தமிழ் திரையுலகம் வெறுக்கும் திமுக ஆட்சி

திமுகவினரின் நான்கு திரைப்படக்கம்பெனிகளால் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியிடப்படாமலே கிடக்கின்றன என்றும், இந்த நான்கு திரைப்பட கம்பெனிகள் மட்டுமே கல்லாக் கட்டுவதாகவும், கோடம்பாக்கத்தில் ஆங்காங்கே பேசிக் கொள்கின்றனர். நிஜமா என்பது தெரியவில்லை.

சினிமா உலகில் நெருங்கிய தொடர்பு கொண்ட பத்திரிக்கையாளரிடம் விசாரித்த போது மேற்படிக் கம்பெனிகளால், தமிழக சினிமா தயாரிப்பாளர்கள் பலர் மிகவும் வேதனை கொண்டுள்ளதாகவும், பலரின் திரைப்படங்கள் வெளியிடப்படாமல் பெட்டிக்குள் முடங்கிப் போய் கிடப்பதாகவும், வாழ்வா சாவா என்ற நிலைக்கு பலர் வந்து விட்டதாகவும் சொன்னார்.

திரைப்படத்துறையைத் தங்களது ஏகபோக கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டுமென்று திமுகவினர் முயற்சிப்பதாகவும், ஒத்துவராதவர்களை ஓரங்கட்டவும் முயற்சிகள் நடப்பதாகவும் சொன்னார்.

இதையெல்லாம் கவனிக்கும் போது திமுகவின் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழுகிறது. பிசினஸில் எதிரிகளைச் சம்பாதிப்பதை விட, எதிரிகள் இல்லாமல் இருக்கச்செய்வதே சாலச் சிறந்தது. அடக்குமுறையினைக் கையாண்டு வெற்றி பெற்றவர்களின் கதைகளை நாம் எல்லோரும் படித்திருக்கிறோம். பார்த்தும் வருகிறோம். ஒரு இந்தியக் கம்பெனியின் கதையைப் பற்றி விரைவில் எழுதப்போகிறோம். அதிரடிக்கும், பித்துப் பிடிக்க வைக்கும் வியாபார தந்திரங்களால் வெற்றிக் கொடி கட்டி வரும் இந்தக் கம்பெனியின் வரலாற்றை படிக்கும் ஒவ்வொரு வாசகரும் இப்படியும் நடக்குமா என்றெல்லாம் நினைக்கத்தான் போகின்றீர்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு காலத்தில் ஓட்டுக்கு ஐந்து ரூபாய் கொடுத்த தமிழக காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலை, நாளைக்கு திமுகவிற்கு நேரிடலாம். ஆட்சியும், அதிகாரமும் இருக்கும் வரையிலும் தான் ஆடலாம். அது வேறொருவர் கைக்கு மாறினால், அடங்கிக் கிடந்தவர்கள் எல்லோரும் ஓரணியில் திரண்டால் பெரும் பிரச்சினைகள் வந்து விடும்.

நாமும் வாழனும், பிறரையும் வாழ விடனும் என்று இருக்க வேண்டும். தான் மட்டுமே வாழ வேண்டுமென்பது மாபெரும் அழிவுக்கு ஆரம்ப விதையாகி விடும்.

-: சுதந்திரமும் விடுதலையும்

One Response to தமிழ் திரையுலகம் வெறுக்கும் திமுக ஆட்சி

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    ELLAAM SARITHAAN!! OTTU POODA KAASU KAETKUM MAKKALL MATHTHIYIL INTHA SEITHI EDUPADUMAA??? ELLAA ETHIR KATCHIKALUM SAERNTHU ETHIRTHAALTHAAN ORALAVU JEIKKA MUDIYUM, SEIVAARKALAA???

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: