இட்லிக்கண்ணழகியின் கிழட்டுக்காதல்

மனிதர்களை ஓய்வெடுக்க வைக்கவும், அவர்களின் வக்கிர புத்திக்கு வடிகாலைத்தரவும் உகந்த நேரம் மாலை நேரங்கள். அப்படிப்பட்ட ஒரு மாலை நேரத்தில், சினிமா சம்பந்தப்பட்ட ஒரு இடத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருன்ந்தேன். அப்போது கேட்டதுதான் கீழே வருபவை.

பெண்களில் இருவகையினர் உண்டு. கணவனையே தெய்வமென நினைத்து, தன் குடும்பத்தை அழகாய் கட்டி, ஆல்போல பெருக வைப்பவர்கள் ஒரு வகையினர். இவர்களுக்கு பகட்டு, ஆடம்பரம், பொய் பேசுதல், புரம் சொல்லுதல் போன்றவற்றில் ஈடுபாடு இருக்காது. தன் சுற்றத்தார், உறவுகள், நட்புகள், கணவன், குழந்தைகள் என்று பலரையும் ஆதரித்து, அரவணைத்து தன் குடும்பத்தை வழி நடத்திச் செல்லுவர். இவ்வகைப் பெண்கள் தியாகம் செய்வதில் முதன்மையானவராய் இருப்பர். இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் சில வகை உணவுப் பொருட்களைச் சாப்பிட்டால், தன்னிடம் பால் குடிக்கும் குழந்தைக்கு ஆகாது என்பதால், அவ்வுணவை (தனக்கு மிகப் பிடித்தமாய் இருந்தாலும்) தள்ளி வைத்து விடுவர் இவ்வகைப் பெண்கள்.

காணும் பொருட்களின் மீதெல்லாம் ஆசை வைப்பது, தன்னை பிறர் பார்க்க அழகு படுத்திக் கொள்வது, உடம்பு அதிர அதிர நடப்பது, தன் நலத்திலேயே குறியாய் இருப்பது, பணத்தின் மீதான ஆசையை அதிகம் வைப்பது, கேளிக்கை, கொண்டாட்டம், ஆட்டம், பாட்டம் இவைகளில் ஆர்வமிருப்பது, தன் பெண் குழந்தையை ஆடல் பாடல்களில் ஈடுபடச் செய்வது போன்ற இழி செயல்களில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் கொண்டவர்கள் அடுத்த வகையினர். இவர்களில் முதன்மையானவர்கள் என்று எடுத்துக் கொண்டால் அது நடிகைகள் என்றுச் சொல்லலாம். தொட்டாலே கற்பு போய் விடுமா? நீ எப்படி நடிகைகளை இரண்டாவது வகையில் சேர்க்கலாம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் நான் சொல்ல வருவது அது அல்ல.

உடனே பெண் அடிமைத்தனமல்லவா நீங்கள் சொல்வது என்று ஆரம்பித்து விடுவீர்கள். ஆனால் நான் சொல்ல வருவது அதுவல்ல.

மனித சமூகத்திற்கு கட்டுப்பாடுடைய வாழ்க்கை நன்மையைத் தருமா இல்லை தீமையைத் தருமா என்பதை விவாதித்தால், அறிவுடையோர் சொல்வது “ நன்மை”. கட்டுப்பாடு, ஒழுங்கு என்பவை சக மனிதனுக்கு நன்மை தருமென்பதாலும், அதை பயன்படுத்துவோருக்கும் நன்மை தரும் என்பதாலும் – மனிதன் சமூகக் கட்டுப்பாடுகளை பேணி, அதன் படி வாழ்வதுதான் முறை. அவ்வாறு சமூகக் கட்டுப்பாடுகளை நீக்கி, மனம் போன போக்கில் வாழ்ந்தால் அழிவைத்தான் அடைய நேரிடும். அப்படி ஒரு சமூகம் ‘எண்ணப்படி’ வாழ முயன்று இன்றைக்கு காணாமலே போய் விட்டதை நாம் அறிவோம். அந்தச் சமூகத்தின் பெயர் “ஹிப்பிஸ்”.

சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம்.  சினிமா என்றாலே குடியும், குட்டியும் என்பது எழுதப்பட்ட விதி. பெண் சினிமாவில் நடிக்கிறார் என்றால் அவளின் மீதான கற்பு சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் எழுவது நியாயம். ஏனென்றால் சினிமா உலகு அவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல பெண் என்றாலும், அவள் மீது சினிமாவின் அந்த நிழல் படிவதை எவராலும் மறுக்க முடியாது.

இந்தச் சூழலில், மிக நல்ல வாழ்க்கையை பெற்ற இந்த நடிகையின் ஆரம்பகால வாழ்க்கை மிகக் கொடூரமாய் இருந்தது. பின்னர் பலபேரின் அன்போடு, பல படங்களில் நடிக்க, அப்படங்களும் வெற்றியடைய பணமும், புகழும் சேர ஆரம்பித்தது. மெட்டீரியல் வாழ்க்கையை வாழ்ந்த எவரும் அவ்வளவு எளிதில் அதை விட்டு வெளியே வருவது என்பது இயலாது. இந்த மோகத்தில் சிக்கிய நடிகை, காதலிலும் சிக்கி அதன் விளைவாக குழந்தையும் பெற்றுக் கொண்டார். திருமண வாழ்வின் பிற்பகுதிகள் நன்றாக இல்லை என்பதால் பணத்தேவை அதிகரிக்க,  தன்னை விற்பனைப் பொருளாக்கினார்.

தமிழகத்தில் எவர் கண்ணிலும் மாட்டாத ஒரு மாபெரும் விபச்சார நெட்வொர்க் ஒன்று இருக்கிறது. அதுபற்றி விரைவில் ஏதாவதொரு பத்திரிக்கையில் செய்தி வரும். அப்போது படித்துக் கொள்ளுங்கள். இந்த நெட்வொர்க்கில் இணைந்தார். அதன் தொடர்பாக தினம்தோறும் வருமானம் பார்க்க ஆரம்பித்தார். அப்படி வந்த ஒரு கிளையண்ட் தான் அந்த 65 வயது பிசினஸ் மேன். இந்த நடிகை இப்பொழுது இந்த கிழவரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். கணவனோ ???? அதையெல்லாம் எழுத மனசு கூசுகிறது. ஒரு நாள் நிச்சயம் அந்தக் கிழவரும் இந்த நடிகையை கை கழுவி விடுவார். அப்போது இந்த நடிகையின் கதி என்ன? என்பது இறைவனுக்குத்தான் தெரியும்.

சமீபத்தில் ஒரு சிறுகதை படித்தேன். அக்கதையில் மானம், ரோசம் என்று வாழ்ந்தவன், அவனின் பொண்டாட்டியால் கேவலத்தை அடைந்தான். அவளுக்கு வேசி என்ற பட்டமும் கிடைத்தது.

இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் சிலரின் வாழ்க்கை பலருக்கு பாடமாக அமையும். எப்படியும் வாழலாம் என்று நினைப்போரால், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பெரும்பான்மையானவர்களின் எண்ணங்கள் பாதிக்கப்படும். அப்படிப் பாதித்தோர் எவராவது ஒருவருக்கு இப்பதிவு சிந்திக்க வைத்தால் அந்த திருப்தியே போதுமானது.

– கூ.முனியாண்டி

6 Responses to இட்லிக்கண்ணழகியின் கிழட்டுக்காதல்

 1. rasikan சொல்கிறார்:

  ada sollungappa yaarunu?

 2. Jalsa Sam சொல்கிறார்:

  Vera Yaaru…Parkamale Kaatha Kottai kattiyavaruthan! Saringala Muniyandi?

 3. rasikan சொல்கிறார்:

  Who is that idlykannalagi? help me…

 4. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  INTHAMAATHIRI PENKAL SAMOOKATHTHIL ELLAA MATTANGKALILUM IRUKKIRAARKAL. CINIMAA ENPATHAAL UDAN VELICHCHATHTHIKU VARUKIRATHU,AVVALAVUTHAAN!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: