எந்திரன் தமிழ் சினிமாவின் வீழ்ச்சியா வளர்ச்சியா?

பலராமனின் பதிவு பத்தாம் பசலித்தனமானது. ரஜினியின் மகள் திருமணத்திற்கு ரசிகர்களை அழைக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கின்றார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. ரஜினி எவரையும் நீ என் ரசிகராய் இரு என்று கட்டாயப்படுத்துவது இல்லை. ரஜினியை பிடித்த காரணத்தால் ரசிகனாகிறார்கள். ரஜினி ரசிகனை உருவாக்குவதில்லை. ரசிகன் ரஜினியால் உருவாகிறான். தட்ஸ் ஆல். கட் அவுட் வைக்கிறேன், ரசிகர் மன்றம் நடத்துகிறேன் என்று சொல்லி, ரஜினியை ஒரு வட்டத்திற்குள் சிக்க வைக்க ரசிகர் மன்றங்கள் முயல்கின்றனவோ என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆனால் ரஜினி இத்தகைய மாயவலைக்குள் சிக்காமல் தப்பித்து வந்து கொண்டிருக்கிறார். ரசிகர் விஷயத்தில் ரஜினி இதுவரையிலும் மிகச் சரியாகத்தான் நடந்து வருகிறார் என்று அவர் சில விஷயங்களைக் கையாளும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் பல விஷயங்களில் ரசிகர்கள் ரஜினியால் இழந்தது அதிகம் என்றாலும், அதற்கு ரஜினி காரணம் அல்ல என்பது தான் நிதர்சனம்.

இனி எந்திரன் படத்தைப் பற்றிய ஒரு வித்தியாசமான பார்வையைக் காணலாம். இது ஒரு சன் பிக்சர்ஸின் ஆடு புலி ஆட்டம். இந்தப் படம் ரஜினி என்ற மாஸை உடைத்து எறியும். ஷங்கர் என்ற இயக்குனர், சன் பிக்சர்ஸின் மாயையில் மறைக்கப்படுவார். ரஹ்மான், ஐஸ்வர்யா, ரசூல் போன்றோர் இருப்பதால் தான் ஹிந்தியில் படம் வெளியிடப்படுகிறது. சன் பிக்சர்ஸின் பிரமாண்டத்தின் முன்னே, ரஜினி, ரஹ்மான், ஐஸ்வர்யா, ரசூல் போன்றோர் காணாமல் போய் விடுவர். நடிகர் விஜய்யை ஒழித்துக் கட்டியது போல, ரஜினியும் சன் பிக்சர்ஸால் ஓரம் கட்டப்படுவார் என்றே சில அறிவாளிகள் என்னிடம் சொன்னார்கள். உண்மையாக இருக்குமோ என்று நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஒரு அனுபவஸ்தர் சொன்னார். ரஜினியின் இத்தனை பிரபல்யத்தையும் சன் பிக்சர்ஸ் அனுபவிக்கின்றனர் என்றார். எத்தனை திறமை இருந்தாலும் அது பணத்தின் முன்னே மறைந்து போய் விடுகிறது என்பது தான் எவராலும் மறக்க முடியாத உண்மை. பணத்தின் முன்னே எந்தக் கொம்பனும் தலை குனிந்து தான் ஆக வேண்டுமென்பது காலத்தின் விதி.

எந்திரன் தமிழ் சினிமா உலகில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இப்போதைக்கு எந்த வித அனுமானமும் செய்ய முடியாது. தெலுங்கிலும், ஹிந்தியிலும் ரஜினி அவ்வளவு பிரபலமல்லாதவர். ஷங்கரும் கூட அப்படித்தான். ரஜினியை மட்டும் நம்பினால் பிரயோசனம் இருக்காது என்று சன் நிறுவனத்தாருக்கு நன்கு தெரியும். ஆகையினால் ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், ரசூல் பூக்குட்டி போன்ற பிரபலங்களையும் எந்திரனில் இணைத்திருக்கிறார்கள். ஜாம்பவான்கள் இணைந்தால் ஒரு படம் வெற்றியடைந்து விடுமா என்பதெல்லாம் இப்போதைக்குச் சொல்ல முடியாது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விளம்பர உத்தி ஒரு வேளை எந்திரன் படத்தை வெற்றியடைய வைக்கலாம். வைக்காலும் போகலாம். வழக்கம் போல சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்களை வாங்கி கையைச் சுட்டுக்கொண்ட சில விநியோகஸ்தர்கள், ரிஸ்க் எடுக்கலாம். வெற்றி பெற்றால் வாழ்க்கை. இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது ஒரு ரூபாய் அரிசி என்று அவர்கள் நம்பலாம். சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னிடம்” எந்திரன் இன்னொரு பாபா” என்றார். ஏன் அப்படி சொன்னார், ஃப்ரிவியூ முடிந்து விட்டதா என்றெல்லாம் தெரியவில்லை. 30 கோடி கேட்கின்றார்கள் என்று தியேட்டர் நண்பர்கள் சொன்னார்கள். அந்தளவுக்கு வசூலாகுமா என்பதெல்லாம் இன்னமும் புரியவில்லை என்றும் சொல்கின்றார்கள்.

இதற்கு முன்பு அதிகபட்சமாய் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப்படங்கள், எந்திரன் வெற்றி பெற்றால் 150 கோடிக்கு தயாரிக்கப்படலாம். ஆனால் சன் பிக்சர்ஸின் திறமை, அந்த்த் தயாரிப்பாளருக்கு வேண்டுமே? ஓடாத பட்த்தையெல்லாம், வெற்றிகரமாய் ஓடுகிறது தியேட்டரை விட்டு என்று நொடிக்கு நொடி சன் பிக்சர்ஸ் விளம்பரம் போடுவார்கள். அந்தளவுக்கு விளம்பரம் செய்ய முடியுமா பிற தயாரிப்பாளர்களால்.

இந்த எந்திரன் படத்தினால் சில கதவுகள் திறக்கலாம்.அல்லது முற்றிலுமாய் மூடப்படலாம்.எல்லாவற்றுக்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன. தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை கவனித்துப் பார்க்கையில், 150 கோடி முதலீடு என்பது, ஒரு தயாரிப்பாளர் தனக்கான தகன மேடையை உருவாக்குவது போலத்தான். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தாரால் முடியும். நஷ்டமானாலும் பரவாயில்லை. அதை எப்படி சரிக்கட்டுவது என்பது அவர்களுக்கு அத்துப்படி. புரியாதவர்களுக்கு நானொன்றும் விரிவாக எழுதப்போவதில்லை.

இப்பூவுலகில் வெற்றி என்பது மட்டுமே கொண்டாடப்படும். அதன் வழி என்ன என்பது பற்றியோ, வெற்றி நாயகனின் மறுபக்கம் என்பது பற்றியோ யாருக்கும் எந்தத் தகவலும் தேவையற்றது. மனிதர்கள் வெற்றியின் பால் கொண்டிருக்கும் மயக்கம், தவறு செய்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாய் அமைந்து விடுகிறது. மனிதர்கள் மாறாவிட்டால் மேலும் மேலும் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளத்தான் செய்வார்கள். சினிமா என்ற வியாபாரத்தில் எதுவும் சாத்தியம். சினிமா தனக்கான எந்த வித எல்லைகளும், வரையறைகளும் இன்றி இருக்கிறது.

எந்திரன் உண்மையில் தமிழ் சினிமாவை அடுத்த இலக்கை நோக்கிச் செலுத்துமா என்பதை படத்தின் வெற்றியை வைத்துக் கணித்து விட  முடியாது என்பதே உண்மை.

– அனாதி

3 Responses to எந்திரன் தமிழ் சினிமாவின் வீழ்ச்சியா வளர்ச்சியா?

 1. Sooryan சொல்கிறார்:

  இருந்து பாருங்கள், இந்த படம் தான் ரஜினியின் கடைசி படம்.

  • அனாதி சொல்கிறார்:

   என்னங்க சூரியன் இப்படி சொல்லீட்டீங்க. ரஜினி என்ற மாபெரும் நடிகனைக் காணாமல் அடித்து, இஸ்க் இஸ்க் ரஜினியை உருவாக்கிய இடம் அல்லவா தமிழ் நாடு.

   ரஜினி இனிமேல் தான் நடிக்கவே ஆரம்பிப்பார் என்றே நான் நம்புகிறேன்.

   – அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: