பரிகசிப்பு என்றால் என்ன?

இயக்குனராய் இருக்கும் எனது நண்பரின் அலுவலகத்திற்குள் நுழைந்தேன்.

“ஆள் படு சோக்காய் இருக்கிறாயே என்ன விஷயம்” என ஆரம்பித்தான் பல வெற்றிப் படங்களை கொடுத்த அந்த இயக்குனர்.

வாசகர்களே கவனியுங்கள், உங்களுக்கே தெரியும் எனக்கு வயிற்றால போன விஷயம். அடியேனுக்கு வயிற்றால பிடுங்கி விட்டு, கிட்டத்தட்ட பத்து கிலோ குறைஞ்சு போய், எலும்பும் தோலுமாய் இருக்கிற என்னைப் பார்த்து ஆள் படு சோக்காய் இருக்கிறாயே என்று கேட்கிறான்.

“என்ன நக்கலா?” என்று எதிர்க் கேள்வி கேட்க சிரி சிரியென்று சிரித்து, பின்பு ஒரு மாதிரியாய் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

தன் முன்னாலிருந்த கம்ப்யூட்டரில் எதையோ படித்துக் கொண்டிருந்தவன் தொடர்ந்து சிரிக்க ஆரம்பிக்க என்ன எழவ படிச்சிட்டு இந்தச் சிரி சிரிக்கிறான்னு பார்த்தா அவன் சாரு நிவேதிதாவின் சைட்டைப்(!!!) படித்துக் கொண்டிருந்தான்.

சரி தான் என்று நினைத்தபடி என்னதான் எழுதியிருக்கிறார்னு பார்த்தா, படிச்ச எனக்கு வயித்து வலியே வந்துடுச்சு.

இதைக் கிளிக் பண்ணி நீங்களும் படிச்சிடுங்க.

http://charuonline.com/blog/?p=897

– குடிகாரன்.

2 Responses to பரிகசிப்பு என்றால் என்ன?

  1. KATHIR சொல்கிறார்:

    யார் அந்த இயக்குநர் சேரனா? அல்லது மிஷ்கினா?…….

    அத விடுங்க அந்த பதிவ படிச்சவுடனே என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் முத்து ஞாபகத்திற்க்கு வந்தான். அவனும் தன்னைப் பற்றி எப்போதும் அளவில்லாமல் பீற்றிக் கொண்டே இருப்பான். எப்போதாவது யாராவது சரியாக மடக்கிக் கேட்டால் அசடு வழிவான். அவனை நாங்கள் அனைவரும் “அல்வா முத்து” என்றே அழைப்போம்.

    அது ஒரு அறியா பள்ளிப்பருவத்து நிகழ்ச்சி. ஆனால் ஒரு பெரிய எழுத்தாளர் (இதை அவரைத்தவிர வேறு யாரும் சொல்கிறார்களா!) அவரே இப்படி ஒரு பதிவு போட்டுக் கொள்வதைப் பார்க்கும் போது எனக்கு வெட்கத்தில் கன்னப் பகுதியில் புல்லரிப்பே ஏற்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: