நந்தலாலா – சாரு நிவேதிதாவின் முகத்திரை கிழிகிறது

நவம்பர் 28, 2010

எந்த வித சமரசமும் இல்லாமல் எழுதுபவர் என்று தன்னைத் தானே சொரிந்து கொண்டு, எழுத்தாளர் என்று கூவிக் கொண்டிருக்கும் சாருவைப் பற்றி கீழே இருக்கும் பதிவரின் பதிவை படித்து விடுங்கள்.

சாருவின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது

கிகிஜூரோ படத்தினை ஆன்லைனில் பார்க்க விருப்பமா? இதோ கீழே கிளிக் செய்யவும்.

கிகிஜூரோ

– பஞ்சரு பலராமன்.


இந்தியாவை ஆண்டியாக்கிய ஆண்டிப்பட்டி ராஜா

நவம்பர் 28, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய திரு வைகோவின் பேட்டியைக் கீழே இருக்கும் இணைப்பில் பார்க்கலாம். நன்றி ஜெயா டிவி.

வைகோவின் பேட்டி

– விடுதலை


ஸ்பெக்ட்ரம் ஊழல் – தா பாண்டியன் பேட்டி

நவம்பர் 28, 2010

கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கோடி ரூபாயைக் கொள்ளையடித்து, தமிழனின் பெருமையை உலகறியச் செய்த திமுகவின் ராசா அண்ட் கம்பெனியின் ஊழலைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் அவர்களின் பேட்டியை கீழே இருக்கும் தொடர்பில் காணலாம். வித்தியாசமான பார்வை. அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய பேட்டி. ஆனால் இன்றைக்கும் திமுகவினர் ஒன்றுமே நடக்காதது போல வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகிலே மிக கொடுமையான ஊழல், தேசத்துரோகம் இந்த ஊழல்.

தா.பாண்டியனின் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய விரிவான பேட்டி

– விடுதலை

 


ஹரியுடன் நான் – நல்ல ந(டு)வர்கள்

நவம்பர் 27, 2010

நமது பிளாக்கில் பஞ்சரு பலராமனின் ”ஹரியுடன் நான் திமிர்த்தனம்” என்ற பதிவைப் படித்து விட்டு வாரா வாரம் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதுண்டு. பாலா எழுதியது போல நடுவர்கள் நடந்து கொண்டாலும், பாடகர்களின் குறையினை சுட்டி, பாடுவதை மெருகேற்றி வந்ததை அறிந்தேன். ஆகையால் நடுவர்களின் மரியாதை இன்மை என்பது பற்றி பெரிதாக கருத வேண்டியதில்லை என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நேற்றைய நிகழ்ச்சியைக் கண்ட போது எனக்குள் தோன்றிய வெறுப்பு கொஞ்ச நஞ்சமல்ல. திறமையை விட அழகு முக்கியமானதாகிப் போனது.

இசையுலகின் முன்னே ஹரிஹரன், ஜேம்ஸ், சரத் மூவரும் ஆடை அவிழ்ந்து அம்மணமாய் நின்று கொண்டிருக்கின்றார்கள். இது போல வெட்கம் கெட்ட செயலை ஏன் செய்கின்றார்கள் இவர்கள் என்பதை வார்த்தையால் சொல்லவே நா கூசுகிறது. இப்பிளாக்கை ரசித்துப் படிப்பது எண்ணற்ற பெண்கள் என்பதால் அவ்வார்த்தைகளை எழுதவே கூசுகிறது. அந்தளவுக்கு கோபம் வருகிறது.

அயோக்கிய சிகாமணிகள் நீண்ட நாட்கள் வேஷம் போட முடியாது என்பதை இந்த நிகழ்ச்சியில் இம்மூவரின் நடத்தையை வைத்து அறிந்து கொள்ளலாம்.

லட்சுமி என்ற பாடகியின் பாடலைக் கேளுங்கள். இப்பாடலுக்கு இந்த நடுவர்கள் வழங்கிய மார்க்குகளையும் பாருங்கள். கீச்சுக் குரலில் கத்திய பெண்ணுக்கு ஏன் இவர்கள் இவ்வளவு அதிக மார்க்குகளை வழங்குகினார்கள் என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். எனக்கு வரும் கோபத்தில் மூவரையும் வார்த்தைகளால் நார் நாராய் கிழித்து தொங்க விட்டு விடுவேன். வார்த்தைகள் மிகக் கடுமையாய் வெளி வரத் துடித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரண ஆர்கெஸ்ட்ரா மேடைப்பாடகியின் தரத்தை விடவும் படு கேவலமாய் பாடிய லட்சுமிக்கு இவர்கள் ஏன் இந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்?  திறமையை விட அந்தப் பெண்ணின் அழகு ந(டு)வர்கள் மூவரையும் கவர்ந்திழுத்திருக்கிறது. அவனவன் உயிரை விட்டு சாதகம் செய்து தன்னை நிரூபிக்க முயன்று கொண்டிருக்கையில் கழுதைக் குரலில் கத்திய லட்சுமிக்கு இந்த மூன்று ந(டு)வர்களும் ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் லட்சுமியின் அழகை விட வேறு எதைச் சொல்ல முடியும்?

நல்ல திறமைசாலிகளை வெளி உலகுக்கு அடையாளம் காட்ட முயலும் தயாரிப்பாளர் எண்ணத்தை இம்மூவரும் சொல்லி வைத்தாற்போல கேவலப்படுத்துகிறார்கள். பேசாமல் அந்தப் பெண்ணுக்கே முதல் பரிசை வழங்கி விடலாமே? ஏன் மற்ற திறமைசாலிகளை கேவலப்படுத்துகின்றீர்கள்?

ஹரியுடன் நான் படு கேவலமான இசையுலகத்தைக் கேவலப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி.

சரி ஏன் அனாதி இந்தளவுக்கு அனாதி கோபப்பட என்ன காரணம் என்பதை நீங்களே கீழ்க்கண்ட இணைப்பை கிளிக்கி புரிந்து கொள்ளவும்.

நடுவர்கள் நன்றாகவே ந(டு) நிலைமையாய் நடந்து கொள்கிறார்கள். போங்கடா நீங்களும் உங்க நிகழ்ச்சியும்.

– அனாதி

 

 

 

 

 


கேளிக்கை சார்ந்தவை அதிகம் விரும்பப்படுவது ஏன்?

நவம்பர் 26, 2010

என்னுடைய நண்பர் ஒருவர் அரசியல்,சமூகம் சார்ந்த எந்த ஒரு விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லாமல், எப்பொழுதும் கேளிக்கை சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். செய்தி சேனல்களின் பக்கமே அவர் திரும்புவதில்லை, சதா சன் மியூசிக், எஸ்.எஸ் மியூசிக் போன்ற சேனல்களே அவர் பார்த்து வருகிறார். அவரை போலவே என் நண்பர்கள் பலரும் சினிமா சார்ந்த விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இவரை போன்ற மனிதர்களுக்கு தங்கள் அறிவுரை என்ன?-சீனிவாசன்.

 

சீனிவாசன் அவர்களுக்கு நன்றி.

”அண்டமா முனிவரெல்லாம் அடங்கினார் யோனிக்குள்ளே” என்ற பழமொழியினை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் அதிகம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளை விரும்பக்காரணம் அவர்களின் பாலியல் தேவைகளுக்கான வடிகாலாகவும், தூண்டுகோலாகவும் அவை இருப்பதால் தான். பாலியல் நம் தமிழ் சமூகத்தில் மறைமுக பொருளாய் இருக்கிறது. காரணம் ஒழுங்கமைந்த வாழ்வியல் நெறிமுறைகள் பாலியல் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாழ்க்கை முறைதான் உலக மாந்தருக்கு நன்மை பயக்கும். ஆனால் சுயச்சார்புடையவர்கள் இம்மாதிரி கட்டுப்பாடுகளால் வெறுப்படைவர். இவர்களால் மனித சமூக ஒழுங்கு முறை வாழ்க்கைக்கு சிறிய அச்சுறுத்தல் உண்டாகும்.

செய்திகளில் விருப்பமின்மை என்பது அவர் விட்டேத்தியான போக்குடையவர் என்று காட்டுகிறது. ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒரு அரசியல்வாதியால் ஜன நாயகம் என்ற பெயரால் ஏமாற்றும் மன்னராட்சியினால் அவன் சூழப்பட்டிருக்கிறான். அதுவுமின்றி அவனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பிறரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் கட்டுப்படுத்தப்பட்ட பத்திரிக்கை சுதந்திரத்தில் வெளிவரும் செய்திகளை அவன் நிச்சயம் கவனித்தே ஆக வேண்டும். அன்றாட நிகழ்வுகளுக்கேற்ப அவரது வாழ்க்கை முறை அமைக்கப்படுவதை அறிந்தும் கண்டு கொள்ளாதவாறு இருக்கிறார் என்றால், ரோட்டோரத்தில் உண்டு, உறங்கி, உறவு கொள்ளும் மனிதனின் மனப்பான்மையை உங்களின் நண்பர் பெற்றிருக்கிறார் என்று அவதானிக்கலாம். சாலையோரம் வசிக்கும் மனிதனுக்கு செய்தியும் தேவையில்லை, பிற எது மீதும் கவனமும் இருக்காது. ஆனால் தொடை தெரியும் சினிமா போஸ்டரை உற்றுப் பார்க்கும் ஆர்வமிருக்கும். அதைப் போலத்தான் மனிதர்களின் பெரும்பான்மையானோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்களால் எவருக்கும் பிரயோசனமே கிடையாது என்பதை விட உபத்திரவம் அதிகம் என்றும் சொல்லலாம். ஏன் இவ்வாறு கடுமையாகச் சொல்கிறேன் என்றால் அழகியலைச் சார்ந்து வாழ்க்கை நடத்தும் எவரும் மன சந்தோஷத்துடன் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. இவர்களைப் போன்றோர் முதலாளிகளாய் இருந்தால், எண்ணிப் பார்க்கவே கொடூரமாய் இருக்கிறது.

இன்றைய உலகம் செயற்கைத் தன்மை வாய்ந்த பொருட்களின் மீதான ஈர்ப்பை, வாழ்வியலின் முக்கிய சந்தோஷமாகக் கருதுகின்றன. விளைவாக மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகின்றது. இவையெல்லாம் ஒரு வாழ்க்கை முறையே என்று வியாபாரிகள் மக்களுக்கு போதித்து வருகின்றனர். இம்மாயையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

இது போல நடப்பது காலத்தின் கட்டாயம். மனிதர்கள் விலங்கு மனப்பான்மையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களின் நண்பர்களின் செய்கை நமக்குச் சொல்லும் செய்தி.

உங்கள் நண்பர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை : வாழும் வரை பிறருக்கு உபயோகமாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள் என்பதுதான். ஏனென்றால் நாம் பிறரோடு வாழ்கிறோம் என்பதால்.

– அனாதி

 


மர்மம் – ஸ்பெக்டரம் ஊழல்

நவம்பர் 26, 2010

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாய் புகைந்து கொண்டிருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் தற்போது மிகப் பெரிய பூகம்பமாய் வெடித்துக் கிளம்பி இருக்கிறது. என்றைக்கும் இல்லாத ஒன்றாய், அனைத்து ஊடகங்களும் ஒன்றுபட்டு இந்த மாபெரும் ஊழலைக் கிளறிக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் வேறு அதகளம் செய்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் விட உச்ச நீதிமன்றம், எந்த உலகிலும் இல்லாதவாறு பிரதமரை வழக்கில் கொண்டு வந்து கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் உச்ச நீதிமன்றம் ஸ்பெக்டரம் வழக்கில் தலையிடக்கூடாது என்று மனுதாக்கல் செய்கிறது சிபிஐ. சிபிஐ தன்னை மீண்டும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று நிரூபித்து வருவதை ஊடகங்கள் கிழித்து நார் நாராய் தொங்க விடுகின்றன. சிபிஐ விசாரித்தால் இவ்வழக்கு ஊத்தி மூடப்படும் என்று இந்த வழக்கு மூலம் சொல்லி விட்டது. நாடாளுமன்றம் பத்து நாட்களாய் ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவசர சட்டங்கள், நிதி தேவைகளுக்கான அனுமதிகள் மற்றும் இன்னபிறவும் நிறைவேற்ற இயலாமல் கிடக்கின்றன. அதுபற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல், ஆளும்கட்சி ஸ்பெக்டரம் ஊழலை துறுவி எடுக்க சக்தி வாய்ந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுமதி அளிக்கவில்லை.  இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட்ட ராஜாவை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை சிபிஐ. இதுபற்றி சுப்ரீம் கோர்ட் சிபிஐக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிற்து.

தமிழக முதல்வர் கருணா நிதியோ ஜேபிசி விசாரணையே தேவையே இல்லை என்கிறார். தமிழனத்தையே தலைகுனிய வைக்கும் செயலை செய்து விட்டு ராஜா ஜாலியாய் உலா வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சன் டிவியில் ஸ்பெக்டரம் ஊழலை கிழித்து தொங்க விட்டார்கள். அதன்பிறகு கண்டு கொள்ளாமல் இருக்கும் ஊடக சுதந்திரம் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் இருக்கிறது. கலைஞர் டிவியோ ஸ்பெக்டரம் ஊழலா ? அப்படி என்றால் என்ன என்று கேட்கின்றார்கள். இதர டிவிக்களோ வாய் மூடி மவுனியாய் இருக்கின்றன.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, ராஜாவை விட ஏதோ ஒரு சக்தி வாய்ந்த தலைவரையோ அல்லது மறைமுகமாக ஒருவரையோ பாதுகாக்கும் செயல் நடைபெற்று வருவதை நம்மால் உணர முடியும். அந்தச் சக்தி யார்? அந்த ஒருவர் யார் என்பதுதான் நம் முன்னே இருக்கும் கேள்வி.

இந்தியர்களுக்கு இப்போது நம்பிக்கையாய் தென்படுவது “ உச்ச நீதிமன்றமும் அதன் நீதிபதிகளும் தான்”. சுப்ரீம் கோர்ட்டுதான் இந்த மெகா ஊழலை அதன் அடிவரை சென்று ஆராய்ந்து வெளிக் கொண்டு வரும் என்று நம்பக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த ஊழலை வெளிக் கொணருமா என்பதெல்லாம் நம்ப முடியாதவை. ஏனென்றால் இந்தியா ஒரு ஊழல் தேசம். இந்தியா ஊழல் அரசியல்வாதிகளால் நிரம்பி இருக்கிறது. இந்தியத் தாய் தன் மக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறாள் ??????????

– விடுதலை


டேய் ராஸ்கல்….

நவம்பர் 25, 2010

விடிகாலைப் பொழுதில் மொபைல் சிணுங்கியது. ஹஸ்கி லேடீஸ் செக்ஸ் வாய்ஸை ரிங் டோனாக வைத்திருக்கிறேன். உடனே பட்டனை அழுத்தினால் எதிர்ப்புறம் எனது தோழி.

கேட்டுக்கு முன்னால் நின்று கொண்டு அழைத்தார். அரக்கப்பரக்க ஓடி கேட்டினை நீக்கி உள்ளே அழைத்து வந்தேன்.

சூடாக ஒரு கப் சுடு நீரைக் கொடுத்தேன். குடித்து விட்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டார்.

சோப்பை எடு, அதை எடு என்று ஒரே லொள்ளு. போதாது என்று பாத்ரூமிற்குள் நியூடா வேறு நின்று கொண்டு “ ஏய் … இங்கே பாரு” என்று ரகளை வேறு.

குளிக்காமல் பக்கத்தில் சென்றால் ஜென்மத்துக்கும் நம்ம பிரண்ட்ஷிப்பை கட் பண்ணி விடுவாள் என்ற பயத்துடன் துடித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக குளித்து முடித்து விட்டு வெளியே வர, நான் பாத்ரூமிற்குள் புகுந்தேன்.

டைனிங் டேபிளில் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தோழியின் செல்போன் டிங்கியது.

”டேய் ராஸ்கல், நாயே, பொட்டை.. போனை வையுடாங்… ” என்று ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி விட்டு மொபலை சுவிட்ச் ஆஃப் செய்தாள்.

”அவன் படத்தில நடிச்சேனே உனக்கு ஞாபகம் இருக்கா குஞ்சு (பெயரை மாத்தாதே என்ன? ), அப்போ அந்த நாயி என்னை என்னென்ன பாடு படுத்துனான் தெரியுமா? ராஸ்கல்……..”

”சினிமாவில் அதெல்லாம் சகஜம் தானே” என்றேன்.

”அது எனக்குப் பிரச்சினையே இல்லை குஞ்சு. ஆனா இந்தப் பயல் என்னைப் படுத்துன பாட்டைச் சொல்றேன்” கேளுன்னு சொல்லி விட்டு சிறிது நேரம் கழித்து சொன்னாள். நடுங்கி விட்டேன்.

வெளி நாடுகளில் சில வக்கிரம் பிடித்த பணக்காரர்களுக்காக ஷோ ஒன்று நடக்கும். அதில் ஒரு பெண்ணை இம்சித்து அவள் அலறுவதைக் கண்டால் தான் அந்தப் பெரிய மனிதர்களுக்கு விரைப்பு உண்டாகும். உடனே அப்பெண்ணை வன் கலவிக்கு உட்படுத்துவார்கள். இதற்கு பெயர் பிடியெஸ்ஸம் என்றுச் சொல்வார்கள். இணைய தளங்களில் பல பெயர்களில் இலவசமாய் படங்கள் கூட வெளியிடப்படுகின்றன. அதை விட கொடுமையாக எனது தோழியை அந்த இயக்குனர் நடத்தி இருக்கிறான். அப்படத்தினால் உலகளவில் பெயர் கிடைக்குமென்பதால் தோழியும் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் உடன்பட்டிருக்கிறாள். உடம்பே புண்ணாகி விட்டிருக்கிறது. பல பேரின் முன்னிலையில் அந்த அக்கிரமத்தை அரங்கேற்றுவானாம் அந்த இயக்குனர். படம் முடிந்து தோழிக்கு மிகப் பெரும் பெயர் கிடைத்தது. தற்போது நல்ல நிலையில் நடித்துக் கொண்டிருக்கிறாள்.

மறுபடியும் அவன் படத்தில் நடிக்க அவளை அடிக்கடி அழைத்துக் கொண்டிருக்கின்றான். அவள் என்னிடம் மேட்டரைச் சொல்லி, அவனை எப்படியாவது சரி செய் என்றுச் சொன்னாள்.

அனாதியை போனில் பிடித்து விபரத்தைச் சொன்னேன். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த இயக்குனர் எனது லைனுக்கு வந்தான்.

”சார், இனிமேல் அவ்வாறு நடக்காது” என்றான். அவனுக்கு அனாதியைப் பற்றி நன்கு தெரியுமென்பதால் எனது தோழியின் பாதைக்கு எக்காலமும் இனிமேல் வரமாட்டான் என்று எனக்குத் தெரியும்.

தோழியிடம் பகிர்ந்து கொண்டேன். அன்றைக்கு மாலையில் கோவாவிற்கு கிளம்பினோம் இருவரும். வருவதற்கு ஒரு வாரம் ஆகும். அதுவரை உங்களிடமிருந்து தற்காலிக ஒரு வார விடுப்பில் செல்கிறான் உங்களின் மனம் கவர் குஞ்சாமணி.

 


%d bloggers like this: