ரஜினி ஒரு சந்தர்ப்பவாதியா?

எனது பதிவை எதிர்த்து அனாதி எழுதியிருக்கிறார். அது அவரின் கருத்து. ஆனால் கார்பொரேட் அளவுக்கு என்னால் சிந்திக்கவும் முடியாது. அது எனக்கு தெரியவும் தெரியாது.

ஒரு வாசகர், என்னைத் திட்டி பின்னூட்டமிட்டிருந்தார். அதை வெளியிட வேண்டுமென்ற ஆசைதான். இருப்பினும் அவரின் முட்டாள்தனம் வெளிப்பட்டு விடுமே என்பதால் வெளியிடவில்லை. நாங்கள் வாசகர்களை உயிராய் மதிப்பவர்கள். கோபத்தில் எழுதும் எழுத்துக்களும், பேசும் பேச்சுக்களும் அர்த்தமில்லாதவை.

அந்த வாசகரின் பின்னூட்டத்தில் எத்தனை கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோரையும் அழைக்க முடியுமா என்று கேள்வி கேட்டிருந்தார். எனக்கு அறிவே இல்லை என்றும் எழுதி இருந்தார். அன்புமிக்க அந்த வாசகர் அவர்களே,  இதோ குமுதத்தில் வெளியான ரஜினி பற்றிய செய்தியைப் படித்து விடுங்களேன்.

இதற்கு என்ன எழுதப்போகின்றீர்கள் ?

அடுத்த ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். தனது எந்திரன் படம் மாபெரும் வெற்றியடைய வேண்டுமென்று ரஜினி எதிர்பார்க்கிறார். படம் வெற்றியடைய வில்லை என்றால் ரஜினியின் சகாப்தத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடித்து வைத்து விடும். எதிர்காலத்தில் தங்களுக்கு ரஜினியால் எந்தப் பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்ற கவனம், அவர்களின் மனத்தில் இருக்கலாம்.

ரஜினி ரசிகர்களை தன் மகள் திருமணத்திற்கு வர வேண்டாமென்று அவசரப்பட்டு அறிவித்து விட்டார் என்றும், அவரின் நலன் விரும்பிகள் எந்திரன் திரைப்படம் வெளிவரும் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பின் காரணமாய் ரஜினியின் படம் பாதிப்படைந்து விடும் என்பதாய் கருத்துச் சொல்லி இருக்கின்றார்கள். சன் பிக்சர்ஸின் மாய வலையில் தான் சிக்கிக் கொண்டதை லேட்டாக அறிந்திருக்கிறார் போலும். எங்கே தன் கதையும் விஜய் போல ஆகிவிடுமோ என்ற கவலையில் தன் ரசிகர்களின் மீது அன்பைப் பொழிய, விருந்து என்ற அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் என்பது தான் உண்மை.

தன் படம் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக இதற்கு முன்பு பல்வேறு சமரசங்களை மேற்கொண்டவர் ரஜினி. அந்தச் சமரசங்களில் பாதிக்கப்பட்டவர்கள், இவரை நம்பிக் களத்தில் இறங்கிய ரசிகர்கள். ஹீரோ பிறருக்காக வாழ்வதாக காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் தனக்காக மட்டுமே வாழ்வார்கள் என்பது முற்றிலும் உண்மை. உணர்ந்தவர்களுக்கு இவர்களின் மீதான மாயை மோகம் விலகும்.

-: பஞ்சரு பலராமன்

இனி குமுதம் கட்டுரை

ரஜினி ரசிகர்கள் சந்தோஷ அலையில் மிதந்துகொண்டிருக்கிறார்கள். ரஜினி மகள் திருமணம் அத்தனை பேர் ஆசியுடன் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டாலும், ரசிகர்களை திருமணத்திற்கு வரவேண்டாம் என்றது சூப்பர் ஸ்டாரையும் உறுத்தி யிருக்குமோ என்னவோ ‘மணமக்களை அறிமுகம் செய்து ரசிகர்களுக்கு விருந்து வைக்க திட்டம் உள்ளது’ என்ற அறிக்கை வந்திருக்கிறது. ஆனால், நடந்ததே வேறு என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.

இதற்காக ரஜினிக்கு இக்கட்டான நேரங்களிலெல்லாம் ஆலோசனை வழங்கும் வி.ஐ.பி.களும் ‘ரசிகர்களை சந்தியுங்கள்’என்று கூறி அதை எப்படியெல்லாம் நடத்தலாம் என்பது பற்றியும் ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.இதன்படி தான் விருந்து அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதைத்தொடர்ந்து, ரஜினி, அவரது நண்பர் முரளி, சுதாகர், சத்யநாராயணன் ஆகியோர் ரஜினி வீட்டில் கூட்டம் போட்டுப் பேசியிருக்கிறார்கள்.

தமிழகமெங்கும் திரண்டு வரும் ரசிகர்களைத் தாங்கும் அளவுக்கு இடவசதி,அடிப்படை வசதிகள் எல்லாம் செய்து தரஏற்ற பல இடங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித் திருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசல், ரசிகர்களின் பாதுகாப்பு இரண்டும் ரொம்பவும் முக்கியம் என்பதை திரும்பத் திரும்ப ரஜினி வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி சென்னை,மதுரை,கோவை என்று மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த ஊர்களிலிருந்து ரசிகர்களை வரவழைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இந்த ஐடியா ரஜினிக்குப் பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். விரைவில் அதற்கான நாள், இடம் பற்றிய தகவல் வரும் என்கிறார்கள். இப் போதே எல்லா மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் தயாராக இருக்கச் சொல்லியிருக் கிறார்கள்.

முதன்முதலாக தலைவனை பொதுமேடையில் பார்க்கப் போகும் ஆவலில் தீபாவளிக்குத் தயாராகும் உற்சாகக் குழந்தையாய் துள்ளிக் குதிக்கிறார்கள் ரசிகர்கள். விருந்தில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? கண்டிப்பாக பிரியாணி விருந்துதானாம்.முடிந்தால் ரசிகர்களுக்கு ருத்ராட்சம் தரும் ஐடியாவும் உண்டாம்.

வருகிற பன்னிரண்டாம் தேதி ‘எந்திரன்’படத்தின் விசேஷ ட்ரைலரை வெளியிடும் திட்டம் இருப்பதால் அதற்குப்பிறகே ரஜினி வீட்டின் விருந்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது..

நன்றி : குமுதம்

One Response to ரஜினி ஒரு சந்தர்ப்பவாதியா?

  1. ravikumarrang சொல்கிறார்:

    All Film Artistes are Cutthroats and loose character people. Watch movie in TV at free of cost if u need a time pass & think for ur future instead of wsting time

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: