காங்கிரஸ் கட்சி – ஊழல் கட்சி

அகில உலக இந்திய காங்கிரஸ் கட்சியின் அகில உலக தலைவர் திருமதி சோனியா ராஜீவ் காந்தி அவர்களின் கீழ்கண்ட பேச்சினை படியுங்கள்.

” பிரதமர் அலுவலகம் மற்றும் சி.பி.ஐ., போன்ற மதிப்புமிக்க அமைப்புகளை விசாரணைக்கு அழைக்க வேண்டும், அவற்றின் தனித்தன்மையை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம். இந்த காரணத்திற்காகவே பார்லிமென்டின் கூட்டுக்குழு விசாரணை வேண்டுமென எதிர்க்கட்சிகள் கேட்டு வருகின்றன,”

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாய் தூங்கிக் கொண்டிருந்த பிரதமர் அலுவலகத்தை கேள்வி கேட்காமல் என்ன செய்ய வேண்டுமென்று மேடம் எதிர்பார்க்கின்றார்கள் என்று தெரியவில்லை.

சிபிஐ – பீரங்கி திருடன் குவாட்ரோச்சியை குற்றமற்றவர் என்று விசாரணை செய்து அறிக்கை கொடுத்த சிபியை திறமையை என்னவென்று சொல்வது?

மதிப்புமிக்க அமைப்புகள் என்று சொல்லக்கூடிய இந்த இரு அமைப்புகளின் மீது ஏற்கனவே களங்கம் ஏற்படும் செயலினைச் செய்ய வைத்து, இவ்வமைப்புகளின் புகழை சிறுமைப்படுத்தியது காங்கிரஸ் கட்சி. எதிர்கட்சிகள் அல்ல.

ஸ்பெக்ட்ரத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று பத்திரிக்கைகள் ஆதாரங்களை வெளியிட்ட பிறகும் பிரதமர், உலக மகா ஊழல் மன்னன் ராசாவை குற்றமற்றவர் என்றுச் சொல்லியவர்.  அவரை விசாரித்தால் என்ன தவறு இருக்கப்போகிறது? குற்றமற்றவர்கள் என்று நீங்கள் நினைத்தால் விசாரணைக்கு ஆஜராக வேண்டியது தானே? ஏன் ஜேபிசி விசாரணையை மறுக்கின்றீர்கள்?

ஊழலுக்கு எதிரான கட்சி என்று பொய் அறிக்கைகளை விட்டு வரும் காங்கிரஸ், ஜேபிசி விசாரணையை மறுப்பது ஏன்?

உலக அரங்கில் இந்தியாவின் பெருமை சீரழித்தது காங்கிரஸ் கட்சி. இல்லையென்று மறுக்க முடியுமா?

இந்தியாவின் வளர்ச்சியை தடுத்து, புகழையும் சீரழித்து, ஊழலில் கோடிகளை முழுங்கி விட்டு, இந்திய மக்களை ஏமாற்றுவது காங்கிரஸ் கட்சி என்றால் அது பொய் என்று உங்களால் சொல்ல முடியுமா?

– பஞ்சரு பலராமன்

5 Responses to காங்கிரஸ் கட்சி – ஊழல் கட்சி

 1. vadivelan சொல்கிறார்:

  Please let us know What is ஜேபிசி enquiry in detail?

  • அனாதி சொல்கிறார்:

   நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை என்பது அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கொண்ட ஒரு குழு. இக்குழுவிற்கு பிரதமரை விசாரிக்கவும் அனுமதி உண்டு. ஆடிட்டர் ஜெனரல் எப்படியோ அப்படி ஒரு அதிகாரமிக்க ஒரு குழு. ஆனால் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த இயலுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் பெப்சி, கோக் விவகாரத்தில் ஜேபிசி அறிக்கையை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றுச் சொல்கின்றார்கள். – பஞ்சரு பலராமன்

 2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  KADAPPAARAYAI VIZHUNGKIVITTU SUKKU KASHAAYAM KUDIKKUM THIRAMAI PADAITHTHA CONGRESS KATCHIYIDAM VAERU YENNA ETHIPAARKKA MUDIYUM?? SAMAYAL VAELAI SEIYAVUM , KUZAHNTHAIKAL PETRU POODAVUM VANTHA SONIYAA AATCHI SEITHAAL ULAGAMAE SIRIKKATHAAN SEIYUM! ANTHO INTHIYAAVAE ,UNNAI KADAVULTHAAN KAAPPAATRAVAENDUM.

 3. krishna சொல்கிறார்:

  கீழ விழுந்தாலும் மண் ஒட்டலைன்னு அவங்க சொல்லறது நம்ம கலைங்கர்கிட்ட கத்துகிட்டது போல…

 4. D. Chandramouli சொல்கிறார்:

  You are right on spot.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: