மெட்ரிக் பள்ளிகளின் பெட்டிகள்

அனாதி பிளாக்கில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பதிவுகளை அடிக்கடி எழுதி வருகிறோம். இந்திய மக்கள் பொருளாதாரத்திலும், வாழ்க்கை முறையிலும் வளர்ச்சி பெற வேண்டுமானால் கல்வி, இந்தியர் அனைவருக்கும் இலவசமாய்க் கிடைத்தல் வேண்டும். திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது. மெட்ரிக் பள்ளிக் கட்டணத்தை சரி செய்வதாக அறிவித்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தன் வேலையை முடித்து விட்டாலும், இன்னும் எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் என்பதை இதுவரை அந்தக் கமிட்டி பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. இது பற்றியும் நாங்கள் எழுதியிருந்தோம். ஏற்கனவே இந்தப் பிரச்சினையில் ஆளும் கட்சிகள் பெட்டிகளை பெற்று விடுமோ என்று கூட தெரிவித்திருந்தோம்.

திமுகவினர் என்றைக்கும் மக்கள் நலனுக்கு எந்த வித திட்டத்தையும் செய்யவே மாட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படும் எந்தத் திட்டமானாலும் அதன் மூலம் வருமானம் பெறவே கவனம் செலுத்துகிறார்கள் என்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் நாம் அறியலாம்.

மெட்ரிக் பள்ளிக் கட்டணம் குறித்த ஒரு கேள்வி பதிலில் சோ அவர்களின் பதிலை படித்துப் பாருங்கள். அரசின் ஒவ்வொரு அறிவிப்பும், எவ்வாறு சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களுக்கு வருமானம் தருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மெட்ரிக் பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்த தமிழக அரசு, திடீர் பல்டி அடித்ததன் காரணம் என்ன?(சூட்கேசுகள்தான் காரணம் என்கிறானே என் நண்பன்). – கே.சண்முகம், ஆதமங்கலம் புதூர்

சோவின் பதில் : ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அமைச்சர் ‘இந்தத் தெருவை ஒன்வே ஆக்கப்போகிறோம்’ என்று அறிவிக்கப்போவதாகச் சொல்வார்; செய்ய வேண்டாம் என்று கெஞ்சி வியாபாரிகள் பணம் தருவார்கள். அப்புறம் வேறு வழியில்லை நிர்பந்தம் அதிகம் என்பார்; மேலும் பணம் கிடைக்கும். வேறு ஒரு தெரு,  நிஜமாகவே ஒன்வே ஆகும்; அதை விலக்கப் பணம் கிடைக்கும் ‘ என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

அந்த ஆந்திரப் பிரதேச அமைச்சர் பிடித்தது ‘தெரு’. நமது அரசு பிடித்தது ‘பள்ளிக்கூடங்கள்’. புதிய கட்டணம் கட்டாயமாக வரும் என்று அறிவித்தால், ‘ஐயோ வேண்டாம்’ என்று கூறி, பள்ளி நிர்வாகங்கள் பணம் தருவதற்கு வாய்ப்புண்டு. ‘இப்போதைக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று அறிவித்தால் – ‘ரொம்ப நன்றி’ என்று கூறி,  பள்ளிகள் பணம் தர வாய்ப்புண்டு. ‘திரும்பி வரும்’ என்றாலும் வாய்ப்புண்டு. இது ஒரு தங்கச் சுரங்கம்.

தங்களுக்கு கிடைத்த இந்த ஆட்சி ஏமாந்த பொதுமக்களால் கிடைத்தது என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் போதும். ஆனால் அவர்கள் வரலாற்றில் பொதுமக்கள் நன்மை என்றைக்குமே திமுகவினர் நன்மைக்காகவே என்பதாகத்தான் இருந்து வருகிறது என்பது சோகம்.

ஆனால் எனக்கொரு நம்பிக்கை இருக்கிறது. முதல்வர் அப்படி இருக்கமாட்டார் என்று உள்ளூர நம்பிக்கை இருக்கிறது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

– சுதந்திரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: