மன்மோகன் சிங் – நீதி பரிபாலனை

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பிரதமர், ‘தவறு எதுவும் நடக்கவில்லை என்று ராசாவே கூறிவிட்டார். ஆகையால் தவறு நடக்கவில்லை’ என்று தீர்ப்பு வழங்கி விட்டார். குற்றம் சாட்டப்பட்டவரின் சாட்சியம், தீர்ப்பாக ஏற்கக்கூடிய புரட்சியைச் செய்து காட்டியிருக்கிறார் மன்மோகன் சிங். இதே ‘ நீதி’யை நீதிமன்றத்தில் கடைப் பிடித்தால், வழக்குகளின் தேக்கம் என்பது மறைந்தே போய் விடும். ஒரு நிமிஷத்திற்கு ஒரு வழக்கு என்ற விகிதத்தில், வழக்குகளை நடத்தி, ஒரே மாதத்தில் எல்லா வழக்குகளையும் பைசல் செய்து விடலாம். நேர்மையான பிரதமர் கண்டு பிடித்திருக்கிற நீதிபரிபாலன முறை இது !

சுப்ரீம் கோர்ட்டில் என்ன பதில் சொல்லலாம் என்று ஸி.பி.ஐயும், அமலாக்கப் பிரிவும், ராசாவின் வக்கீலுடன் கலந்தாலோசனை நடத்துகிற கேவலத்தையும் இந்த நாடு பார்த்தாகி விட்டது. குற்றவாளியுடன் கலந்தாலோசித்து, ப்ராஸிக்யூஷன் தனது வழக்கைத் தயாரிக்கிற வினோதம், உலகில் வேறு எங்கும் நடக்காது. இந்தக் கூத்திற்கு தலைமை தாங்குவது பிரதமர் மன்மோகன் சிங். அவர் நேர்மையாளர். நேர்மையே உன் கதி இதுதானா !

சோவின் இந்த வார துக்ளக்கின் தலையங்கத்திலிருந்து. நன்றி துக்ளக்.

– டைப்படித்தவர் : விடுதலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: