எரியும் ஆண்கள் – கற்பின் மறுபக்கம்

முக்கிய வேலையாக ஒரு ஊருக்குச் சென்றிருந்தபோது, அவசியம் கருதி ஒரு மாதம் அவ்வூரிலேயே தங்கி இருக்க நேரிட்டது. தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் ஒரு டீக்கடை இருக்கிறது. அருகிலேயே கல்லூரிகள் இருப்பதால், மாணவர்கள் பலர் வீடு எடுத்து தங்கி இருந்தனர். தினமும் காலையில் மாணவர்கள் பலர் டீக்கடையில் சிகரெட், டீ குடிக்க குழுமினர். நானும் தினமும் காலையிலும், மாலையிலும் அக்கடையில் ஆஜராகி ஒரு பிளாக் டீயை அருந்தி விட்டு வருவேன்.  அங்கு நடந்த ஒரு விஷயம் என்னை மிகப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத்தான் இங்கு எழுதி இருக்கிறேன். இது கண்கூடாக கண்ட உண்மை நிகழ்ச்சி.

சரி தொடர்கிறேன்.

அந்த டீக்கடை வழியாகத்தான் பலரும் வாக்கிங் செல்லுவார்கள்.பணம் கொழிக்கும் பல வித தொழில்களைச் செய்பவர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பல கார்கள் நிற்கும். அந்த ஏரியாவில் பணக்காரத் தன்மை மிளிரும்.

ஒவ்வொரு நாளும் என்னைக் காணும் மாணவர்கள் சினேகமாக சிரித்து பழக ஆரம்பித்தார்கள். ஸ்போர்ட்ஸ் லேன்சர் காரை ஆசையுடன் பார்ப்பார்கள். ஒரு நாள் இரண்டு மாணவர்கள்” சார் எங்களை காரில் அழைத்துச் செல்கின்றீர்களா?” என்று கேட்டனர்.

150 கிலோ மீட்டர் ஸ்பீடில் கார் பறக்க, காருக்குள்ளே ஒரே சத்தம். காதைப் பிளக்கும் ஹரிஹரன் பாடல். சில்லென்ற ஏசி. அவர்களின் உற்சாகத்தைப் பார்த்து மனசு குதூகலமானது. ஆக்சிலேட்டரை அழுத்து அழுத்து என்று அழுத்தினேன். சிட்டாய் சீறியது லேன்ஸர்.

அவர்கள் இருவரும் என் கைகளைப் பிடித்து கண்கள் பனிக்க நன்றி சொன்னார்கள். ’நன்றாய் படியுங்கள்’ என்றுச் சொல்லி விட்டு, அறைக்குத் திரும்பி விட்டேன்.

மறு நாள் காலையில் வழக்கமாய் டீக்கடைக்குச் சென்றேன். அவர்கள் இருவரையும் காணவில்லை.

மூன்று நாட்களாய் அவர்களைக் காணவில்லை. கண்களால் சிரித்துப் பழகிய அம்மாணவர்களை காணாததால் மனசுக்கு பாரமாய் இருந்தது. துள்ளித் திரிந்த இளம் பிஞ்சுகளைக் காணாமல் மனசு வலித்தது. அவர்களுக்கு என்ன பிரச்சினையோ? ’கடவுளே அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையையும் கொடுத்து விடாதே’ என்று வேண்டிக் கொண்டேன்.

அக்டீக்கடை மீது எனக்குள் வெறுப்பு வந்தது.

மறு நாள், சற்றே வெறுப்புடன் அங்குச் சென்ற போது அவ்விரு மாணவர்களையும் பார்த்தேன். பார்த்தவுடன் வெகு சினேகமாய் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டனர். மூவரும் நான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.

’சார், ஒரு நாளைக்கு 25,000 ஆயிரம் ரூபாய் இருக்குமே!’ என்று கேட்டான் ஒரு மாணவன். சூடாய் காஃபியை பருகியபடி பேச்சுக் கொடுதேன்.

‘ஆமாம், இன்றோடு பதினைந்து நாட்களாகி விட்டன’ என்றேன்.

வாயைப் பிளந்தனர் இருவரும். ‘சரி இரண்டு நாளாய் உங்களைக் காணவில்லையே?’ என்று ஆரம்பித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இனி மேட்டர் சுருக்கமாய் :

வழக்கமாய் டீக்கடைக்கு வருபவர்களோடு, ஒரு மாமி பழக ஆரம்பித்திருக்கிறார். பின்னர் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். வழக்கம் போல அது செக்ஸில் கொண்டு போய் விட்டிருக்கிறது. கிராமப்புரத்திலிருந்து வந்த இருவரும், மாதா மாதம் வீட்டுக்கு 50,000 ரூபாய்களை அனுப்பி வைக்கின்றார்களாம். இருவரும் வீடு கட்ட ஆரம்பித்திருக்கின்றனராம். அவர்கள் வீட்டில் அனைவரும் வயிறார சாப்பிடுகிறார்களாம். ஒருவன் தன் அக்காவிற்கு திருமணமே செய்து வைத்திருக்கின்றானாம்.  ஒரு மாமியுடன் ஆரம்பித்த உறவு சங்கிலித் தொடர்போல ஆகி விட்டதாம். கல்லூரியில் சுமாராகத்தான் படிக்கின்றார்களாம். வீட்டில் பார்ட் டைம் ஜாப் செய்வதாகச் சொல்லி இருக்கின்றார்களாம்.

இனி நான் :

தன் குடும்பத்திற்காய் தன் உடலை விற்கும் பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன்(அப்படி சந்தித்த ஒரு பெண்ணின் சுவாரசியமான கதையை விரைவில் எழுதுகிறேன்). சில மாதங்களுக்கு முன்னால் ஒரு வாரப்பத்திரிக்கையில் ஆண் விபச்சாரர்களைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இது வேறுமாதிரி இருக்கிறது.

நல்ல வாளிப்பான பையன்களை தன் செக்ஸ் ஆசைக்குப் பயன்படுத்தும் உச்சி நெற்றியில் வகிடெடுத்து, குங்குமம் இட்டு, காலில் மிஞ்சி போட்டு தலையைக் குனிந்து நடக்கும் குடும்பப் பெண்களை பற்றி நினைக்கையில், அவர்களின் கணவன்கள் மீது சொல்லொண்ணா கோபம் வந்தது.

– உங்களின் அருமைக் குஞ்சாமணி

4 Responses to எரியும் ஆண்கள் – கற்பின் மறுபக்கம்

 1. Natarajan சொல்கிறார்:

  Yen sir, you know it is Mami ? or you are just mentioning it as Mami ? You know Mami means it will denote “One Particular Caste”. Why don’t you just put it as “One Lady”.

  • அனாதி சொல்கிறார்:

   மாமி என்றுச் சொன்னால் ஒரு ஜாதியைக் குறிக்கிறது என்று நீங்கள் வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம் நடராஜ். இவ்வார்த்தை இப்போது கல்யாணமான, குழந்தைகளைப் பெற்றவர்களைக் குறிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. – பஞ்சரு பலராமன்

 2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  AVARKALUM AASAI UDAYAVARKALTHAAN. KAAMAM ELLORUKKUM POTHU

 3. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  enna sir panrathu…..
  avanga hunband enna pannuvaru…
  Ungalukkuthan problem theriyum illa anna…pinna ean avangala thitareeenga….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: