இப்படி ஒரு ஊழல் ஆட்சியினைத் தர முடியும். தமிழகத்தில் திமுகவின் நிலைமை இன்றைக்கு அய்யகோ என்றாகி விட்டது.

விதி என்ற ஒன்று உண்டு. இலவச கலர் டிவி கொடுப்பதை தன் ஆட்சியின் மிகப் பெரும் சாதனையாக நினைத்த திமுக ஆட்சிக்கு, அதே இலவச டிவியினால் ஆட்சி பறிபோக வேண்டிய சூழல் வந்து விட்டது. கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி, இன்று அவரது குடும்பத்தாலே படுகேவலப்பட்டு நிற்கிறது என்பது விதி.

எனது நெருங்கிய ஜோதிடர் நண்பரிடம் இதுபற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். கலைஞருக்கு அடுத்த் ஆட்சிக்கு யோகம் இருக்கிறது. அம்மாவிற்கு அந்த யோகம் இல்லை. இனிமேல் அம்மாவிற்கு ஆட்சியோகம் கிடையவே கிடையாது என்றார். எதிரிகளை துவம்சம் செய்யக்கூடிய ஜாதக அமைப்புக் கொண்டவர் சோனியா காந்தி. அவரை எதிர்ப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்றுச் சொன்னார். அப்படியும் நடக்குமா என்பதை இனிப் போகப் போகத்தான் பார்க்க வேண்டும். ஜோதிடம் உண்மை என்றால் தர்மம், நியாயம் என்பதெல்லாம் உண்மையாக இருக்குமே என்று அந்த ஜோதிட நண்பரிடம் கேட்டேன். ஆமாம், அதன் விளைவுகள் படுமோசமாய் இருக்கும் என்றார்.

உண்மை எப்போதும் பலவீனமானதாக இருக்கும். ஆனால் அதன் வீச்சு படு பயங்கரமாய் இருக்கும்.

தலைவர்கள் தங்களின் தகுதிக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். தீமை செய்யும் தலைவர்களை இந்தியாவின் ஆன்மா என்றைக்குமே மன்னிக்காது.

– பஞ்சரு பலராமன்

3 Responses to காந்தி என்ற மாயை

 1. டவுசர் பாண்டி சொல்கிறார்:

  தல, கொஞ்சம் இந்த பக்கம் வந்துட்டு போங்க. http://anubavajothidam.com/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D/

  யாரு சொல்றத நம்பன்னு நீங்களே நல்ல பதிலா சொல்லுங்க.

 2. ஆடிட்டர் சரவணன் சொல்கிறார்:

  ஐயா, கொஞ்சம் இங்கன வந்துட்டுப் போங்க

  http://anubavajothidam.com/ஜெ-தலைமையில்-கூட்டணி-ஆட்/#comment-2253

 3. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  JOSYAM ELLAM MEIYAAKAATHU! SENTRAMURAI JAYA VETRI PERUVAAR ENTRU JOSYAM KOORINAARKAL, AANAAL ENNA AACHU?JAYAVINATCHI THOTRATHU. ENAVAE MAKKALIN MANA NILAIYAI ARINTHAAL, KARUNAAKANITHI IMMURAI THOLVI ADAIVAAR!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: