குமாரசாமி – அயோக்கிய அரசியல்

அரசியல் என்றாலே படுபயங்கரம் என்றாகி விட்டது. காந்தியும், நேருவும், காமராஜரும், கக்கனும் இன்னும் வெளியில் தெரியாத எத்தனையோ மகாத்மாக்கள் அரசியல் மூலம் வெகுஜன மக்களுக்கு நன்மைகள் செய்தனர். ஆனால் இன்றைய அரசியல்வாதிகளின் போக்கு, உலக மகா பயங்கரவாதிகளை விடவும் கொடூரமானவர்களாய் இருக்கின்றார்கள்.

பின்லேடனைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் சில இந்திய அரசியல்வாதிகளின் போக்கும், செயலும் பின்லேடனை விட கொடூரமானவையாக இருக்கிறது. அதை மக்கள் சகித்துக் கொள்வது தான் கொடுமையிலும் கொடுமை.

முன்னாள் முதல்வர் தேவகவுடா மீது நான் அதிகப் பற்று வைத்திருந்தேன். ஏனென்றால் அவர் பிரதமராக இருந்த போது, ஊழல் செய்த அரசியல்வாதிகளின் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவரின் இப்போதைய போக்கு, அக்மார்க் மொள்ளமாரித்தனம்.

பாஜகவும், இவரின் கட்சியும் இணைந்து ஒரு ஒப்பந்தத்தை வரைவு செய்து இரண்டரை ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்வது என்ற முறையில் தேவகவுடாவும், குமாரசாமியும் ஆட்சி செய்தனர். பாஜக முறை வந்த போது குமாரசாமியும், தேவகவுடாவும் நடந்து கொண்ட முறை பச்சையான அயோக்கியத்தனம்.

அதன்பிறகு கர்னாடக மக்கள் ஆட்சியை பாஜகவிடம் ஒப்படைத்தனர். ஆனால் நடந்தது என்ன? இரும்புச் சுரங்க மாஃபியா ரெட்டி சகோதரர்களின் சதியில் சிக்கினார் எடியூரப்பா. இவர்களால் தான் ஆரம்பத்தில் பெரிய பிரச்சினையே உருவாகியது. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் அயோக்கியத்தனம் ஆரம்பமாகியது. இதோ தினமலரில் வந்த ஒரு வாசகரின் கடிதம்.

ஜனநாயகத்திற்குகேலிக்கூத்து!கிருஷ்ணன், முகப்பேர், சென்னையிலிருந்து அனுப்பிய, “இ-மெயில்’ கடிதம்: கர்நாடக அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தில் உள்ளது. தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தளம், மனசாட்சி அற்று நடந்து கொள்கிறது. ஏற்கனவே அவர்கள் போட்ட ஒப்பந்தப்படி, மத சார்பற்ற ஜனதா தளமும், பா.ஜ.,வும் தலா இரண்டரை ஆண்டுகள் ஆள வேண்டும்.ஆனால், மத சார்பற்ற ஜனதா தளம், அதை வேண்டும் என்றே கெடுத்தது. மீண்டும் மக்களால் பா.ஜ., ஆட்சியில் அமர்த்தப்பட்டது. பொறாமை பிடித்த கவுடா கட்சி, பா.ஜ., ஆட்சியை கவிழ்க்க விரும்புகிறது.எம்.எல்.ஏ.,க்களை குதிரை பேரம் நடத்தி, ஆட்சியை கலைக்க ஊர் ஊராக கொண்டு செல்வதைப் பார்த்தோம்.தேர்தல் கமிஷன் உடனடியாக ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.அதன்படி, மக்கள் விரும்பினால், அந்த எம்.எல்.ஏ.,வை திரும்ப பெறும் உரிமையும் வேண்டும். மீண்டும், மீண்டும் தேர்தல் வருவதால், நாட்டிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.கவிழ்க்க நினைப்பவர்கள், நாட்டு மக்களுக்காக எதையும் செய்ய போவதில்லை. தன்னை முன்னிறுத்தி, தான், தன் குடும்பம் வாழவே இதையெல்லாம் செய்கின்றனர்.ஜனநாயக நாடு என்று சொல்லி, மீண்டும், மீண்டும் ஆட்சியை கவிழ்த்து, தேர்தலை கேலி கூத்தாக்குவது, ஜனநாயகத்தை சாகடிப்பது போன்றது. உலகத்தின் பார்வையில், நம் நாடு படு பாதாளத்தை நோக்கி செல்கிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய நாம், இந்த அரசியல்வாதிகளை எதிர்த்து எப்படி போராடுவது?

கர்நாடக காங்கிரஸும், குமாரசாமியும், தேவகவுடாவும் தன் செயலுக்காக எவராலும் மன்னிக்கவே முடியாதவர்கள். கோடிகளைக் கொட்டியும், விலை போகும் சுயேச்சை மற்றும் பாஜக எம் எல் ஏக்களையும் மக்களால் தண்டிக்கவே முடியாது. காசை வாங்கிக் கொண்டு பாஜக எம்யெல்லேக்கள் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எதிர்முகாம் சென்றிருக்கின்றனர் என்று செய்திகள் சொல்கின்றன. இவர்கள்தான் சமூக கொடுங்கோலர்கள். மக்களை வதைக்கும் நரகர்கள். நம்பிக்கைத் துரோகிகள். குமாரசாமி ஆளுனரிடம் ஜன நாயக் படுகொலை என்றுச் சொன்னாராம். படுகொலை செய்த கொடூரனே இவர்தானே?

கர் நாடக அரசியலில் யார் யாரெல்லாம் அயோக்கியச் சிகாமணிகள் என்பதை அவர்களின் செயல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக காசு வாங்கிக் கொண்ட பாஜக எமெல்யேக்கள், காசைப் பெற்ற சுயேச்சை எம்யெல்லேக்கள், அவர்களுக்கு காசு கொடுத்த தேவகவுடா, குமாரசாமி மற்றும் இச்செயல்களை ஊக்கப்படுத்தி ஆட்சியைக் கலைக்க முயலும் காங்கிரஸ் கட்சியினர்.

இவர்கள் சட்டத்தின் முன்பு வேண்டுமானால் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் தர்மத்தின் முன்னாள் இவர்கள் அக்மார்க் குற்றவாளிகள். உலகையே வெல்வேன் என்று கொக்கரித்த ஹிட்லரும் மண்ணுக்குள் சென்றான்.  இந்திய மக்களின் உழைப்பைக் கேவலப்படுத்தும் மேற்படி நபர்கள் நிச்சயம் தர்மத்தின் முன்னாள் தண்டிக்கப்படுவர். சட்டங்கள் எல்லாம் பணத்தின் முன்னே வெறும் காகிதம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆகவே தர்மத்தை நம்புவதை விட இச்சமயத்தில் மேலானது ஒன்றுமில்லை.

– பஞ்சரு பலராமன்

2 Responses to குமாரசாமி – அயோக்கிய அரசியல்

  1. vijayaraghavan சொல்கிறார்:

    பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவதில், கர்நாடகாவில் வாக்காளர் சதவிகிதம் அதிக்ம் என்று முன்பு ஒருமுறை படித்த ஞாபகம்.

  2. L.C.NATHAN சொல்கிறார்:

    KAASU VERRI PIDITHTHA CONGRESS KAARANUM DEVE GOWDA AATKALUM JANANAAYAKATHTHAI KARNAATAKAAVIL KOLAI PANNIVITTAARKAL. INTHA MAATHRI AATKALAI NIRRKA VAITHTHU SUDAVAENDUM!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: