வெங்காய சாம்பாரும் வெடிமுத்துவும்

வெடி முத்துவுக்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகால அனுபவமிருந்தது. அவர் வைக்கும் வெடி ஊசிப் பட்டாசு சத்தத்தை விட மெதுவாகத்தான் வெடிக்கும். ஆனாலும் வெடி வைக்கும் போது தானும் சேர்ந்து வெடிப்பது போல சத்தம் போடுவார்.

பாருங்க… பாருங்க.. அணுகுண்டு மாதிரி இருக்குல்லே என்று எக்காளமிடுவார். அவரைச் சுற்றி இருக்கும் பலரும் ஆமாம் ஆமாம் என்று தலையை சாரி சாரி… ஆட்டி வைப்பார்கள். ஆனால் கேனப்பயலேன்னு சொல்லிகிட்டு சிரிப்பார்கள். பாரு பாரு என் பிரண்டுகள் எல்லாம் சொல்லிட்டாங்க.. வெடி அணுகுண்டுதான்னு என்று குதிப்பார்.

இவரின் வெடிச்சத்தம் ஒண்ணாவது மீட்டரு தூரத்துக்கு மேலே கேட்காது. அந்த ஒண்ணாவது மீட்டருக்கு வெடிமுத்து மேல கோவம். இருக்கட்டும் இருக்கட்டும் அவர் வைக்கிற வெடி, என்னிக்காவது சத்தமா வெடிச்சி இரண்டாவது மீட்டருக்கு கேக்கட்டும். அப்போதாவது வெடிமுத்துவைப் பத்தி பெருமை பேசலாம்னு நினைச்சிக்கிடுச்சு.

இதெல்லாம் தெரியாமல், வெடி முத்து தான் வெடிக்கிறது அணுகுண்டுன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சாரு. இந்தச் சமயத்துல தான் பக்கத்து ஊரு திருவிழா வந்தது. இந்த வெடிமுத்துவின் அணுகுண்டு புரளியைக் கேட்டுக் கேட்டு காது புளிச்ச ஒரு பிரண்டு, வெடிமுத்து சூத்துல ஆப்பைச் சொருகனும்டான்னு நெனச்சுக்கிட்டு ஒரு காரியத்தை செய்தார்.

இங்க, ஒரு வெட்டு : வெடிமுத்துவுக்கு தன் உடம்பிலேயே ரொம்பவும் பிடித்தது அவரின் குண்டிதானாம். பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.

பாருங்க, இந்தச் சிறுகதையை எழுதும் என்னைக் கேட்காமல் குடிகாரன் வேறு இடையில் வந்து ஏதோ சொல்லனும்னு நினைக்கிறான். அடேய், கொஞ்ச நேரம் நில்லு, கதைய முடிச்சுட்டு வருகிறேன், பின்னர் நீ சொல்ல வந்ததைச் சொல்லு, எழுதிப்புடுவோம்னேன். சீக்கிரம்டான்னு ஜோலி செய்யறப்ப குட்டி சொல்றா மாதிரி சொல்லிட்டு நிக்கிறான்.

அந்த பிரண்டு பக்கத்து ஊரு பஞ்சாயத்துக்காரவுககிட்டே, இப்படி இப்படி எங்க ஊருல ஒரு ஆளு இருக்காரு. அவரு வெடி போட்டாருன்னா, பின்லேடனே பிச்சிக்கிட்டு ஓடுவான். ஒபாமாவோ குய்யோ குய்யோன்னு ஓடியோ போயிடுவாறுன்னான். அட, இது ஏதுடா நமக்குத் தெரியாத ஒரு வெடிப்பய இங்கன இருக்கானோன்னு நினைச்சுக்கிட்டு, இந்தாப்பா அவரை வந்து என்னைப் பாக்கச் சொல்லு, இந்த வாட்டி அவரை திருவிழாவுக்கு வெடியப் போடச் சொல்வோம்னாரு அந்தப் பஞ்சாயத்துக்காரரு. பிரண்டுக்கு பிச்சிக்கிட்டு சிரிப்பு வந்துச்சு. பாவம் வெடிமுத்து சூத்து, பஞ்சாப் பறக்கபோவுதுன்னு நெனச்சி நெனச்சி சிரிப்பா சிரிக்கிறான். இது ஏதுடா காத்துக் கருப்பு புடிச்சிருச்சோன்னு பொண்டாட்டி கவலையாப் படுறா.

இதுல இன்னொரு மேட்டரு இருக்கு. இந்தப் பஞ்சாயத்துக்காரவுக இருக்காகளே, அவருக்கு பரங்கிக்காய்னா ரொம்பவும் இஸ்டமாம். அவரு வீட்டுல பறங்கிக் காயா கிடக்குமாம். ஊருல பேசிக் கிட்டத உங்களுக்குச் சொல்றேன்.

சரி, சரி கதையைக் கேளுங்க. வெடிமுத்துவை பக்கத்து ஊருல வெடி போட அழைக்கிறாங்கன்னு சொன்னவுடனே வீட்டுச் சுவத்துல பிரோகிராம்னு பக்கத்து ஊருக்கு வெடி போடப்போறேன்னு எழுதி வச்சாரு. இவரு பிசியா இருக்காருன்னு ஊருக்கே தெரியனுமாம். ஊருன்னா என்னாங்கிறீங்க. பக்கத்து வீட்டுல இப்போவோ அப்பவோன்னு புட்டுக்கிட இருக்கும் கிழவி ஒருத்தியும், எதுத்தாப்புல இருக்கிற புரளி பேசுறவனும் மொத்தமாய் நாலு பேரு மட்டுமே இருக்கிறதைதான் ஊருன்னு சொல்வாங்க.

வெடி போட கிளம்பினாரு வெடிமுத்து. அந்த ஊரு பய மக்காளுக்கு ஒரு வழக்கம். எவனாவது ஆப்ப சேப்பையா மாட்டுனாவன்னா, பெரிய சவுக்கு கட்டயை கொண்டாந்து பின்னாடி சொருகி விட்டுடுவானுங்க. ஏன்னா அந்தப் பயலுகளுக்கு சொருகுறதுன்னா ரொம்ப இஸ்டம்.

இவரு போய் சாமி தூக்கி ஊர்வலம் வாரப்போ வெடியைப் போட, சத்தம் ஏதும் கேக்காம, வேட்டு போடு, வேட்டுப் போடுன்னு கத்துறானுவ. இவரோ அணுகுண்டே வெடிச்சிருச்சுன்னு குதிக்க, பஞ்சாயத்துகாரருக்கு வேட்டியில மூத்திரம் போயிடுச்சு. வச்சானே வெடிமுத்து நமக்கு ஆப்புன்னு நினைச்சிக்கிட்டு ஓடினாரு ஓடினாரு வேளாங்கண்ணி வரைக்கும் ஓடினாரு.

ஆஹா, அணுகுண்டை வெடிச்சிட்டோம்னு குதியோ குதின்னு குதிச்சிக்கிட்டு இருந்த வெடிமுத்துவை பக்கத்து ஊரு பயலுவ நேக்கா பிடிச்சு தூக்க, வெடிமுத்து சந்தோசத்துல ஆஹா ஆஹா, நம்மைத் தூக்கி கொண்டாடுறாங்கன்னு நினைச்சு, சந்தோஷத்துல திளைக்க, காலை விரிச்சுப் பிடிச்சு தூக்குன பயலுகளுல ஒருத்தன் வசமாச் சொருகுனான் பாருங்க…..

கதை இத்தோட முடிஞ்சிடுச்சு.

இதுவரைக்கும் கையில பிடிச்சிக்கிட்டு நின்ன குடிகாரன் சொன்னதை இப்போ எழுதுறேன்.

”நாய் எங்கே போனாலும் நக்கித்தானேடா குஞ்சு, தண்ணி குடிக்கும்னான் ”

போடாங், இதைச் சொல்லவா இத்தனை நேரமா கையில பிடிச்சிக்கிட்டு நின்னேன்னு கேட்டுட்டு இப்போ கதையைப் படிச்ச உங்க கிட்டே கேக்குறேன்.

இந்தச் சிறுகதை பத்தாய்ய்க்கும் மேலே இருக்குல்லே. உடனே டப்ளின்னோ, குப்ளின்னோவுக்கு அனுப்பி அவார்டு வாங்கித் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கதையைப் பிடித்தவர்கள் : இந்த அக்கவுண்டுக்கு பத்துக் கோடி தலைக்கு அனுப்பி வைக்கவும்.

– சிறுகதை படைப்பு : உங்களின் அருமைக் குஞ்சாமணி

சிறுகுறிப்பு : இந்தக் கதையில ஒரு இக்கு இருக்கு. தெரிஞ்சவுங்க தனியா மெயில் அனுப்பவும்.

 

5 Responses to வெங்காய சாம்பாரும் வெடிமுத்துவும்

 1. ram சொல்கிறார்:

  ……….ok, yes hay featival…but wht n whr is tht “ikku”.??? pls explain

 2. ram சொல்கிறார்:

  குஞ்சு,
  வெடிமுத்து-Charu?
  பக்கத்து ஊரு- kerala? இவை இரண்டும் சரி என்றல்
  திருவிழா- hay festival- தான் then, அதென்ன இக்கு விளக்கவும் !?

 3. pondumani சொல்கிறார்:

  பாரு கே திருவிழாவுக்கு ( எனக்கு ஹே சொல்ல வராது ) போனதை சொல்றிங்க

 4. Ramesh J சொல்கிறார்:

  குஞ்சாமணி anna,

  Promise anth IKKU puriyala…

  Naan romba chinna paiyan.. enakku theriyavaikaudatha…

  Pleaseee

  • அனாதி சொல்கிறார்:

   அட போங்க ரமேஷ்… இதென்ன சரியான லொள்ளா தெரியுதே… போட்டு வாங்காதீங்கோ… அவ்வ்வ்வ்வ்… உங்கள் குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: