தமிழகத்தின் நிர்வாகச் சீர்கேடு உண்மையா?

ஓய்வு பெற்ற ஐயேயெஸ் அதிகாரி முருகன் அவர்கள் துக்ளக்கி எழுதி வருக் கட்டுரைகளில், தமிழக அரசு நிர்வாகத்தினை கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறது என்று பல ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி எழுதுவார். இந்த வார துக்ளக்கில், சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் நடந்த விஷயங்களை பற்றி எழுதியிருக்கிறார்.

முதல்வர் இலவச டிவி, சமையல் கேஸ், நிலம், இன்ஸூரன்ஸ், பட்டா போன்றவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாக மட்டும் பேசி விட்டு, இந்தத் திட்டங்களால் மாநிலத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, இந்தத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டனவா என்பது பற்றியெல்லாம் பேசாமல் விட்டு விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை விளக்கமாய் எழுதியிருக்கிறார். இலவசக் காப்பீடு திட்டம் தனியாருக்கு அதிக நன்மையை அளிக்கிறது என்று பொருள்படும் படி எழுதியிருக்கிறார்.

தமிழகத்தின் நிர்வாகம், முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அடுத்த ஒரு சாட்சி இதோ கீழே இருக்கிறது. நிர்வாகத்தில் முறைகேடு இருக்கிறது என்று சொல்லிய அதிகாரியின் நிலையைப் பாருங்கள்.  தமிழகமெங்கும் இன்றைக்கும் இந்த நிலைதான் இருக்கிறது. அதிகாரிகள் அடக்கப்படுகிறார்கள். அல்லது அடங்க வைக்கப்படுகிறார்கள். உமா சங்கரின் விஷயத்தில் நடந்த விஷயமே அதற்கொரு உதாரணம். இதே போன்று எண்ணற்ற அடக்குமுறைகள் ஒவ்வொரு ஆட்சியிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? என்று யோசித்தால் என்றைக்குமே முடிவெடுக்க முடியாது என்பது தான் உண்மை. ஏனென்றால் நாம் வாழ்வது போலி ஜனநாயக நாட்டில். இந்தியாவில் இருக்கும் ஜனநாயகம் போலியானது. அது உண்மையானது இல்லை. எந்த ஒரு நாட்டிலும் ஜன நாயகம் என்பது போலியானதாகத்தான் இருக்க முடியும். ஜன நாயகம் என்பது வெறும் பேச்சு என்பதை சற்றே நிதானமாய் உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்.

:- பஞ்சரு பலராமன்

இனி அந்தச் சாட்சி செய்தி:

“அதிகாரிகள் மேல கிரிமினல் வழக்கு போடுவேன்னு எச்சரிக்கை  விட்டிருக்கார் பா” என அடுத்த மேட்டரில் நுழைந்தார் அன்வர்பாய்.

“யார் அந்த அரசியல்வாதிங்க…” எனக் கேட்டார் அந்தோணிசாமி.  “அரசியல்வாதி இல்லை பா… உணவுப் பொருள் வழங்கல்துறை கமிஷனரா இருந்த சிவகுமார் தான் இப்படி எச்சரிக்கை கொடுத்திருக்கார்… சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகள் சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் போன வாரம் நடந்திருக்கு… அந்த கூட்டத்தில தான் சிவகுமார் இப்படி ஆவேசப்பட்டிருக்கார்…” என்றார் அன்வர்பாய். “வேற என்ன பேசினாருங்க” எனக் கேட்டார் அந்தோணிசாமி. “ஆய்வுக்கூட்டத்தில அவர் பேசறப்ப, “என் 32 ஆண்டு சர்வீசில் சிவகங்கை மாவட்டத்தைப் போல மோசமான மாவட்டத்தை பார்த்ததில்லை… அந்த அளவுக்கு முறைகேடு, குழப்பம் நிறைஞ்சிருக்கு… இது சம்பந்தமா பதினைஞ்சு நாட்களுக்குள் அறிக்கை அனுப்பணும்… இல்லாட்டா, அதிகாரிகள் மேல கிரிமினல் வழக்கு பதிவு செய்வேன்’ன்னு ஆவேசப்பட்டிருக்கார் பா… “அமைச்சர் வேலு, கலெக்டர் மகேசன் காசிராஜனும் இந்த கூட்டத்தில கலந்துகிட்டு இருக்காங்க… கமிஷனரின் கோபத்தைப் பார்த்து, இவங்க ரெண்டு பேரும் அதிர்ந்து போயிட்டாங்க பா…” என்றார் அன்வர்பாய். “அதிகாரிகளுக்கு அவரு பதினைஞ்சு நாள் கெடு விதிச்சாரு… இப்ப அவரையே வேற துறைக்கு மாத்திட்டாங்களே…” என, வருத்தப்பட்டார் அந்தோணிசாமி.
நன்றி : தினமலர் டீக்கடை பெஞ்ச்

One Response to தமிழகத்தின் நிர்வாகச் சீர்கேடு உண்மையா?

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    KARUNAAKANITHIYIN MUKATHTHIRAIYAI THUKLAK NANTRAAKA KIZHITHTHUVITTATHU!! NAAKKAIP PIDINGKI IVAR SAAKALAAM!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: