பாரு நிவேதிதாவின் தார்மீக கோபம்

பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் போது, உலகமே இருட்டாய் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுமாம். அது போல, தான் என்ன எழுதினாலும் வாசகர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொள்வதில் பாருவுக்கு நிகர் பாரு தான்.

அருந்ததி ராயை ஆதரிக்கின்றாராம் இவர். இவரின் ஆதரவை அவர் என்றைக்காவது கேட்டிருக்கிறாரா? அய்யோ நான் ஆதரித்தேன் என்று நாளை எங்காவது சொல்லிக் கொள்ளலாம் என்பதற்கு எழுதி வைத்திருக்கிறார். தம்பிடி பிரயோசனம் இல்லாமல் எவர் கூடவும் பழகவே மாட்டார் இந்தப் பாரு என்று பல நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவரின் எழுத்து வானத்தில் இருந்து வருவது போல டிராமா போட்டிக் கொண்டிருப்பார். வாசகர்களிடமிருந்து பண உதவி தானாகவே வர வேண்டும். அது என்னைப் படிக்கும் வாசகர்களின் கடமை என்றெல்லாம் எழுதுவார். உதவி செய்பவர்களைப் பற்றி படு மோசமாய், இனி அவர்களால் நமக்குப் பிரயோசனம் இல்லை என்று தெரிந்த பிறகு திட்டுவார். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பார். இவரைப் பற்றி விமர்சித்தால் தீவிரவாதிகள் என்று எழுதுவார். இது தான் பாரு.

நாம் கரடியாய் கத்தியும், திட்டுவேன் என்றும் எழுதியும் திமுகவிலிருந்து ஒருவரும் எட்டிக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்பதற்காக திமுகவை ஆதரிக்கும் சவிக்குமாரைத் திட்டித் தீர்த்துக் கொள்கிறார் போலும்.

திரு சவிக்குமார் செய்வது அரசியல். அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும்.திரு சவிக்குமாரைப் பற்றி விமர்சிக்க ஒரு தகுதி இருக்கிறது. உடனே நான் திரு சவிக்குமாரை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். சவிக்குமாரை விமர்சிக்கும் தகுதி பாருவிற்கு இல்லை. புரட்சி எழுத்தாளர், பொங்கிய எழுத்தாளர், சுரோண்ணிதம் சுரந்து கொண்டே இருக்கும் எழுத்தாளர், வாசகிகளை ஏறெடுத்தும் பார்க்காத எழுத்தாளர் என்று ஏகத்துக்கும் தன்னைத்தானே புலம்பிக் கொண்டு திரியும் இவர், திரு சவிக்குமாரைத் திட்டும் போது யோசிக்க வேண்டும். திரு சவிக்குமாரை விட அதிகமாய் ஜால்ரா தட்டும், இவர் ஆதரிக்கும் பத்திரிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டார். அது வேறு இது வேறு என்று கூசாமல் சொல்வார்.

திமுக பற்றி எழுதினாலே கொன்று போடுவார்கள் என்று ஜால்ரா தட்டுவது இவரா இல்லை திரு சவிக்குமாரா? நான் எழுதுவேன் ஆனால் எழுதினால் கொன்று போடுவார்கள் என்று விலகுவதற்குப் பெயர்தான் ஃபாசிச அடிமைத்தனம். ஆண்மைத்தனமுள்ள எந்த ஒரு எழுத்தாளனும் கொன்றாலும் எழுதுவேன் அல்லது ஜால்ரா அடிப்பேன் என்ற முடிவுக்கு வருவான். ஆனால் இவரோ அய்யோ என்னைக் கொன்று விடுவார்கள் என்றுச் சொல்லி தப்பிக்கிறார். இதுவும் ஒரு விதமான ஆதரிக்கும் நிலைதான் என்பதை சாதாரண ஒருவன் கணித்து விடுவான். நான் கேரளாவில் எழுதுகிறேன். அங்கு எழுதுகிறேன் என்பார். கவுண்டமணி கரகாட்டக்காரனில் கோவை சரளாவைப் பார்த்து “ ஜப்பானில் ஜாக்கி சானு கூப்பிட்டாரு… “ . வாசகர்களே ஏமாந்து விடாதீர்கள்.

சவுக்கு என்ற இணையதளத்தில் ஆளும் கட்சியைக் கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகின்றார்கள். வினவில் ஆளும் கட்சியை நார் நாராய்க் கிழிக்கின்றார்கள். இன்னும் காத்திரம் குறையாமல் எழுதும் பல எழுத்தாளர்கள் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எந்த வித பயமும் இல்லாமல் விமர்சிக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் என்ன எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களா? அவர்களுக்கு இருக்கும் தைரியம் புரட்சி எழுத்தாளர் என்று தன்னைத் தானே சொரிந்து கொள்ளும் இவரிடம் இல்லையே ஏன்? அய்யோ அய்யோ என்னைக் கொன்று விடுவார்கள் என்று பம்மாத்து காட்டுகிறார். அதாவது அவர்களைத் திட்டுவது போல நாடகமாடுகிறார். இண்டலக்சுவல் பிராஸ்ட்டியூட் இப்போது யார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவும்.

இவரின் பதிவைப் படிக்கும் அரைகுறைகள் ஆஹா, ஓஹோ என்று பதில்களைத் தட்டி விடுவார்கள். அதையும் பதிவேற்றி தன்னைத் தானே சொரிந்து கொள்வார்.

பாரு ஒரு காலி பெருங்காய டப்பாவாகி விட்டார் என்பது அவரின் புத்தகங்களைப் படிக்கும் போதும், இணையதளத்தை வாசிக்கும் போது அறிய நேரிடுகிறது. வேறு வழி இல்லாமல் டப்பாவிற்குள் கற்களைப் போட்டாவது உருட்ட வேண்டும். இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். மீண்டும் அவரது இணையதளம் பிரபலமாக ”குட்டிகளின் பாவாடைக் கதைகள்” என்று தொடர் ஆரம்பிக்கலாம் என்பது அடியேனின் ஆலோசனை. அவ்வாறு அவர் ஆரம்பித்தால் அனாதியில் ”குட்டிகள் போட்ட குட்டிகளின் பாவாடைக் கதைகள்” என்ற தொடரை குஞ்சு எழுதுவான்.

இன்னும் எத்தனையோ பேர் இவரிடம் ஏமாந்து போக காத்துக் கொண்டிருக்கையில், இவரின் பிழைப்பு எந்த வித பிரச்சினையும் இன்றி நடந்து கொண்டிருக்கும்.

– பஞ்சரு பலராமன்

3 Responses to பாரு நிவேதிதாவின் தார்மீக கோபம்

 1. Sandy சொல்கிறார்:

  Its a nice write up…I enjoyed it…
  Charu is a bastard…no doubt about it

 2. Balachandran சொல்கிறார்:

  kaurthai pathivu seiya thaguthi venum thaguthi venum nu solreengale. ippadiye allaluku thaguthi thguthi na , yaru than vimarsikirathu.apparam neengallam eppadi blog elthurathu naanga eppadi padikirathu.

  • அனாதி சொல்கிறார்:

   பாலா, கருத்துச் சொல்வது என்பது வேறு, குற்றம் சொல்வது என்பது வேறு. ஒரு கொலைக்குற்றவாளி, இன்னொரு கொலைக்குற்றவாளியை நீ அயோக்கியன் என்றுச் சொன்னால் அதை என்னவென்று சொல்வீர்கள். இதைத்தான் நான் எழுதினேன். இப்போதாவது புரிகிறதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: