ஹரியுடன் நான் – நல்ல ந(டு)வர்கள்

நமது பிளாக்கில் பஞ்சரு பலராமனின் ”ஹரியுடன் நான் திமிர்த்தனம்” என்ற பதிவைப் படித்து விட்டு வாரா வாரம் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டு. பாலா எழுதியது போல நடுவர்கள் நடந்து கொண்டாலும், பாடகர்களின் குறையினை சுட்டி, பாடுவதை மெருகேற்றி வந்ததை அறிந்தேன். ஆகையால் நடுவர்களின் மரியாதை இன்மை என்பது பற்றி பெரிதாக கருத வேண்டியதில்லை என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நேற்றைய நிகழ்ச்சியைக் கண்ட போது எனக்குள் தோன்றிய வெறுப்பு கொஞ்ச நஞ்சமல்ல. திறமையை விட அழகு முக்கியமானதாகிப் போனது.

இசையுலகின் முன்னே ஹரிஹரன், ஜேம்ஸ், சரத் மூவரும் ஆடை அவிழ்ந்து அம்மணமாய் நின்று கொண்டிருக்கின்றார்கள். இது போல வெட்கம் கெட்ட செயலை ஏன் செய்கின்றார்கள் இவர்கள் என்பதை வார்த்தையால் சொல்லவே நா கூசுகிறது. இப்பிளாக்கை ரசித்துப் படிப்பது எண்ணற்ற பெண்கள் என்பதால் அவ்வார்த்தைகளை எழுதவே கூசுகிறது. அந்தளவுக்கு கோபம் வருகிறது.

அயோக்கிய சிகாமணிகள் நீண்ட நாட்கள் வேஷம் போட முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியில் இம்மூவரின் நடத்தையை வைத்து அறிந்து கொள்ளலாம்.

லட்சுமி என்ற பாடகியின் பாடலைக் கேளுங்கள். இப்பாடலுக்கு இந்த நடுவர்கள் வழங்கிய மார்க்குகளையும் பாருங்கள். கீச்சுக் குரலில் கத்திய பெண்ணுக்கு ஏன் இவர்கள் இவ்வளவு அதிக மார்க்குகளை வழங்குகினார்கள் என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். எனக்கு வரும் கோபத்தில் மூவரையும் வார்த்தைகளால் நார் நாராய் கிழித்து தொங்க விட்டு விடுவேன். வார்த்தைகள் மிகக் கடுமையாய் வெளி வரத் துடித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரண ஆர்கெஸ்ட்ரா மேடைப்பாடகியின் தரத்தை விடவும் படு கேவலமாய் பாடிய லட்சுமிக்கு இவர்கள் ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?  திறமையை விட அந்தப் பெண்ணின் அழகு ந(டு)வர்கள் மூவரையும் கவர்ந்திழுத்திருக்கிறது. அவனவன் உயிரை விட்டு சாதகம் செய்து தன்னை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கையில் கழுதைக் குரலில் கத்திய லட்சுமிக்கு இந்த மூன்று ந(டு)வர்களும் ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் லட்சுமியின் அழகை விட வேறு எதைச் சொல்ல முடியும்?

நல்ல திறமைசாலிகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்ட முயலும் தயாரிப்பாளர் எண்ணத்தை இம்மூவரும் சொல்லி வைத்தாற்போல கேவலப்படுத்துகிறார்கள். பேசாமல் அந்தப் பெண்ணுக்கே முதல் பரிசை வழங்கி விடலாமே? ஏன் மற்ற திறமைசாலிகளை கேவலப்படுத்துகின்றீர்கள்?

ஹரியுடன் நான் படு கேவலமான இசையுலகத்தைக் கேவலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி.

சரி ஏன் அனாதி இந்தளவுக்கு அனாதி கோபப்பட என்ன காரணம் என்பதை நீங்களே கீழ்க்கண்ட இணைப்பை கிளிக்கி புரிந்து கொள்ளவும்.

நடுவர்கள் நன்றாகவே ந(டு) நிலைமையாய் நடந்து கொள்கிறார்கள். போங்கடா நீங்களும் உங்க நிகழ்ச்சியும்.

– அனாதி

 

 

 

 

 

One Response to ஹரியுடன் நான் – நல்ல ந(டு)வர்கள்

  1. […] பதிவு 5 (ஹரியுடன் நான் நல்ல ந(டு)வர்கள்) […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: