பெட்ரோலிய விலை மர்மம்

இந்திய அரசு மானியம் மானியம் என்றும், பெட்ரோலியத்துறை நிறுவனங்கள் நஷ்டமடைகின்றன என்றும் அறிக்கைகள் வெளியிடுவதை நாமெல்லாம் செய்திதாள்களில் படித்திருக்கிறோம்.

மான்யம் என்பது அதிக விலைக்கு வாங்கிய பொருளை குறைந்த விலைக்கு விற்கும் போது ஏற்படும் இழப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்வது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பெட்ரோலியத்துறையில் நஷ்டம் ஏற்படுவதே இல்லை. காரணம் இறக்குமதியாகும் குரூடு ஆயில் மீது விதிக்கப்படும் வரிகள் தான் அதிகம். ஓபெக் 2004 லிருந்து 2008 வரை விற்பனை செய்த கச்சா எண்ணெய்யின் மதிப்பு 3,346 பில்லியன் டாலர்கள். இதே காலகட்டத்தில் ஜி7 நாடுகள் விதித்த பெட்ரோலிய வரிகள் மூலம் பெற்ற வருவாய் 3418 பில்லியன் டாலர்கள்.

பெட்ரோல் விலையேற யார் காரணம் என்பதை தற்போது அறிந்து கொண்டிருப்பீர்கள். வரி என்ற பெயரால் மக்களிடமிருந்து கொள்ளை அடித்து,  ஏக போக வாழ்க்கை வாழ்வது அரசியல்வாதிகளும், மக்கள் பணியாளர்களாகிய அரசு அலுவலர்களும் தான் என்பதை நான் சொல்லியா உங்களுக்குத் தெரியப்போகிறது?

அதற்கொரு உதாரணத்தை இப்போது பார்ப்போம். எம்.காம் பட்டம் பெற்ற டிரைவரின் சம்பளம் வருடம் 22 லட்சரூபாய். 5ம் வகுப்பு படித்த ஹெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளரின் வருடச் சம்பளம் 8,56,731 ரூபாய். அதாவது மாதம் 70 ஆயிரத்துக்கும் மேலே. எட்டாம் வகுப்பு படித்த அட்டெண்டரின் வருடச் சம்பளம் 45 லட்ச ரூபாய்க்கும் மேலே. இவர்கள் எல்லாம் யார் என்றா கேட்கின்றீர்கள்? இவர்கள் அனைவரும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் பணியாளர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசின் பட்ஜெட்டில் மான்யம் என்று எந்த நிதியும் பெட்ரோலியத்துறைக்கு ஒதுக்கப்படுவதில்லை. ஆனால் மான்யம் அளிக்கப்படுவதாக கணக்கு காட்டப்படுகிறது.

மான்யம் எப்படி வழங்கப்படுகிறது தெரியுமா? விற்க வேண்டிய விலை என்று இவர்களாகவே ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டியது. அதில் நஷ்டம் என்றுச் சொல்லி மான்யம் பெற்றதாக கணக்கு காட்ட வேண்டியது. எப்படி இருக்கிறது பாருங்கள்?????

தனியார் பெட்ரோலியத்துறையில் நடக்கும் கோல்மால்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ரிலையன்ஸ் ஏன் பெட்ரோலியத்துறையில் அடியெடுத்து வைத்தது என்று தற்போது அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன்.

மேற்படி கட்டுரை எஸ்.புஷ்பவனம் என்பவர் துக்ளக்கில் எழுதியதிலிருந்து காப்பி அடித்தது. நன்றி துக்ளக் மற்றும் திரு புஷ்பவனம் அவர்களுக்கு.

விஷயத்தைச் சொல்லி விட வேண்டுமென்ற ஆசையில் அக்கட்டுரையில் முக்கியமான பாயிண்டுகளை மட்டும் எடுத்து எழுதியிருக்கிறேன்.  அரசாங்கம் மக்களை ஜன நாயகம் என்ற பெயரில் வதைத்து வருவதைத்தான் இப்போது படித்தோம். பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தால் உணவுப் பொருட்கள் விலை உட்பட அனைத்து விலைகளும் குறையும். மக்கள் சந்தோஷமாயிருப்பார்கள். ஆனால் காங்கிரஸிலிருந்து, பிஜேபி வரை எவரும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைப்பது இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியினையும் சேர்த்து தான் சொல்கிறேன். அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறையே இல்லை. ஏனென்றால் மக்கள் கஷ்டப்பட்டால்தான் அவர்களின் அரசியல் செயல்பட முடியும். அரசியல்வாதிகள் என்போர்தான் அரக்கர்களாய் மாறி மக்களை வதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நான் சொல்லியா நீங்கள் அறிந்து கொள்ளப்போகின்றீர்கள்.

:- விடுதலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: