அசோக் சவான் ராஜினாமா சரியா?

மகாராஸ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான், கார்கில் போர் வீரர்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில், தன் உறவினர்களுக்கு வீடு ஒதுக்கியதற்காகவும், வேண்டப்பட்டவர்களுக்கு விதிமுறைகளை மீறி வீடுகளை தந்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டார். அக்குற்றச்சாட்டுகளின் பேரில் அசோக் சவான் ராஜினாமா செய்தார்.  அரசியலில் தலைவராக இருப்பவர் தனக்கு உதவி செய்பவர்களுக்கு சில நன்மைகளைச் செய்து கொடுத்தால் தான் தொடர்ந்து அவர் தலைவராகவே இருக்க முடியும். இல்லையென்றால் நடுரோட்டில் நிற்க வேண்டியதுதான். ஆனால் அது இலைமறைக் காயாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் அதையெல்லாம் விடுத்து, பட்டவர்த்தனமாக அரசுக்கு பெரும் இழப்பை உண்டாக்கும் வகையிலும், பலருக்குச் சென்று சேரக்கூடிய பலன்களை, தன் பதவியைப் பயன்படுத்தி பிடுங்கி, தன் நன்மைக்கு உதவியருக்கு அசோக் சவான் வீடுகளை ஒதுக்கினார். அது டெலிவிஷனில் வெளியாகி, பெரிய விவாதங்களை உருவாக்கி, அதன் விளைவாக ராஜினாமா செய்திருக்கிறார். இனி அவர் மீது என்ன நடவடிக்கை வரும் என்பதையெல்லாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

இதே போன்ற குற்றச்சாட்டினை தெஹல்கா பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டிருக்கிறது. நேற்றைய இரவு கோஸ்வாமி டைம்ஸ் நவ்வில் பத்து மணி அளவில் பட்டயக் கிளப்பினார்.

இது தொடர்பான செய்தியை வீடியோவாக கீழே இருக்கும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளவும்.

http://www.timesnow.tv/videoshow/4359946.cms

– பஞ்சரு பலராமன்

One Response to அசோக் சவான் ராஜினாமா சரியா?

  1. anvarsha சொல்கிறார்:

    உரித்து தொங்க விட்டிருக்கிறார்கள். கொஞ்சமாவது வெட்கம், மானம் இருந்தால் இதில் குறிப்பிட்டிருப்பவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு தான் அதெல்லாம் இல்லையே. ஒன்று மட்டும் நிச்சயம். கருணாநிதி இப்போது தான் வினை விதைத்ததை அறுவடை செய்து கொண்டிருக்கிறார். அவர் காலத்திலேயே எல்லாம் அழிவதை பார்ப்பார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: