திமுக ஆட்சியை வெறுக்கும் பெற்றோர்கள்

அனாதி அவர்களுக்கு,

நம்ஸ்காரம். நேற்றைய செய்தி தாளில் வெளிவந்த கோர்ட் உத்தரவைக் காட்டி பெற்றோர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்திருக்கின்றனர் கல்வி கொள்ளை கூட்டங்கள். வெறும் 6000 முதலாளிகளுக்கு ஆதரவாய், 60 லட்சம் பெற்றோர்களை கண்ணீர்க் கடலில் தள்ளிய கோர்ட்டின் நடவடிக்கை இந்தியாவிலே இது ஒன்றாகத்தான் இருக்க முடியும். சட்டம் அப்படி இருக்கிறது. சட்டத்தின் படி நீதிபதிகள் நடந்து கொள்கின்றார்கள். மக்களாவது மண்ணாங்கட்டியாவது? சட்டம் தான் இந்தியாவில் பெரியது அல்லவா?

சமூக குற்றவாளிகளுக்கு ஆதரவாய் சட்டங்கள் இருக்கின்றன. பெற்றோர்களை நேரடியாகப் பாதிக்கும் இந்த விஷயத்தில், திமுக அரசு கண்டும் காணாதது போல நடந்து கொள்வது பற்றி வேதனைதான் மிஞ்சுகிறது. அரசின் உத்தரவை கோர்ட் நிறுத்தி வைப்பது ஒன்றும் புதிய விஷயமில்லை என்றாலும், அதனால் பாதிக்கப்படுவது நேரடியான முறையில் பொதுமக்கள் என்பதை எவரும் கவனத்தில் கொள்ள மறுக்கின்றார்கள் என்பதுதான் கொடுமை.

பெற்றோர்களின் சார்பில் யார் வாதாடப்போகின்றார்கள்?அன்றாடச் சாப்பாட்டிற்கே தத்தளிக்கும் பெற்றோர்கள் என்னதான் செய்ய முடியும்? பள்ளி விளம்பரத்துக்காக கோடிக் கணக்கில் செலவு செய்யும் பண முதலாளிகள், அந்த முதலாளிகளுக்கு ஆதரவாய் அரசு மற்றும் சட்டங்கள் என்று இருக்கும் போது, சாதாரண சாமானியன் என்னதான் செய்ய முடியும்?

டிரஸ்ட் மூலம் பதிவாகும் பள்ளிகள் லாப நோக்கமின்றி இயக்கப்படுவதாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அட்மிஷன் டொனேஷன், பில்டிங் டொனேஷன், கல்விக் கட்டணங்கள், புத்தக கட்டணங்கள், உடைக்கான கட்டணங்கள் என்று சாமானியன் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கும் மேலாக பள்ளிக்கல்விகொள்ளைக் கூடங்கள் வசூலித்து விடுகின்றன. மேலும் ஒன்றினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பள்ளித் தாளாளர்களைச் சென்று பாருங்கள். ஒவ்வொருவரிடமும் அட்லீஸ்ட் பென்ஸ் காராவது இருக்கும். பணத்தில் குளிக்கும் கொள்ளைக்கூட்டங்களை தமிழக அரசு தன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காது.

தமிழக அரசிடம் அனுமதி பெற்று ஆரம்பிக்கப்படும் பள்ளிகள், அரசையே எதிர்த்து வருகின்றன. இதற்கு அரசு அதிரடியான நடவடிக்கைகள் எடுத்தால் தான் இந்த பள்ளிக்கொள்ளைக்கூடங்களை கட்டுப்படுத்த முடியும். ட்ரஸ்ட் மூலம் நடைபெறும் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இந்தக் கட்டணத்தில் செயல்படாத பள்ளிகளை அரசே ஏற்று நடத்த நேரிடும் என்றும் அறிவிக்க வேண்டும். அதுவுமின்றி, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடியாது என்றும், தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு பணியமர்த்தும் போது, தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடாது என்றும் அறிவிக்க வேண்டும். அல்லது தமிழகத்தில் முற்றிலுமாக தனியார் பள்ளிகளை ஒழித்து விட வேண்டும். அனைத்துக் கல்விக்கூடங்களையும் அரசுடமையாக்க வேண்டும்.  அல்லது அரசு அலுவலர்களின் குழந்தைகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டுமென்ற உத்தரவு வந்தால் கூட போதும். தனியார் பள்ளிகள் தானாகவே ஒழிந்து விடும்.

கோவிந்தராஜன் கமிட்டி என்பது வெறும் கண் துடைப்பு என்றாகி விட்டது. ஓட்டுச்சாவடிக்குச் செல்லும் என்னைப் போன்ற பெற்றோர்கள் மனதில் அரசின் இந்த கையாலாகத தனம் பதிந்து போய் விடும். நிச்சயம் என்னைப் போன்று பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்களின் ஓட்டை அரசுக்கு எதிராகத்தான் பதிவு செய்வார்கள். இதே ஜெயலலிதாவாக இருந்தால் இன்னேரம் அனைத்துக் கல்விக் கூடங்களையும் அரசுடைமையாக்கி இருப்பார். ஆனால் இந்த முதல்வர் அப்படி ஏதும் செய்யவே மாட்டார்.

தனியார் பள்ளிக்கூடங்களுக்கு ஆதரவாய் களமிறங்கும் வக்கீல்கள் ஒரு தடவை பெற்றோர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். சட்டங்கள் கொடூரமானவையாக மாறி மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.

பேய் ஆட்சி நடக்கிறது. நம்பி ஓட்டுப் போட்டோம். நம்ப வைத்து கழுத்தை அறுக்கின்றார்கள். கடவுள் பெரியவன். தற்போதைக்கு சட்டத்தையும், நீதியையும், அரசையும் நம்பிப் பலனே இல்லை. கடவுளை நம்புவதைத் தவிர.

எனது வேதனைக் கடிதத்தை வெளியிட்டு ஆவண செய்யுமாறு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

ராஜேந்திரன்,

சென்னை

———————————– 0 0 0 0 0 ————————————–

அன்பின் ராஜேந்திரன் அவர்களே,

உங்கள் கடிதத்தை வெளியிட்டு விட்டோம். ஆனால் எதெற்கெடுத்தாலும் அரசைக் குற்றம் சொல்லாதீர்கள். பெற்றோர்களின் கண்ணீரைத் துடைக்கும் பொருட்டு தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். அதுவுமின்றி தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை,ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே செய்து வருகின்றன. ஆட்சியில் ஊழல், அதிகார மீறல்கள் இருக்கத்தான் செய்யும்.  அவைகளைத் தவிர்க்க முடியாது.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, தமிழக அரசு தேர்தலை எதிர் நோக்கி இருக்கும் இந்த நேரத்தில், பொதுமக்களுக்கு ஆதரவாய்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்றுச் சொன்னார்கள். அரசு ஒரு கொள்கை முடிவெடுத்து விட்டால், கோர்ட் அதில் தலையிட முடியாது. கோர்ட்டை விட அரசு அதிக அதிகாரம் கொண்டது. உங்களது இந்தக் கடிதம் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அரசு இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

– விடுதலை

3 Responses to திமுக ஆட்சியை வெறுக்கும் பெற்றோர்கள்

 1. sam சொல்கிறார்:

  i agree with Mr. viduthalai lets not lose our hope.
  cheer up Mr rajendran lets wait for the future.

 2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

  ITHAE KARUNAAKANITHI MUNBU T V S , PIONEER, RAAMAN&RAAMAN,ABT BUS COMOANY KALAI NAATTU UDAMAI AAKKAVILLAIYAA? KZHTHTHA PANAM LANJAMAAKA VAANKUVATHU KARUNAAKANITHIKKU KAI VANTHA KALAI!! IVARATHU AATCHI OZHINTYHAALTHAAN NALLATHU!!

 3. sathish சொல்கிறார்:

  neeya naana pathivu seitha karuthkalai yaaravathu govt ku court ku eduthu katinale pothum kalvu kollaihal purindhu vidum

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: