ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெர்சண்டேஜ் யார் யாருக்கு?

ஒரு காலத்தில் பத்திரிக்கையாளர்களிடம் நகைச்சுவை அரசியல்வாதியாக வலம் வந்த சுப்ரமண்யம் சுவாமி என்பவர் தான் இன்றைக்கு இந்திய மக்களின் ஆதர்ச நாயகனாக திகழ்கிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் போட்ட வழக்கு காரணமாய், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், பயனியர் டெய்லியும் வெளியிட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியது. இதுவரை உலகில் வேறு எங்குமே நடக்காத அளவுக்கு மிகப்பெரிய ஊழலை நடத்திய பெருமை ஒரு தமிழரையே சாரும் படி செய்த பெருமையையும் இந்த ஊழலுக்கே உண்டு.

தமிழக செய்தி தாள்களில் தினமணி மட்டுமே ஸ்பெக்டரம் ஊழல் பற்றிய செய்திகளை விரிவாக எழுதியது. ஜூனியர் விகடன் பட்டும் படாமல் செய்தியை வெளியிட்டது. டெலிவிஷன் சானல்களோ வாய்மூடி மவுனியாய் நிற்கின்றன.  இந்த மீடியா மவுனம் என்றைக்கோ வெகு கோரமாய் வெடிக்கப்போகிறது என்பது மட்டும் திண்ணம்.

ஜெயா டிவியில் வரும் கால பலனை எதிர்பார்த்து ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அது ஒரு பக்கம் இருந்தாலும்,  திரு சுப்ரமண்ய சுவாமியின் பேட்டிப் பார்க்க நேர்ந்தது.

அவரின் பேட்டியில் வெகு அசால்டாக 10% + 30% + 60% என்று பயங்கர சர வெடிகள் பல லட்சுமி வெடியாய் வெடித்தது. கேட்டுக் கொண்டிருந்த நமக்கு கிலி பிடித்தது. இப்படியெல்லாமா நடக்கும்? என்றெல்லாம் யோசிக்க வைத்தார் சுப்ரமண்யம் சுவாமி.

இது பற்றிய சில செய்திகளை கீழே இருக்கும் பதிவுகளில் படித்து விடுங்கள்.

http://janamejayan.wordpress.com/2010/11/17/dr-subramanian-swamy%E2%80%99s-interview-to-jaya-tv-on-2g-spectrum/

http://janamejayan.wordpress.com/2010/11/20/the-age-of-dr-subramanian-swamy-has-begun/

ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது அப்பட்டமாய் தெரிகிறது. இதுவரையில் ஊழலில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லும் முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை ஒன்றினையும் காணோம். சுப்ரீம் கோர்ட் தனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டே வருகிறது.  அதுபற்றி கொஞ்சம் கூட கவலையின்றி காங்கிரஸ் அரசு இருக்கிறது. நாடாளுமன்றம் இந்த ஊழலால் முடங்கிக் கிடக்கிறது. இந்த ஊழல் வெளிவரத்தானே நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை எதிர்க்கட்ட்சிகள் கோருகின்றன? அதை ஏன் காங்கிரஸ் அரசு அனுமதிக்க மறுக்கிறது?

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது திரு சுப்ரமண்யம் சுவாமி சொன்ன பெர்சண்டேஜ் என்பது உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை.

– விடுதலையும் சுதந்திரமும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: