சாரு – மிஷ்கின் – கிக்கிபுக்கி

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா பற்றி நண்பர் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். நண்பனின் துரோகம் என்று மிஷ்கினை திட்டி இருக்கிறார் சாரு என்றார் நண்பர். அப்படியா என்றேன். இதில் பெரிய ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஏனென்றால் சாருவின் இயல்பு அது. சாரு தன் தளத்தில் எழுதிய நண்பர்கள் லிஸ்ட்டை எடுத்துப் பாருங்கள். தற்போது அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கும் அரைகுறைகள் மட்டுமே அவருடன் திரிவார்கள். பழைய நண்பர்கள் எவரும் அவருடன் இருக்கமாட்டார்கள். ஏன் தெரியுமா? சாருவிற்கு வாங்கத்தான் தெரியும். கொடுக்கத் தெரியாது. அன்பினைக் கூட.

இவரின் எழுத்தை ஆரம்பகால வாசகன் வேண்டுமானால் வாசித்து மிரட்சியடையலாம். இவரின் எழுத்தை சற்றே மதி நுட்பத்துடன் தொடர்ந்து வாசித்தால், அவரின் குணம் பளிச்செனத் தெரியும்.

சாரு ஒரு புரட்சி எழுத்தாளர், சமரசமற்றவர் என்று மனுஷ்யபுத்திரன் சாருவின் புத்தக முன்னுரையில் எழுதுவார். மேற்படி வார்த்தைகளின் அருகில் செல்லக்கூட இவருக்கு தகுதி இல்லை என்பதை சாருவே தனது பத்தியில் எழுதியிருப்பதைப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

அதற்கு ஒரு உதாரணம் : மிஷ்கினுடன் உரையாடலைத் தொடர்ந்து அவரின் பத்தியில் இளையராஜா பற்றிய செய்தியை நீக்கப்பட்டதாய் சாரு சொல்கிறார். அதற்கு ஒரு சப்பைக்காரணம் : நந்தலாலா ஒரு நல்ல படமாம். இப்போது சொல்லுங்கள் சாரு சமரசமற்ற எழுத்தாளரா?

மிஷ்கின் சாருவின் தேகம் பற்றிய புத்தக விமர்சனமாய் சொன்னது : “ சரோஜா தேவி”. அவ்வளவுதான் அதில் இருக்கிறது போலும். ஆனால் சாரு அவர் அப்படிச் சொன்னதற்காக இல்லாத புனைவுகளை எடுத்து எழுதி புலம்புகிறார். சரோஜா தேவி புத்தகத்தை அப்படித்தானே சொல்ல வேண்டும்? இவரின் எழுத்தைப் புகழ்ந்திருந்தால் மிஷ்கினைப் போல மனிதனே இல்லை என்பார். புகழவில்லை என்பதற்காக துரோகம் என்ற வார்த்தையினைப் பயன்படுத்துகிறார். ஆனால் உண்மையில் யார் துரோகம் செய்வது என்பதை சாருவை நன்கு அறிந்த அவரின் வாசகர்களே அறிந்து கொள்வார்கள்.

குறிப்பு : நீங்கள் ஒரு சமகாலக் கவிஞர் ஆக வேண்டுமென்றால் சாருவின் அடுத்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஒரு ஐந்து லட்சம் செலவு செய்தால் “ அறிவார்ந்த “ பதிவர்களால் ‘சமகாலக் கவிஞர்’ என்ற பட்டத்தினைப் பெறலாம். 100 புத்தகங்கள் மட்டுமே ஆசிரியருக்கு என்ற உடன்பாட்டின் படி, இக்காலத்தில் எவர் வேண்டுமானாலும் புத்தகம் வெளியிடலாம் என்பதால் எழுத்தாளர்கள் என்பவர்கள் இன்றைக்கு சாலையோரம் வைத்திருக்கும் இட்லிக்கடைகள் போல பெருகி விட்டார்கள்.

– பஞ்சரு பலராமன்

மேலும் ஒரு குறிப்பு : சாரு அனாதி தளத்தை ஒரு பயங்கரமான பிளாக் என்று தனது தளத்தில் இணைப்புக் கொடுத்திருந்தார். அந்த வகையில் நாங்கள் சாருவை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பல வாசகர்கள் நினைக்க கூடும். எங்களால் அது முடியாது. தனி மனித தாக்குதல்களை பெரும்பாலும் தவிர்த்து வந்த நாங்கள், சாருவின் அலப்பரையினால் இப்படி எழுத நேரிட்டு விட்டது.

3 Responses to சாரு – மிஷ்கின் – கிக்கிபுக்கி

 1. Jalsa Sam சொல்கிறார்:

  Ivannunga ellam kitathatta vesinga mathiri..Ithellam publicity stunt…Avan puthgathi vikkavum , padatha ottavum enna venummnalum seivanunga..kooti kutupathu mudahal…Just IGNORE them…

 2. rakesh சொல்கிறார்:

  Migavum arumaiyana pathivu…
  well done sir…yenoda manasula thondratha neenga appudiye yelutheeteenga…prammadham…

 3. krishna சொல்கிறார்:

  அட எனக்கே அவர் வலை பக்கத்துல தான் உங்களோட லிங்க் கிடைச்சது…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: