உங்களைச் சுற்றும் உளவாளி

தனிமனித சுதந்திரத்தை எந்த நாடும் யாருக்கும் வழங்க முடியாது. ஆனால் தனிமனித சுதந்திரத்தைப் பேணிக் காக்கிறது ஜன நாயகம் என்று சட்டங்கள் சொல்கின்றன.  ஜன நாயகம் என்பது கண்கட்டு வித்தை அது மக்களை ஏமாற்றுகிறது என்பதை நாமெல்லாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை. நாமெல்லாம் அரசால் உளவு பார்க்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை.

மக்கள் பயன்படுத்தும் மொபைல், ரேடியோ, இமெயில், கம்ப்யூட்டர் அனைத்தும், ஒவ்வொரு அரசாலும் வேவு பார்க்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை.

சில அமெரிக்க அடிவருடி நாடுகளும், அமெரிக்காவும் சேர்ந்து ECHELON என்ற நெட்வொர்க்கை ஆரம்பத்தில் ராணுவ உளவு வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்தன. இந்த நெட்வொர்க் எந்த ஒரு சேட்டிலைட், ரேடியோ சிக்னலையும் இடைமறித்து கேட்க உதவி செய்யும். அந்த அளவுக்கு உளவுத்திறமை வாய்ந்த இந்த நெட்வொர்க் சாதனத்தை நாடுகள் தங்கள் நாட்டு மக்களை வேவு பார்க்க பயன்படுத்துகின்றன.

நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் பல பேரால் கேட்கப்படுகின்றன என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்பித்தான் ஆக வேண்டும். இந்தியாவில் இருக்கும் ஏழு அரசு அமைப்புகள் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ந்து ஏழு நாட்களுக்கு உங்கள் மொபலை உளவு பார்க்கலாம். IB, ED, DELHI POLICE, CBI, DRI, CENTRAL ECONOMIC INTELLIGENCE BUREAU AND NARCOTICS CONTROL BUREAU என்பனதான் தான் நம்மை உளவு பார்க்க அனுமதி பெற்ற அரசு அமைப்புகள்.

உங்கள் பேச்சினை வைத்து, நீங்கள் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்களாக அவர்கள் கருதினால், அரசின் அனுமதி பெற்று தொடர்ந்து உங்கள் பேச்சினை ரெக்கார்டு செய்யலாம். இது தான் இந்தியாவில் இருக்கும் நடைமுறை.

இது நாள் வரை அமெரிக்காவும், அதன் அடிவருடி நாடுகளும், சில ஐரோப்பிய நாடுகளும் பயன்படுத்தி வந்த ECHELON நெட்வொர்க்கை இந்தியாவில் நிறுவ ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று இந்தியா டுடே சொல்கிறது. அப்படி இந்த நெட்வொர்க் இந்தியாவில் நிறுவப்பட்டால் உங்கள் கணிணியில் கூட அரசாங்கம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி உள்ளே நுழைந்து உங்களைப் பற்றிய அறிந்து கொள்ள முயலும்.

-கட்டுரை ஆக்க உதவியது : இந்தியா டுடே

மிகச் சுருக்கமாய் தந்திருக்கிறேன். விரிவாகப் படிக்க வேண்டுமானால் இந்த மாத இந்தியா டுடேயை படித்து விடவும்.

– பஞ்சரு பலராமன்

2 Responses to உங்களைச் சுற்றும் உளவாளி

 1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  THANI NABAR PAECHU SUTHANTHIRAM, EAZHUTHU SUTHANTHIRAM ELLAAM KANAVUTHAANAA??VINJAANA VALARCHI AZHIVIRKUTHTHAAN KONDUSELKIRATHU. IYO KALI MUTHTHIP POOCHU!!!

 2. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  பஞ்சரு பலராமன் sir,

  Namma kitta antha alavuku therimai yarukkum illa sir…
  Namma govt. site adikadi china visit adichu record eduthu poguthu sir…..

  😦

  Nall thagaval sir….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: