ஜேபிசி – பொதுக்கணக்கு குழு வித்தியாசம் என்ன?

ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் அரசு, பொதுக்கணக்கு குழு விசாரணை மட்டும் போதும் என்றும், பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவையில்லை என்றுச் சொல்லி வருவதையும், அதன் காரணமாய் பாராளுமன்றம் முடங்கிக் கிடப்பதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருப்பதையும் நாம் அறிவோம்.

காங்கிரஸ் அரசும், திமுக கட்சியும் இணைந்து கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழலை நடத்தி பெரும் கொள்ளையை அடித்திருக்கிறார்கள் என்பதை , நாம் சொல்லி படித்த எவரும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை என்பதையும் நாம் அறிவோம்.

ஆகவே ஜேபிசி என்று சொல்லக்கூடிய ஜாயிண்ட் பார்லிமெண்டரி கமிட்டி (ஜேபிசி) விசாரணைக்கு காங்கிரஸ் அரசு உத்தரவிடாது என்பதையும் இவ்விடத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் காங்கிரஸ் கட்சி ஜேபிசிக்கு அனுமதி மறுக்கிறது என்பதையும், அப்படி என்ன ஸ்பெஷல் பவர் இந்தக் கமிட்டிக்கு இருக்கிறது என்பதையும் கீழே பார்க்கலாம்.

முதன் முதலாய் ஜேபிசி 1987ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்டது. இதில் லோக்சபாவிலிருந்து 50 உறுப்பினர்கள், ராஜ்ய சபாவிலிருந்து 20 உறுப்பினர்கள் கட்சியின் விகிதாசாரப்படி தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்கலாம். சந்தேகப்படுபவர்களையும் விசாரிக்கலாம். சிஏஜி, ரா மற்றும் அனைத்து புலனாய்வு பிரிவுகளும் இந்த அமைப்புக்கு உதவும். எல்லா டாக்குமெண்டுகளையும் பெற அதிகாரமும் இருக்கிறது. சாட்சிகளை விசாரிக்கவும், வார்த்தை வார்த்தையாக பதிவு செய்யவும்,வெளி நாட்டுக் குடிகள், அமைப்புகள் போன்றவைகளிடமிருந்து ஆதாரங்களைப் பெறவும், சாட்சியங்களைப் பெறவும் அதிகாரம் உண்டு. பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கையை விசாரிக்கவும் ஜேபிசிக்கு அதிகாரம் உண்டு. இவ்வளவு அதிகாரம் கொண்ட ஜேபிசிக்குப் பதிலாக நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு விசாரணையே போதும் என்கிறது காங்கிரஸ் கட்சி.

இந்தப் பொதுக் கணக்குக் குழுவின் வேலை என்ன தெரியுமா? சிஏஜியின் கணக்கு வழக்குகளை ஆராய்வது மட்டுமே வேலை. மேற்படி சொல்லியிருக்கும் எந்த அதிகாரமும் இந்தக் குழுவிற்கு கிடையாது. இப்போது சொல்லுங்கள் காங்கிரஸ் கட்சி ஏன் ஜேபிசிக்கு அனுமதியளிக்க மறுக்கிறது என்பதை? ஜேபிசி அமைக்க்கப்பட்டால் ஊழலின் முழு வடிவமும் வெளிப்பட்டு விடும் என்று காங்கிரஸ் அரசு பயப்படுகிறது.

ஆக, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பணமும் காங்கிரஸ்ஸுக்கும், திமுகவிற்கும் சென்றிருக்கிறது என்பதை நாம் அச்சர சுத்தமாக அறிந்து கொள்ளலாம். சிபிஐ விசாரணை, ரெய்டு என்பதெல்லாம், மக்களை ஏமாற்றும் செயல்கள் என்பதையும் நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

அரசால் நிர்வகிப்பட்டு, கண்காணிக்கப்பட வேண்டிய சிபிஐ விசாரணையை இப்போது சுப்ரீம் கோர்ட்டே கண்ட்ரோல் செய்யவிருக்கிறது. அதாவது நீதிமன்றம் ஆட்சியை நடத்தி வருவது போல எடுத்துக் கொள்ளலாம்.

எந்த ஒரு ஜன நாயக நாட்டிலும் இப்படி ஒரு ஆட்சி இதுவரை நடந்தது இல்லை. அப்படி ஒரு அரசாட்சியை ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.

– பஞ்சரு பலராமன்

 

3 Responses to ஜேபிசி – பொதுக்கணக்கு குழு வித்தியாசம் என்ன?

 1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  CONGRESS KATCHIYUM THI MU KA KATCHIYUM KOOTTAAKA PANATHTHAI SURUTTI, SWISS BANKIL DEPOSIT SEITHUVITTAARKAL. J P C YAAVATHU ONNAAVATHU! SONIYAAVAI ITTALIKKU THURATHTHINAALTHAAN , INTHIYAA URUPPADUM!

  • அனாதி சொல்கிறார்:

   நாதன், அட போங்க. அரசியல் என்றால் என்ன வென்று முதலில் புரிந்து கொள்ளுங்கள். மக்கள் பற்றிஅறிந்து கொண்டவர்கள்தான் அரசியல்வாதிகளாய் மாறுவர். மக்களை சாதாரணப்பட்டவர்கள் என்று நினைத்து விடாதீர்கள். – பஞ்சரு பலராமன்

 2. krishna சொல்கிறார்:

  என்னங்க இது தோண்ட தோண்ட பூதம் வர்ற மாதிரி இருந்தாலும் இந்த ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாவற்றையும் மறைத்து வெறும் காற்றாக ஆகிவிடுவார்களோ???அதற்குதான் தினம் ஒரு புரளியை மாநில கட்சியும் மதிய கட்சியும் பரப்பி வருகிறதே… நேற்று மு.க வின் சொல்படி.. பிரதமர்,முதல்வரை விடுதலை புலிகள் கொள்ள சதி செய்திருப்பதாக கிளப்பிவிட்டார்கள், இன்று ராகுல் காந்தி இந்து பயங்கர வாதம் என்று கிளப்பி ச்பெக்ட்ரும் விவகாரத்தை திசை திருப்ப பார்க்கின்றனர்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: