ரஜினியின் அரசியல் – வடிவேலு புறக்கணிப்பு

அனாதி அவர்களுக்கு,

எந்திரனில் வடிவேலு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்றும், ரஜினி வடிவேலுவைப் பார்த்துப் பயந்திருக்கிறார் அல்லது பொறாமைப்பட்டிருக்கிறார் என்றும் மீடியாவில் பேசிக் கொள்கிறார்களே அது பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

சென்னையிலிருந்து : ரகு

ரகு,

ஏன் இப்படி ? நானா கிடைத்தேன்? இருப்பினும் என்னிடம் கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்த உங்களின் நினைப்புக்கு நான் மரியாதை செய்தே ஆக வேண்டும்.

எந்த ஒரு படத்திலும் நடிக்கும் நடிகர்களை முடிவு செய்வது அப்படத்தின் முதலாளியோ அல்லது இயக்குனராகத்தான் இருக்கும். ஆனால் ரஜினி படத்தில் அவ்வாறு இருக்க முடியாது. ஐஸ்வர்யா பச்சனுடன் நடித்தே ஆக வேண்டுமென்ற ரஜினியின் அடங்க முடியா ஆவலின் காரணமாய், எந்திரனில் அவருக்கு ஆறு கோடி சம்பளம் கொடுத்து புக் செய்யப்பட்டார். (குஞ்சு இதே நீயாக இருந்தால் ஏகப்பட்ட விளக்கங்களை கொடுத்திருப்பாய் அல்லவா?)

பாபாவில் மண்ணைக் கவ்விய ரஜினியை, சந்திரமுகி உச்சத்தில் தூக்கி நிறுத்தியது. காரணம் வடிவேலு. வடிவேலுவின் தனி ஆவர்த்தனம் இல்லையென்றால் சந்திரமுகியும் குப்புறக் கவிழ்ந்து இருக்கும். குசேலன் படத்தில் வடிவேலுவின் தனி ஆவர்த்தனம் அப்படத்தை கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து பார்க்க வைத்தது. வடிவேலுவின் காமெடியினால் தனது முக்கியத்துவம் குறைந்து போய் விடுகிறது என்று ரஜினி நம்பியிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. சிவாஜியில் விவேக்கின் காமெடி, அப்படத்தின் நகர்தலை தடுத்து நிறுத்தியது. எந்திரனில் கருணாசும், சந்தானமும் செய்யும் காமெடி தொல்லையாகி விட்டது. இதே வடிவேலுவாக இருந்திருந்தால், அதகளம் செய்திருப்பார். வடிவேலு விஞ்ஞானி என்ற காம்பினேஷனில், வடிவேலுக்கான களத்தில் தூள் கிளம்பியிருக்கும்.200 கோடி செலவழிக்கும் படத்தில் ஏன் வடிவேலுக்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்பதில் அரசியல் அற்ற ஏதோ ஒன்று இருக்கிறது என்பது புரிகிறது. வடிவேலு நடித்திருந்தால் எந்திரன், இன்னும் 10 நாட்கள் அதிகமாய் படம் ஓடியிருக்கும். நீங்கள் சொல்வது அனைவராலும் நம்பக்கூடிய ஒரு விஷயம்தான். ஆனால் அதுதான் உண்மையாக இருக்குமோ என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

அடுத்து எந்திரன் பற்றிய அரசியல் பேச்சுக்கள் சில இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போம்.

எந்திரன் பற்றித் தினசரிகளில் வெளிவரும் செய்திகள் அனைத்தும் புனையப்படுபவை. எந்திரன் ஓடும் தியேட்டர்கள் ஈ ஓட்டுகின்றன. எனது தியேட்டர் நண்பர்களிடம் விசாரித்து அறிந்து கொண்டேன். எந்திரன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்று விஷயம் தெரிந்த பலர் பேசிக் கொள்கின்றார்கள்.

எந்திரனில் உருவான கூட்டணி மிகவும் திட்டமிட்டு, ரஜினியை மீடியாவிலிருந்து நீக்கி, வேறு ஒரு தளத்திற்கு தள்ள உருவாக்கப்பட்ட திட்டமாக இருக்க கூடும். ரஜினி நிச்சயமாய் அரசியலுக்கு வந்தே தீருவார் என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள். ஏனென்றால் திமுக இனி என்றைக்குமே மாறன் சகோதரர்களுக்கு எதிராய்த்தான் இருப்பார்கள். மாறன் சகோதரர்களிடமிருந்து நல்ல பாடங்களை கற்றதன் பயனாக, தனி தொலைக்காட்சி, தினசரி என்று திமுகவினர் வளர்ந்து விட்டனர்.சன் டிவியின் ஆதரவு திமுகவினருக்குத் தேவை இல்லை. ஆனால் சன் டிவிக்கு ஆதரவாய் ஏதாவது ஒரு அரசியல் சக்தி தேவை. கலைஞர் இருக்கும் வரையில் மாறன் சகோதரர்களுக்குப் பிரச்சினை இருக்காது. ஆனால் இதே நிலையை ஸ்டாலின், அழகிரி இருவரும் தொடர்வார்கள் என்பதெல்லாம் நம்ப முடியாத ஒன்று. திமுகவினரால் வளர்ந்த சன் டிவி, அதே திமுகவினருக்கு எதிராய் காய் நகர்த்தியதை நாமெல்லாம் அறிவோம். அது பற்றிய ஒரு வீடியோவை இந்த இணைப்பில் காணலாம்.

ரஜினி எப்படி அரசியலுக்கு வருவார் என்பதற்கான சாத்தியக்கூறுகளை இனிப் பார்க்கலாம்.

சன் திரைப்பட வினியோகஸ்த்தில் இறங்கியதும், திமுக தலைவரின் குடும்பமே திரைப்படத் தயாரிப்பில் இறங்கி விட்டனர். சன் டிவியின் ஒவ்வொரு மூவ்மெண்டுக்கும், திமுகவினர் சரியான எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இந்தச் சூழ் நிலையில் சன் டிவிக்கு தேவை, தன்னை ஆதரிக்கும் ஒரு அரசியல் சக்தி. அதை ரஜினி மூலம் அடைய முயல்கிறது என்று சிலர் சொல்கின்றார்கள்.

ரஜினியை வைத்து ஆடப்படும் ஆடுபுலி ஆட்டம் தான் எந்திரன் என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். ரஜினி + சன் டிவி இணைந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயமாய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன என்று பல அரசியல் பார்வையாளர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, திமுகவினருக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன.  அது போல சன் டிவியும் செய்யுமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பதை நாமெல்லாம் அறிவோம். காலம் நடத்தும் காட்சிகளை கண்டுகளிக்க தயாராக வேண்டியதுதான் நமது வேலை.

– அனாதி

4 Responses to ரஜினியின் அரசியல் – வடிவேலு புறக்கணிப்பு

  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    ரஜினி + சன் ஓகே. ரஜினி ஒத்துவருவாரா!

  2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    ஓ இப்படியெல்லாம் போகிறதா.

  3. […] This post was mentioned on Twitter by Alex Pandian, Alex Pandian. Alex Pandian said: 2/2 ரஜினி+ சன்டிவி(மாறன்s) இணைந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயமாய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன http://bit.ly/ars1yr […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: