வசந்தி ஸ்டான்லி – சவுக்கு இணையதளம்

வசந்தி ஸ்டான்லி மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் ராஜ்ய சபா எம்பியாக இருப்பவர். இவர் மீது சவுக்கு இணையதளம் பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது.

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=138:2010-10-26-02-50-53&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

இவர் மீது வங்கிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டு பதிவாகி, ஜாமீனில் வெளிவரும் போது வழங்கிய சொத்துக்கள் அனைத்தும் போலியானவை என்று ஆதாரங்களை வெளியிட்டு, நீதிமன்றத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டினைச் சுமத்தி இருந்தது அந்த இணையதளம். இதுபற்றிய எந்த வித செய்திகளும் பிரபல தமிழ் பத்திரிக்கைகளில் வெளிவரவில்லை. ஆளும் கட்சி எம்பி மீது எழுப்பட்டிருக்கும் நீதிமன்ற ஏமாற்றுக் குற்றச்சாட்டினை சிறு செய்தியாகக் கூட வெளியிடாமல் தமிழக பத்திரிக்கையாளர்கள் தங்களின் பத்திரிக்கா தர்மத்தைப் பாதுகாத்தார்கள்.

இந்த நிலையில் நவம்பர் 12ம் தேதியில் வெளியான டெக்கான் கிரானிக்கள் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டது. அச்செய்தியை கீழ் வரும் இணைப்பில் படிக்கவும்.

http://www.deccanchronicle.com/chennai/%E2%80%98tainted%E2%80%99-mp-offers-new-sureties-718

இந்த எம்பி புதிய சொத்துக்களை ஜாமீன் சொத்தாகக் கொடுத்திருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருந்தது. நீதிமன்றத்தினை ஏமாற்றிய குற்றச்சாட்டினை பதிவு செய்யாமல் ஏன் புதிய சொத்துக்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது என்பது புரியவில்லை.

இணையதளத்தில் ராஜ்ய சபா எம்பி கொடுத்திருக்கும் சொத்துக்கள் அனைத்தும் போலியானவை என்று ஆதாரபூர்வமாக செய்தி வெளியிடும் வரை அமைதியாய் இருந்திருக்கிறார். ஆதாரங்களை வெளியிட்ட பிறகு வேறு சொத்துக்களை கொடுக்கிறார். இது சட்டத்தினை ஏமாற்றும் செயல் இல்லையா? செய்தி வெளியானவுடன் போலிச் சொத்துக்களுக்குப் பதில் வேறு சொத்துக்களை நீதிமன்றம் எப்படி ஏற்றுக் கொண்டது? எம்பி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? போலிச் சொத்துக்களை கொடுத்தவர்கள் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா? ஏன் எடுக்கவில்லை?

சட்டமே நீ கடவுளுக்கு நிகரானவன் என்றுச் சொல்வார்களே ? இது தான் நீ நீதி வழங்கும் லட்சணமா? இது தான் நீ மக்களுக்கு வழங்கும் பாதுகாப்பா? அதிகார வர்க்கங்களின் அடிமையா நீ?

– சுதந்திரமும் விடுதலையும்

One Response to வசந்தி ஸ்டான்லி – சவுக்கு இணையதளம்

 1. Ramesh J சொல்கிறார்:

  Sir,

  Nowadays justice are also buyable……
  Only thing is god the unknown person shud give punishment for the acquiste…..
  Eventhough the justice is happened the money(the powerfull weapon) will take care of the acquiste…

  I remember the conversation between M.R.RADHA and englishman in jail…

  How lawyers can become judge after lieing for many years……..

  Like china our government shud be strict….or we the public shud create a government like china….

  The party leader shud be punished for this shame activity………

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: