கேளிக்கை சார்ந்தவை அதிகம் விரும்பப்படுவது ஏன்?

என்னுடைய நண்பர் ஒருவர் அரசியல்,சமூகம் சார்ந்த எந்த ஒரு விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாமல், எப்பொழுதும் கேளிக்கை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். செய்தி சேனல்களின் பக்கமே அவர் திரும்புவதில்லை, சதா சன் மியூசிக், எஸ்.எஸ் மியூசிக் போன்ற சேனல்களே அவர் பார்த்து வருகிறார். அவரை போலவே என் நண்பர்கள் பலரும் சினிமா சார்ந்த விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இவரை போன்ற மனிதர்களுக்கு தங்கள் அறிவுரை என்ன?-சீனிவாசன்.

 

சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

”அண்டமா முனிவரெல்லாம் அடங்கினார் யோனிக்குள்ளே” என்ற பழமொழியினை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் அதிகம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை விரும்பக்காரணம் அவர்களின் பாலியல் தேவைகளுக்கான வடிகாலாகவும், தூண்டுகோலாகவும் அவை இருப்பதால் தான். பாலியல் நம் தமிழ் சமூகத்தில் மறைமுக பொருளாய் இருக்கிறது. காரணம் ஒழுங்கமைந்த வாழ்வியல் நெறிமுறைகள் பாலியல் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாழ்க்கை முறைதான் உலக மாந்தருக்கு நன்மை பயக்கும். ஆனால் சுயச்சார்புடையவர்கள் இம்மாதிரி கட்டுப்பாடுகளால் வெறுப்படைவர். இவர்களால் மனித சமூக ஒழுங்கு முறை வாழ்க்கைக்கு சிறிய அச்சுறுத்தல் உண்டாகும்.

செய்திகளில் விருப்பமின்மை என்பது அவர் விட்டேத்தியான போக்குடையவர் என்று காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒரு அரசியல்வாதியால் ஜன நாயகம் என்ற பெயரால் ஏமாற்றும் மன்னராட்சியினால் அவன் சூழப்பட்டிருக்கிறான். அதுவுமின்றி அவனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பிறரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் கட்டுப்படுத்தப்பட்ட பத்திரிக்கை சுதந்திரத்தில் வெளிவரும் செய்திகளை அவன் நிச்சயம் கவனித்தே ஆக வேண்டும். அன்றாட நிகழ்வுகளுக்கேற்ப அவரது வாழ்க்கை முறை அமைக்கப்படுவதை அறிந்தும் கண்டு கொள்ளாதவாறு இருக்கிறார் என்றால், ரோட்டோரத்தில் உண்டு, உறங்கி, உறவு கொள்ளும் மனிதனின் மனப்பான்மையை உங்களின் நண்பர் பெற்றிருக்கிறார் என்று அவதானிக்கலாம். சாலையோரம் வசிக்கும் மனிதனுக்கு செய்தியும் தேவையில்லை, பிற எது மீதும் கவனமும் இருக்காது. ஆனால் தொடை தெரியும் சினிமா போஸ்டரை உற்றுப் பார்க்கும் ஆர்வமிருக்கும். அதைப் போலத்தான் மனிதர்களின் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களால் எவருக்கும் பிரயோசனமே கிடையாது என்பதை விட உபத்திரவம் அதிகம் என்றும் சொல்லலாம். ஏன் இவ்வாறு கடுமையாகச் சொல்கிறேன் என்றால் அழகியலைச் சார்ந்து வாழ்க்கை நடத்தும் எவரும் மன சந்தோஷத்துடன் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. இவர்களைப் போன்றோர் முதலாளிகளாய் இருந்தால், எண்ணிப் பார்க்கவே கொடூரமாய் இருக்கிறது.

இன்றைய உலகம் செயற்கைத் தன்மை வாய்ந்த பொருட்களின் மீதான ஈர்ப்பை, வாழ்வியலின் முக்கிய சந்தோஷமாகக் கருதுகின்றன. விளைவாக மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகின்றது. இவையெல்லாம் ஒரு வாழ்க்கை முறையே என்று வியாபாரிகள் மக்களுக்கு போதித்து வருகின்றனர். இம்மாயையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

இது போல நடப்பது காலத்தின் கட்டாயம். மனிதர்கள் விலங்கு மனப்பான்மையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களின் நண்பர்களின் செய்கை நமக்குச் சொல்லும் செய்தி.

உங்கள் நண்பர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை : வாழும் வரை பிறருக்கு உபயோகமாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள் என்பதுதான். ஏனென்றால் நாம் பிறரோடு வாழ்கிறோம் என்பதால்.

– அனாதி

 

6 Responses to கேளிக்கை சார்ந்தவை அதிகம் விரும்பப்படுவது ஏன்?

 1. Ramesh Jayachandiran சொல்கிறார்:

  Anaadhi sir,

  Super advice:)

 2. சீனிவாசன் சொல்கிறார்:

  எனது கேள்விக்கு பதிலளித்தமைக்கு நன்றி நண்பரே- சீனிவாசன்

 3. Thiru சொல்கிறார்:

  “செய்திகளில் விருப்பமின்மை என்பது அவர் விட்டேத்தியான போக்குடையவர் என்று காட்டுகிறது”
  -செய்தியைத் தரும் ஊடகத்தின் நம்பகத் தன்மையும் இதில் கணக்கில் கொள்ளப் படவேண்டும்.இன்று எந்த ஒரு செய்தித் தாளும் / தொலைக்காட்சியும் உண்மையான செய்தியை மக்களுக்கு அளிப்பதில்லை. ஊடகங்களின் மீதான மதிப்பும் நம்பகத் தன்மையும் முற்றாக அழிந்து விட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் ஏனைய ஊடகங்களும் மக்களை கேனையனாக நினைப்பது தான் காரணம்.ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒவ்வொரு கட்சி சார்புடையது. இப்படி இருக்க செய்திகளைக் கேட்டு என்ன ஆகப் போகிறது ? Blog – மூலமாகத்தான் பெரும்பாலும் உண்மை செய்தி அறிந்து கொள்ள முடிகிறது. அதிலும் சுய விருப்பு வெறுப்புகளை வாசகர் மீது திணிக்கும் bloggers இருக்கவே செய்கிறார்கள்.அநாதி blog அப்படி ஆகாதவரை சந்தோசம்.

  • அனாதி சொல்கிறார்:

   திரு அருமையான கவுண்டர் கொடுத்திருக்கின்றீர்கள். உங்களின் வாதத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு இந்தச் செய்திகள் அவசியம் தேவையல்லவா? அதைத்தான் சுட்டிக்காட்டினேன். அனாதி என்றைக்கும் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் தரவே தராது. அனாதியின் முகவரி : வெளிச்சத்தில் என்று வைத்திருக்கிறோம். – அனாதி

   • Thiru சொல்கிறார்:

    அனாதி,
    இது தொலைக்காட்சியில் மட்டுமன்று, திரைப்படம், செய்தித்தாள், என மக்களிடம் செல்லும் அனைத்து ஊடகங்களின் நிலையும் இதுதான்.
    கேட்டால் இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று சப்பைக்கட்டு வேறு. நடுநிலையாக நின்று “உள்ளதை உள்ளபடி சொல்லும் மாயக்கண்ணாடி” போன்றதொரு ஊடகம் இல்லை. எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும், அதை திரித்து, சாயம் பூசி தத்தமது கருத்தை ஏற்றி “Flash News” போடுவதிலேயே செய்தி தொலைக்காட்சிகளின் தொழில். செய்தித் தாள்களின் நிலை ஒன்றும் பெரிதாக இல்லை, அங்கேயும் இதேதான். இணையம் வாயிலாக அறியும் விஷயங்கள் மட்டுமே ஓரளவுக்கு நம்பகத் தன்மையுடன் (!) உள்ளது.
    //”அனாதி என்றைக்கும் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் தரவே தராது”// மிகவும் நம்புகிறேன்.

    “வெளிச்சத்தில்” – எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டு காட்டுவது தெரிந்த ஒன்றே. அவ்வாறே தொடர வேண்டும் என்பது அவா.

    நன்றியுடன்,
    திரு.

    • அனாதி சொல்கிறார்:

     சமூக பிரக்ஞையின்பால் விளைந்த எண்ணத்தின் காரணமாய் வெளிச்சத்தில் என்று பெயரிட்டோம். அனாதி என்றால் என்றும் உள்ளவன் என்றும் அர்த்தம் வரும். எங்களுக்கு தெரிந்த வரை, சாடலை விட, பிரச்சினையின் கேரக்டராக மாறி அதை வெளிக்கொணறுவது என்பது எழுத்தில் ஒரு வகை. அதைத்தான் பிற அனாதி நண்பர்களும் செய்து வருகின்றார்கள். உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. எங்களை சரியாகக் கவனித்திருக்கின்றீர்கள் என்ற வகையில் ஒரு ஸ்பெஷல் நன்றியும் கூட. – அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: