பாரு நிவேதிதாவின் தார்மீக கோபம்

ஒக்ரோபர் 31, 2010

பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் போது, உலகமே இருட்டாய் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுமாம். அது போல, தான் என்ன எழுதினாலும் வாசகர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்துக் கொள்வதில் பாருவுக்கு நிகர் பாரு தான்.

அருந்ததி ராயை ஆதரிக்கின்றாராம் இவர். இவரின் ஆதரவை அவர் என்றைக்காவது கேட்டிருக்கிறாரா? அய்யோ நான் ஆதரித்தேன் என்று நாளை எங்காவது சொல்லிக் கொள்ளலாம் என்பதற்கு எழுதி வைத்திருக்கிறார். தம்பிடி பிரயோசனம் இல்லாமல் எவர் கூடவும் பழகவே மாட்டார் இந்தப் பாரு என்று பல நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இவரின் எழுத்து வானத்தில் இருந்து வருவது போல டிராமா போட்டிக் கொண்டிருப்பார். வாசகர்களிடமிருந்து பண உதவி தானாகவே வர வேண்டும். அது என்னைப் படிக்கும் வாசகர்களின் கடமை என்றெல்லாம் எழுதுவார். உதவி செய்பவர்களைப் பற்றி படு மோசமாய், இனி அவர்களால் நமக்குப் பிரயோசனம் இல்லை என்று தெரிந்த பிறகு திட்டுவார். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பார். இவரைப் பற்றி விமர்சித்தால் தீவிரவாதிகள் என்று எழுதுவார். இது தான் பாரு.

நாம் கரடியாய் கத்தியும், திட்டுவேன் என்றும் எழுதியும் திமுகவிலிருந்து ஒருவரும் எட்டிக்கூட பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்பதற்காக திமுகவை ஆதரிக்கும் சவிக்குமாரைத் திட்டித் தீர்த்துக் கொள்கிறார் போலும்.

திரு சவிக்குமார் செய்வது அரசியல். அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும்.திரு சவிக்குமாரைப் பற்றி விமர்சிக்க ஒரு தகுதி இருக்கிறது. உடனே நான் திரு சவிக்குமாரை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். சவிக்குமாரை விமர்சிக்கும் தகுதி பாருவிற்கு இல்லை. புரட்சி எழுத்தாளர், பொங்கிய எழுத்தாளர், சுரோண்ணிதம் சுரந்து கொண்டே இருக்கும் எழுத்தாளர், வாசகிகளை ஏறெடுத்தும் பார்க்காத எழுத்தாளர் என்று ஏகத்துக்கும் தன்னைத்தானே புலம்பிக் கொண்டு திரியும் இவர், திரு சவிக்குமாரைத் திட்டும் போது யோசிக்க வேண்டும். திரு சவிக்குமாரை விட அதிகமாய் ஜால்ரா தட்டும், இவர் ஆதரிக்கும் பத்திரிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டார். அது வேறு இது வேறு என்று கூசாமல் சொல்வார்.

திமுக பற்றி எழுதினாலே கொன்று போடுவார்கள் என்று ஜால்ரா தட்டுவது இவரா இல்லை திரு சவிக்குமாரா? நான் எழுதுவேன் ஆனால் எழுதினால் கொன்று போடுவார்கள் என்று விலகுவதற்குப் பெயர்தான் ஃபாசிச அடிமைத்தனம். ஆண்மைத்தனமுள்ள எந்த ஒரு எழுத்தாளனும் கொன்றாலும் எழுதுவேன் அல்லது ஜால்ரா அடிப்பேன் என்ற முடிவுக்கு வருவான். ஆனால் இவரோ அய்யோ என்னைக் கொன்று விடுவார்கள் என்றுச் சொல்லி தப்பிக்கிறார். இதுவும் ஒரு விதமான ஆதரிக்கும் நிலைதான் என்பதை சாதாரண ஒருவன் கணித்து விடுவான். நான் கேரளாவில் எழுதுகிறேன். அங்கு எழுதுகிறேன் என்பார். கவுண்டமணி கரகாட்டக்காரனில் கோவை சரளாவைப் பார்த்து “ ஜப்பானில் ஜாக்கி சானு கூப்பிட்டாரு… “ . வாசகர்களே ஏமாந்து விடாதீர்கள்.

சவுக்கு என்ற இணையதளத்தில் ஆளும் கட்சியைக் கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகின்றார்கள். வினவில் ஆளும் கட்சியை நார் நாராய்க் கிழிக்கின்றார்கள். இன்னும் காத்திரம் குறையாமல் எழுதும் பல எழுத்தாளர்கள் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எந்த வித பயமும் இல்லாமல் விமர்சிக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் என்ன எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களா? அவர்களுக்கு இருக்கும் தைரியம் புரட்சி எழுத்தாளர் என்று தன்னைத் தானே சொரிந்து கொள்ளும் இவரிடம் இல்லையே ஏன்? அய்யோ அய்யோ என்னைக் கொன்று விடுவார்கள் என்று பம்மாத்து காட்டுகிறார். அதாவது அவர்களைத் திட்டுவது போல நாடகமாடுகிறார். இண்டலக்சுவல் பிராஸ்ட்டியூட் இப்போது யார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவும்.

இவரின் பதிவைப் படிக்கும் அரைகுறைகள் ஆஹா, ஓஹோ என்று பதில்களைத் தட்டி விடுவார்கள். அதையும் பதிவேற்றி தன்னைத் தானே சொரிந்து கொள்வார்.

பாரு ஒரு காலி பெருங்காய டப்பாவாகி விட்டார் என்பது அவரின் புத்தகங்களைப் படிக்கும் போதும், இணையதளத்தை வாசிக்கும் போது அறிய நேரிடுகிறது. வேறு வழி இல்லாமல் டப்பாவிற்குள் கற்களைப் போட்டாவது உருட்ட வேண்டும். இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். மீண்டும் அவரது இணையதளம் பிரபலமாக ”குட்டிகளின் பாவாடைக் கதைகள்” என்று தொடர் ஆரம்பிக்கலாம் என்பது அடியேனின் ஆலோசனை. அவ்வாறு அவர் ஆரம்பித்தால் அனாதியில் ”குட்டிகள் போட்ட குட்டிகளின் பாவாடைக் கதைகள்” என்ற தொடரை குஞ்சு எழுதுவான்.

இன்னும் எத்தனையோ பேர் இவரிடம் ஏமாந்து போக காத்துக் கொண்டிருக்கையில், இவரின் பிழைப்பு எந்த வித பிரச்சினையும் இன்றி நடந்து கொண்டிருக்கும்.

– பஞ்சரு பலராமன்


ஒரு ரசிகனின் பார்வையில்

ஒக்ரோபர் 28, 2010

ரஜினியின் விருந்து பற்றி எழுதி விட்டு படம் பார்க்க ஆரம்பித்து ஒரு வழியாக முடித்து விட்டேன். ஃப்ரண்டை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, எனது நண்பரின் அழைப்பை ஏற்று அவரின் தோட்ட வீட்டிற்குச் சென்றேன். அங்கே, இடுப்பை வெட்டி வெட்டி நடக்குமே ஒரு வயதான ஹீரோயின், அவர் உட்கார்ந்து இருந்தார். என்னைப் பார்த்ததும் யார்ரா இவன் என்பது போல பார்க்க, நண்பர் வரவேற்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

மாதமொருமுறை மீட்டிங். அதுவும் தென்னந்தோப்பு பங்களாவில். தனிமையில் நடிகையோடு இனிமை கண்டு வரும் என் நண்பர் என்னை அழைத்தது கம்பெனிக்கு. அடியேனுக்கு தனி ஆவர்த்தனம் மட்டுமே பிடிக்கும் என்பதாலும், கிழடுகளுடன் ஆட்டம் போட நம்மால் ஆகாது என்பதாலும் அங்கிருந்து உடனடியாக கழண்டு கொண்டேன்.

வயகராவை பார்த்துப் போடுய்யா, மண்டையப் போட்டுறாதீரென்று எச்சரிக்கை விடுத்து விட்டு வந்தேன். நடிகையின் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் ஒன்றே போதும் என்று கொசுறாய் ஒரு செய்தியை சொல்லி அனுப்பினார். நீயும் ட்ரைப் பண்ணு என்றார். அது ஏற்கனவே ட்ரைதான் என்றுச் சொல்லி அவரை வெறுப்பேத்தி விட்டு வந்தேன்.

ஃபார்சூனரை விரட்டிக்கொண்டிருந்த போது, நம்ம வாசகர்களுக்கு ஒரு மேட்டரை இதுவரைச் சொல்லாமல் விட்டு விட்டோமே என்ற நினைப்பு வர, இதோ இந்தப் பதிவு.

சிலருக்கு பலதும் பிடிக்கும். ஆப்பிள் பழம் எனக்குப் பிடித்த பழம். அதே போல கொய்யா,மாம்பழம் போன்றவை எல்லாம் எனக்குப் பிடித்தவை. ஆனாலும் வாழைப்பழம் என்றால் எனக்கு உயிர். அது ஏன் என்பதைப் படத்தைப் பார்த்து அவதானித்துக் கொள்ளவும்.

– குஷியுடன் உங்கள் மனம் கவர் குஞ்சாமணி

 


ரஜினியின் விருந்து

ஒக்ரோபர் 27, 2010

இரண்டு நாளா ஒருத்தரும் பதிவு எழுதாமல் இருக்கின்றார்கள். சரி நாம் எழுதலாம் என்று பார்த்தால், குட்டி சும்மா இருக்க மாட்டேன் என்கிறாள். எப்போ பாரு நெட்டு நெட்டுன்னு அதுல என்னதான் இருக்குன்னு கேட்டாள். எனக்கு ஒரு வெரைட்டியான கிக்கு தேவைப்பட்டதால், நெட்டைத் திறந்தேன். என் அமெரிக்க நண்பர் அளித்திருந்த சைட்டுக்குள் நுழைந்தேன். கண்களை விரித்தவள் பின்னர் மூடவே இல்லை.

விடிய விடிய லைவ்வா படம் பார்த்தோம். பார்த்தோம். பார்த்தோம். இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

இதற்குள் ஒரு மேட்டரை எழுதி விடலாமென்று வந்து விட்டேன்.

ரஜினி தன் ரசிகர்களுக்கு கல்யாண விருந்து அளிக்கப்போவதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்தன. அது எப்போது என்று யாருக்காவது தெரியுமா? ஏனென்றால் அடியேனும் ரஜினி ரசிகன் தான்.

ரஜினியால் ஒரு வேளையாவது வயிறாரச் சப்பிட வேண்டுமென்ற ஆசையினால் கேட்கிறேன். ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை அல்லவா அளித்தோம் அவருக்கு.

அந்த விருந்து எப்போது நடக்குமென்று யாராவது விசாரியுங்களேன். மகளுக்கு பிள்ளை பிறந்த பிறகா இல்லை அந்தப் பிள்ளைக்குப் பேரன் பிறந்த பிறகான்னு யாராவது கேட்டுச் சொல்லுங்க.

உடனே குறுக்கு குத்து குத்துகிறாயோ என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள். ரஜினி ரசிகன்னா சரியான ஏமாளியோன்னு கூட நினைத்து விடாதீர்கள். என் தலைவன் ரஜினி நிச்சயம் எங்களுக்கு ஒரு நாள் விருந்து அளிப்பார் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

தலைவா, ரஜினி அவர்களே, எங்களுக்கு எப்போது விருந்தளிக்கபோகின்றீர்கள்????

– ரசிகன் குஞ்சு


தொட்டுக்கொள்ள – 25/10/2010

ஒக்ரோபர் 25, 2010

தினமலர் பத்திரிக்கையில் ”நாங்கள் நினைத்தால் நீங்கள் ரோட்டில் நடக்க முடியுமா? என்று கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அமைச்சர் அன்பரசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்” என்று செய்தி வந்திருக்கிறது. தமிழக மக்களுக்கெல்லாம் அமைச்சரான இவரின் இந்தப் பேச்சு, பொது அமைதியைக் கெடுப்பதாகவும், பதவியேற்கும் போது சொன்ன அமைச்சரின் உறுதிமொழி மீறப்படுவது போலவும் இருப்பதை தமிழக சட்டம் ஒழுங்கினை கவனிக்கும் அமைச்சர் கவனிப்பாரா? ஏன் அமைச்சர் இந்தளவுக்குப் பேச ஆரம்பிக்கிறார்? தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றுச் சொல்ல வருகின்றாரா? கம்யூனிஸ்ட் கட்சியினரை நடமாட அனுமதிக்க இவர் யார்? மக்கள் சேவகராக இருக்க வேண்டியவர் ஏன் இப்படித்தரம் தாழ்ந்த பேச்சினை பேசுகிறார்? திமுகவினருக்கு என்னவாயிற்று? முதல்வரின் சமீபத்திய அறிக்கைகள் ஒவ்வொன்றினையும் கவனிக்கும் போது, திமுகவினர் அதீத கோபத்தில் இருப்பது போலத் தெரிகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு என்று தலைப்புச் செய்தி வெளிவந்திருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் இந்திய மக்களைக் கொள்ளையடிப்பதில் முதன்மை வகிக்கின்றன என்பதை இச்செய்தி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு ஒன்றினை எவராவது தொடுத்தால் நல்லது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் வேலை செய்பவருக்கு கோடிக்கணக்கில் எந்த வித வரைமுறையும் இன்றிச் சம்பளம் கொடுப்பதைக் கட்டுப்படுத்தல் வேண்டும். அடுத்து, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிப்பதை விலக்க வேண்டும். இல்லையென்றால் இந்த எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் என்றே பொய்யையும், பிரட்டையும் இட்டுக்கட்டியே, பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு கொண்டு வந்து விடுவார்கள். பேரல் 140 டாலர் விற்ற போது 56 ரூபாயாக இருந்த பெட்ரோல், இப்போது பேரல் 82 டாலராக இருக்கும் போது குறைய வேண்டுமல்லவா? ஏன் குறையவில்லை? கமெர்ஷியல் சில்ண்டரை தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளும் நிறுவனங்கள், மக்கள் பயன்படுத்தும் சமையல் கேஸை குறைத்து அனுப்பி வைக்கின்றன. மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத எண்ணெய் நிறுவனங்களை கட்டுப்படுத்தல் முக்கியமான ஒன்றாகும். 20 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோல் 56 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 36 ரூபாய் எங்கே போகிறது என்பதை அரசாங்கம் கணக்குச் சொல்ல வேண்டும். மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. செய்வார்களா? காங்கிரஸ் அரசின் மக்கள் விரோதப் போக்கினை தடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய மக்கள் இருக்கின்றார்கள்.

அடுத்து, மானாட மயிலாடவில் பிரபுதேவா, நயந்தாராவைப் பார்த்த போது,  கலா மாஸ்டர் என்ன விதமான சேவையை கலைத்துறையில் வழங்கி வருகிறார் என்பது புரிகிறது. கலாவின் சேவையை குஞ்சாமணி மட்டும் விரும்புவார். மானாட மயிலாட மர்மம் நிறைந்த ஒரு நிகழ்ச்சி. இதை ஒரு நாள் யாரேனும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தே தீருவார்கள்.

வெறும் 120 ரூபாய்க்கு விற்க வேண்டிய சிமென்ட், 360 ரூபாய்க்கும் மேலே விற்கப்படுகிறது? ஏன் ? அரசுகள் என்னசெய்து கொண்டிருக்கின்றன? அரசாங்கம் பெரும் கோடீஸ்வரர்களால் நடத்தப்படுகின்றன என்பதற்கு இந்த ஒரு சாட்சியே போதுமானது. எந்த அரசானாலும் மக்களை ஏமாற்றுவதும், அவர்களிடமிருந்து கொள்ளையடிப்பதும் நிற்கவே போவதில்லை. ஜன நாயகத்தின் பெயரால் மக்கள் சுரண்டப்படுகிறார்கள்.

கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் 1200 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று தமிழ் நாடு விவசாய சங்கத் தலைவர் சொல்லியிருக்கிறார். அவரின் பேச்சு ஊழல் நடந்திருக்கிறதோ என்று எண்ண வைக்கின்றது. ஒழுங்காக நடைபெற்றிருக்க வேண்டிய சர்க்கரை ஆலைகள் நஷ்டமடைகின்றன என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் ஆட்சியாளர்களையேச் சாரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

கர் நாடக அரசியல் கொள்ளையர்கள் காங்கிரஸ்ஸும், குமாரசாமியும், தேவகவுடாவும் மக்களை மடையர்களாக்கி வருகிறார்கள். இரும்புத்தாது மாஃபியாக்கள் குழு இறைக்கும் பணத்தினைக் கொண்டு கர் நாடகா மக்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் அடிக்கும் கூத்து இந்திய ஜன நாயகத்தின் கேவலமான மறுபக்கத்தைக் காட்டுக்கின்றது. ஒரு எம்யெல்லே விலை 25 கோடி ரூபாயாம். அரசியலின் இன்றைய நிலையைப் பார்த்தீர்களா?

குஜராத்தில் 24 இடங்களில் 22 இடங்களைப் பாரதீய ஜனதா, மோடி அரசாங்கம் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ்ஸின் அயோக்கியத்தனம் இத்தேர்தலில் எடுபடவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அவ்வளவுதான். மொத்தமாய் வாரிச் சுருட்டி விடுவார்கள்.

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய எம்பிக்கள் மீதான வழக்கு என்னாவாயிற்று என்பதைப் பற்றி அறிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று போடப்பட்டிருக்கிறது. வழக்கம் போல 25 வருடம் கழித்து தீர்ப்பு வரும்.

நமது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பாருங்கள். நம்மை ஆளும் அரசியல்வாதிகளின் போக்கினைப் பாருங்கள். இது தானா ஜன நாயகம்? இதுதானா மக்கள் ஆட்சி???

– விடுதலையும் சுதந்திரமும் எழுதியது.


பெண் கொத்திப் பறவை தொடர் 3 – அரசியல்வாதியின் கதை

ஒக்ரோபர் 23, 2010

இந்தக் கதையை எழுத ஆரம்பிக்கும் போதே ஒரு புரோமோவை போட்டு விடலாம் என்று நினைத்தேன். ஏனென்றால் கதை உண்மையாக இருந்து விட்டால் தேவையன்றி பிறரின் பிரச்சினையில் தலையிட்டது போல ஆகி விடுமே என்பதால் இந்தப் புரோமோ. பெண் கொத்திப் பறவை என்பது ஒரு சிறுகதைத் தொடர். இத்தொடரில் வரும் கதா பாத்திரங்களும், குஞ்சுவும் ஒரு கற்பனையே என்பதை முதலில் தெரிவித்து விடுகிறேன். சம்பவத்தை ஒட்டிய வாசகர்களின் அவதானிப்புகள் பலரோடு ஒத்துப் போனால் அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இனி கதை.

தலைவர் மதிய உணவு சாப்பிட வீட்டுக்கு வருகிறார் என்றவுடனே இவருக்கு தலைகால் புரியவில்லை. இனிமேல் நமக்கு கட்சியில் ஏறுமுகம்தான் என்று சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் திளைத்தார். மனைவியிடம் தலைவருக்குப் பிடித்த வித விதமான உணவுகளைப் பட்டியலிட்டு சீக்கிரம் தயார் செய் என்றுச் சொன்னார்.

இவரின் சந்தோஷம் கண்டு மனைவிக்கும் உற்சாகம் ஏற்பட்டது. மதியம் தலைவர் வந்தார். சாப்பாட்டு மேஜையில் தன் அருமைத் தொண்டன் எதிரே நிற்க, தொண்டனின் மனைவி பரிமாற சாப்பிட ஆரம்பித்தவருக்கு, தொண்டனின் மனைவி மீது சற்று ஆசை வந்து விட்டது. பரிமாற அருகில் வந்தவளின் சேலையை மிதித்தார். சிக்னல் கண்டு அந்த மறப் பெண் மருண்டாள். பின்னர் வெகுண்டாள். இதைக் கண்ட தொண்டரோ நம்ம தலைவர்தானே, அருகில் சென்று பரிமாறு என்றார். மீண்டும் சேலை மிதிப்புச் சம்பவம் தொடர, அப்பெண் குமுறியபடியே பரிமாறி விட்டுச் சென்றார். தலைவரும் உணவருந்தி விட்டுச் சென்று விட்டார்.

ஆயிற்று நான்கு நாட்களாக தலைவரிடமிருந்து போனே வரவில்லை. இவரும் செய்யவில்லை. ஐந்தாவது நாள் பிரச்சினைகள் ஆரம்பித்தது. இன்னதான் என்று சொல்லமுடியாது. அனைத்து வகையிலும் பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் வந்தன. இவருக்கு நன்கு புரிந்து விட்டது.

பதவிக்காக மனைவியை விட்டுக் கொடுக்க இவருக்கு மனமில்லை. அந்த மறக்குலத்துப் பெண்ணுக்கோ மரணமே மேல் என்றாகி விட்டது. பிரச்சினைகள் மேலும் மேலும் முளைக்க, சமாளிக்க முடியாமல் திணற ஆரம்பித்து விட்டார் இவர்.

அடுத்த கட்ட முயற்சியாக, வேறொரு கட்சியில் தஞ்சமடைந்து விட்டார். மனைவியும் தப்பி விட்டார். மானமும் தப்பி விட்டது.

தலைவர் கட்சிக்கு மட்டுமே தலைவராகாமல், தன் கட்சித் தொண்டனின் மனைவிக்கும் தலைவராக முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. ஆனாலும் இக்கதை இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்றுச் சொல்கின்றார்கள்.

கதை முடிந்தது.

இனிமேல் தான் மேட்டரு. இக்கதை விரைவில் வெளியாகப் போகும் ஒரு திரைப்படத்தில் காட்சியாய் வர விருக்கிறது என்று என்னிடம் சொன்னார் ஒரு புண்ணியவான். அது எந்தப் படம்? யாருக்குத் தெரியும்? சும்மா தோணியது. எழுதிவிட்டேன்.

இனி அந்த தலைவர் யாரு? அந்தத் தொண்டன் யாரு என்று உங்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சிறுகதை என்று சொன்னேன். ஆனால் நீங்கள் கேட்கவா போகின்றீர்கள்? நான் சொன்னா நீங்கள் கேட்க, நானென்ன அரசியல்வாதியா? இந்த அரசியல்வாதியால் இன்னும் அரசுப் பதவிக்கு வரமுடியவில்லை என்பது தான் சோகம்.

– குஷியுடன் உங்கள் குஞ்சு

 


தொட்டுக்கொள்ள – 1

ஒக்ரோபர் 22, 2010

அரசியல் தொடர்புகள் உடைய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொல்லிய சில சம்பவங்கள் ஆச்சரியமாய் இருந்தது.

பதிமூன்று வயதிலேயே மாணவர் மன்றம் என்ற அமைப்பைத் துவக்கியவர் கலைஞர் என்றார். ஒவ்வொரு அப்பாக்களும் தன் மகன் கலெக்டராக ஆக வேண்டும், எஞ்சினியராக வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் திரு முத்துவேலர் அவர்கள் தன் மகனை எப்படி வளர்த்திருக்கிறார் பாருங்கள் என்றுச் சொன்னார்.  ஆக முத்துவேலர் அவர்கள் வெகு தெளிவாக திட்டமிட்டு கலைஞரைத் தலைவராக வர,வளர்த்திருக்கிறார் என்றும் சொன்னார். ஆச்சரியம்தான்.

தமிழக காவல்துறையில் போஸ்டிங் பிரச்சினை இப்போது உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று விட்டது. ஆட்சிக்கு வேண்டியவர், விரும்புவர், விரும்பாதவர் என்று ஆரம்பித்தால் சீனியாரிட்டி என்ற விதி இல்லாமல் போய் விடும். இது அதிகாரிகள் மட்டத்திடையே மன உளைச்சலைக் கொடுத்து விடும். ஆட்சியாளர்கள் இது பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்க வேண்டும். பாகுபாடு தேவையில்லை.

படிக்காதவர்களால் ஆக்சிடெண்டுகள் ஏற்படுகின்ற என்றுச் சொல்லி, எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் தான் டிரைவிங் லைசென்ஸ் என்ற சட்ட திருத்தம் தேவையற்றது. படித்தவர் மட்டும் தான் டிரைவராக வேண்டுமென்றால் இதே போல டிகிரி படித்தவர் மட்டுமே அரசியல்வாதியாக வர வேண்டுமென்று சட்டம் கொண்டு வரலாம். சாதாரண கார் ஓட்டுவதற்கே படிப்புத் தகுதி வேண்டுமென்றால், ஆட்சி செய்ய நல்ல படிப்பு அல்லவா வேண்டும். யாராவது பொது நல வழக்கு வாதிகள் ஒரு வழக்கை நீதிமன்றத்தில் தட்டி விடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம்.  படித்தவர்கள் செய்யும் ஆக்சிடெண்டுகள் தான் அதிகம். அதிலும் குடிபோதையில் மிக அதிக ஆக்சிடெண்டுகள் நடக்கின்றன. இது ஒரு துக்ளக் சட்டம்.

அறக்கட்டளை என்பது மக்களுக்கு சேவை செய்ய துவக்குவது. பொது மக்கள் சேவைக்கென்று துவக்கப்பட்டு, அதன் கணக்கு வழக்குகள் சரியாகப் பராமரிக்கப்படுகிறதா என்று அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அது எப்படி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றே தெரியவில்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றுச் சொல்லி இருக்கிறார்கள். முரண்பாடுகளின் மொத்த உருவமாக தகவல் உரிமைச் சட்டம் திகழ ஆரம்பிக்கிறது.  ஜன நாயகத்தின் குரல்வளையை அதிகாரம் நெறிக்கின்றது போலும்.

காமன் வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழலை பத்திரிக்கைகள் வாயிலாக தெரிந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கிறார்கள். பத்திரிக்கைகள் சொல்லவில்லை என்றால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். சாதாரண ஊழலுக்கே கைது நடவடிக்கைகள் பாயும். கோடிக் கணக்கில் ஊழல் செய்தவர்களை ஒப்புக்கேனும் கைது செய்யவில்லை.  இன்னும் அவர்கள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்த பணம் வேறு அவர்கள் கையில் இருக்கிறது. சாட்சிகளைக் கலைத்து விடக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். மேற்படிச் சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்த ஊழல் பிரச்சினை ஊற்றி மூடப்படும் என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் ஆட்சியின் மைல்கல் இது என்றே தோன்றுகிறது.

– பஞ்சரு பலராமன்


உங்களை ஆசுவாசப்படுத்த ஒரு பதிவு

ஒக்ரோபர் 21, 2010

அரசியல் சாக்கடைப் பன்றிகளுக்கு இடையில் ஒரு மனிதர். இக்கட்டுரையினை வெளியிட்ட ஜூவிக்கு ஒரு நன்றி. ஊழல், கொலை, கொள்ளை, திருட்டு, அதிகார துஷ்பிரயோகம் இவற்றில் ஊறித்திளைக்கும் தமிழக அரசியல்வாதிகளில் இப்படியும் ஒருவர் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் சற்றே மனதிற்கு சந்தோஷம் தரும் செய்தி அல்லவா. இதோ அந்தச் செய்தி.

சைக்கிள் செயின் நீளத்தில் தொங்கும் தங்கச் சங்கிலி, பளபளா நிறத்தில் முரட்டுபிரேஸ்லெட், கார், பங்களா… ‘மக்கள் பணி’ ஆற்றிவரும் இன்றைய கவுன்சிலர்களே இப்படிப்பட்ட அடையாளங் களோடுதான் வலம் வருகிறார்கள். ஆனால், மருத்துவராகவும், நாடாளுமன்ற உறுப்பி னராகவும் இருக்கும் ஒருவர் ஒழுகும் குடிசை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா!

சென்னையை ஒட்டிய திருவள்ளூர் நாடாளு மன்றத் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. எம்.பி-யான டாக்டர் வேணுகோபால்தான் அந்த எளிமையான மனிதர். பெரம்பூர் லோகோ ஜி.கே.எம். காலனியில் இருக்கிறது எம்.பி-யின் குடிசைக் குடியிருப்பு. வீட்டின் முன்புறத்தில் இருக்கும் வெட்டவெளியிலேயே தகரக் கொட்டகை அமைத்து தினமும் பொது மக்களை சந்திக்கிறார். நாம் சென்றிருந்த நேரம், நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் வீடு இழந்த நெமிலிச்சேரி மக்கள் தங்கள் குறைகளை எம்.பி-யிடம் சொல்லி கதறிக் கொண்டிருந்தனர்.

”எம்.பி-யாகிறதுக்கு முன்னாலேயே முழுநேர டாக்டரா இந்தத் தொகுதி முழுக்க அறிமுகமானவர்தான் வேணுகோபால். கொடுங்கையூரில் இருக்கிறது அவரோட கிளினிக். அதிகபட்ச ஃபீஸே 25-தான்… ஏழைப்பட்ட சனங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் தன்னோட செலவிலேயே மருந்து மாத்திரையையும் வாங்கிக் கொடுப்பார். இப்பவும் இங்கே வந்திருக்கிற மக்கள்ல பாதிப்பேர் தங்களோட சொந்தப் பிரச்னைகளைச் சொல்ல வந்திருக்காங்கன்னா, மீதிப்பேர் தங்களோட வியாதிகளுக்காகத்தான் வந்திருக்காங்க…” என்று எம்.பி-யின் இன்னொரு முகத்தைக் காட்டி புளகாங்கிதம் அடைகிறார்கள் ஏரியாவாசிகள்.

மகளின் இதய ஆபரேஷன் செலவுக்கு வழி கேட்டு வந்தவருக்கு பிரதமர் நிவாரண உதவித் தொகையின் கீழ் நிதி வழங்குவதற்கான ஏற்பாடு, பட்டா கேட்டு முறையிட்ட திருமுல்லைவாயல் நரிக்குறவர்களுடன் ஆலோசனை…. என்று அடுத்தடுத்துபடுபிஸியாக இருந்தார் எம்.பி.! அவரது குடிசை வீட்டிலோ வந்திருப்பவர்களுக்கு சுடச்சுட காபி தயாராகிக்கொண்டு இருந்தது.

”நந்தனம் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போதே அ.தி.மு.க-வின் மாணவர் அணித் தொண்டராகக் கட்சி வாழ்க்கையை ஆரம்பித்தவர். மிகுந்த பொருளாதாரச் சிக்கலுக்கிடையே பகுதி நேர வேலைகள் பார்த்துக் கொண்டே எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் பொறுப்பு அதிகம். உடன் பிறந்த மூன்று தம்பிகள், மூன்று தங்கைகளையும் படிக்க வைத்துக் கல்யாணமும் செய்துவைத்தார்.

வேலை காரணமாக இரண்டு தம்பிகளும் வேறு ஏரியாவில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட… இப்போது எம்.பி. குடும்பமும் அவரது தம்பி குடும்ப மும் இந்த ஓட்டு வீடு, குடிசை வீடு இரண்டிலும் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். 2004-லேயே புது வீடு கட்டுவதற்காக கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தார் டாக்டர். ஆனால், அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென்று கட்சி இவருக்கு ஸீட் ஒதுக்கவே பணத்தை எல்லாம் செலவழித்து தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அதன் பின்பு பழையபடி கட்சிப் பணி, மருத்துவத் தொழில் என்று இருந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 2008 தேர்தலில் அம்மா ஸீட் ஒதுக்கினார்கள். தொகுதி முழுக்க இலவச மருத்துவ முகாம் நடத்துவது, கட்சிக்காகக் கடுமையாக உழைப்பது என்று எளிமையும் நேர்மையுமாக சுற்றிச் சுழன்ற டாக்டரை மக்களும் எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்!” என்று ஒரு டாக்டர், எம்.பி.யான கதையை உணர்ச்சிபூர்வமாக விளக்கினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

”எங்கே போறதா இருந்தாலும் ரயில்லதான் போவார். டெல்லிக்கு மட்டும்தான் ஃப்ளைட்டுல போவார். ரயில் வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வசதியாக இப்போதுதான் பேங்க் கடனில் ஒரு கார் வாங்கி இருக்கிறார். எவ்வளவோ பேருக்கு வீடு, மனை, பட்டா… வாங்க உதவிகள் செய்கிறார். ஆனாலும் தனக்குன்னு ஒரு வீடு கட்ட இதுவரையிலும் யோசிக்கவே இல்லை. கேட்டா…. ‘பேங்க்ல லோன் கேட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்’னு சொல்றார்!” என்கிறார்கள் அக்கம்பக்கக் குடும்பத்தினர்.

வேணுகோபாலின் வீட்டை வலம் வந்தோம். சின்னஞ்சிறிய அந்தக் குடிசை வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சமையலறை, அருகிலேயே தங்கி ஓய்வெடுக்க வசதியாக ஒரு கட்டில்… எதிரில் அமைந்திருக்கும் சிறிய ஓட்டு வீட்டின் ஒரு பகுதியில் எம்.பி-யின் தாயாருக்கு ஒரு கட்டில். மொத்தக் குடும்பத் தினரும் பயன்படுத்த ஒரேயரு பழைய பீரோ.

பொதுமக்கள் சந்திப்பை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த வேணுகோபால்,

”என்ன சார் என் வீட்டை இவ்வளவு ஆச்சர்யமா பார்த்துட்டு இருக்கீங்க…?” என்றபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

”ஒரு மருத்துவரா நோயாளிகளை மட்டுமே திருப்திப்படுத்திக்கிட்டு இருந்த என்னை, எம்.பி-யாக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புத் தந்தாங்க அம்மா. இதுவே எனக்குப் போதும். மற்றபடி இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? இந்த வீட்டுலயிருந்துதானே நான் டாக்டருக்குப் படிச்சு இன்றைக்கு எம்.பி-யாகவும் ஆகியிருக்கேன்! என்ன… இந்த மழையில ஓட்டு வீடு மட்டும் அங்கங்கே கொஞ்சம் ஒழுகிச்சு. கெயிட்டி தியேட்டர் பக்கத்துல 300 கொடுத்து பழைய விளம்பர ஃப்ளெக்ஸ் ஒண்ணை வாங்கிட்டு வந்து ஓட்டு மேல போர்த்திவிட்டேன். இப்ப பிரச்னை எதுவும் இல்லை!” என அவர் பேசிக்கொண்டே போக… நாம் இருப்பது தமிழ்நாட்டில்தானா எனக் கிறுகிறுத்துப் போனோம்.

”எப்படி சார்… இவ்வளவு எளிமையா வாழுறீங்க..?” என அடக்கமுடியாத ஆச்சர்யத்தோடு நாம் கேட்க… ”இருக்க இடம் இல்லாம எத்தனையோ பேருங்க ரோட்டோரம் ஒண்டிக் கிடக்கிறாங்க… அவங்களோட ஒப்பிட்டா நான் பெரிய பணக்காரனாச்சே சார்! வசிக்கிற இடம் எப்படி இருந்தால் என்ன… வாழுற முறை நல்லா இருந்தா சரிதானே சார்…” என்றார் வெகு இயல்பாக.

இந்த வார்த்தைகளை இந்தியாவில் உள்ள அத்தனை அரசியல்வாதிகளுக்கும் அச்சடித்துக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது நமக்கு!

– த.கதிரவன்

 


%d bloggers like this: