தொட்டுக்கொள்ள 24.11.2010

முதல்வர் கருணா நிதியும், முன்னாள் மந்திரி ராஜாவும் ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் அனைத்தும் விதிப்படிதான் நடந்தது என்கிறார்கள். ஆனால் பார்லிமெண்ட் கூட்டுக்குழு விசாரணையை வேண்டாமென்கின்றார்கள். ஏனோ??  கேக்குறவன் கேனப்பயல்கள் என்றால் கேழ்வரகில் கலர் டிவி வருதுன்னு சொல்லுவாங்க போல.

நயன் தாரா / பிரபுதேவா – மூன்றாவது சம்மனும் அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.  அதற்குள் என்னென்னவோ நடந்து விடும். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதா? இந்து மதக் கோட்பாடுகளை முன்னிறுத்தும் கட்சிகளும், அமைப்புகளும் இந்த விஷயத்தில் கண்டு கொள்ளாதது ஏனோ???

பாலசந்தர் ரஜினியிடம் நீ இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்றுச் சொன்னார் என்கிறது பத்திரிக்கைச் செய்தி. எதில் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. எந்திரன் எந்திரிக்காமல் குப்புற விழுந்தது. பாலச்சந்தருக்கு ரஜினி மேல் என்ன கோபமோ.

கல்மாடி மீது 450 கோடி ரூபாய் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இன்னும் என்னென்ன கிளம்புமோ? காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சியாய் மாறி சிரிப்பாய் சிரிக்கிறது.

சாய்பாபாவிடம் ஆசீர்வாதம் பெறுகிறார் பெரியார், அண்ணா வழியில் வருகின்ற எதிர்கால முதலமைச்சர் திரு ஸ்டாலின். நாத்திகம் ஆத்தீகமாயிற்று. இனி ஆரிய எதிர்ப்பு எடுபடாது. தலித் பிரச்சினை வேண்டுமானால் வேலைக்காகலாம்.

பிரசார் பாரதி மீது ஊழல் குற்றச்சாட்டு. ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்திருக்கிறார்கள். காங்கிரஸின் அடுத்த ஊழல் காட்சிகள் ஆரம்பம்.

நாடாளுமன்றத்தில் இன்னும் பிரச்சினை தீரவில்லை. ஸ்பெக்டரம் விசாரணை நிச்சயம் முடக்கப்படும். க்வாட்ரோச்சி வழக்கு போல, இதுவும் காணாமலே போய் விடும். காங்கிரஸ் இந்தியாவை அடிக்கும் கொள்ளைக்கு எல்லையே இல்லை என்றாகி விட்டது.

என் பெயர் மீனாட்சி விஜய் டிவி தொடரில் நடிக்கும் பழ கருப்பையா, துக்ளக்கில் எழுதுவதை நிறுத்தி விட்டார். காசே தான் கடவுளடா. அது கடவுளுக்கும் பொருந்துமடா என்கிறார் போலும். மீனாட்சியை கடத்தி விட்டான் வில்லன். தொங்கு மீசை ஹீரோ மனசு வலிக்கிறது என்று பேசுகிறார். மிஸ்டர் ஜெரால்டு உங்களுக்கு டைரக்‌ஷன் தெரியவில்லை என்றால் தெரிந்த ஆட்களிடம் கொடுத்து விடுங்களேன். அழகான கதையை ஏன் இப்படிக் கொத்துக்கறி ஆக்கி வருகின்றீர்கள்???

விஜய் டிவி சிங்கர்ஸ்ஸில் வரும் காம்பியருக்கு “ முக்கி முனகி” பட்டத்தினை அனாதி நண்பர்கள் குழாம் வழங்கிச் சிறப்பிக்கிறது.

மன்மதன் அம்பு படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சொன்னது. இப்படம் ஒரு கப்பலில் சூட் செய்யப்படுகிறது. திரிஷாவைக் காதலிப்பது கமலா? மாதவனா என்பது தான் ஒன்லைன் கதையாம். திரிஷாவைப் பார்த்தாலே வெற்றுச் சுவர் தான் நினைவுக்கு வருகிறது. கிழவியைக் கமல் தான் காதலிப்பார். இதில் என்ன சஸ்பென்ஸ் இருக்கிறது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் கதையின் சஸ்பென்ஸை உடைத்து விட்டார்.  கமல் ஜோக்கராகி விட்டார்.

இப்போதைக்கு இது போதும். நாளை குஞ்சாமணியின் குட்டியுடன் கும்மாளம் பதிவு வெளி வருகிறது. வாசகர்கள் தவறாமல் படித்து விடவும்.

– அனாதி

2 Responses to தொட்டுக்கொள்ள 24.11.2010

 1. Ramesh J சொல்கிறார்:

  Illa anaadhi anna,

  Kamal wife sangeetha,Detective….(like kunju sir):P
  Madhavan going to marry trisha a actresss…..He goes with kamal for help to marry trisha……
  Sangeetha doubted kamal….
  Madhavan cleared the doubt….
  This may the story

  • அனாதி சொல்கிறார்:

   கதை அப்படியா போகுது??? அண்டமாமுனிவரெல்லாம் அடங்கினான் யோனிக்குள்ளேன்னு சும்மாவா சொன்னாங்க – அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: