சாமானே சரணம் – மொதக்கதை

அன்பார்ந்த வாசகர்களே,

எப்படி இருக்கின்றீர்கள்? குஞ்சாமணியின் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சாமானே சரணம் என்ற தலைப்பில் மொதக்கதை எழுதலாமென்று ஆரம்பித்திருக்கிறேன். இதில் என்ன பிரச்சினை என்றால் கதையின் கதாபாத்திரங்கள்தான் கதையை எழுதப்போகின்றன. நான் இங்கு எடிட்டிங் வேலையை மட்டுமே செய்யப்போகிறேன்.  போடாங்கலூசுன்னு நினைக்காதீங்க. லூசா இருந்தா அனைவருக்கும் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். சரி அது போகட்டும் விடுங்கள். பாருங்க திரும்பத் திரும்ப கெட்ட வார்த்தையாகவே வந்து விடுகிறது. எல்லாம் உங்களுடன் சேர்ந்த வினை. உடனே ஏய் குஞ்சு எங்களை ஏன் வம்புக்கு இழுக்கிறாய் என்று நினைக்காதீர்கள். பால் கொடுக்கும் சதா கவர்ச்சிப் படம் தான் நம்ம ஃப்ளாக்கில் இன்னும் முதலிடத்தில் இருக்கிறது? இதெற்கெல்லாம் காரணம் நீங்கள் தானே அய்யா. சரி சரி.

இனி சாமானே சரணம் மொதக்கதையைப் பார்க்கலாம்.

”ஒரே ஒரு ஆண் குழந்தையை ஊரிலே மிகப் பெரிய, புகழ் வாய்ந்த பள்ளிக் கூடத்தில் படிக்க சேர்த்து விட்ட வனிதைக்கு எப்போதுமே சோம்பேறித்தனத்தின் மீது தான் ப்ரியம். மேட்டருக்கு கூப்பிட்டா கூட வந்து பெட்டில் தேமேன்னு படுத்துக் கிடப்பா. சமைத்துச் சாப்பிடனும்னாக்கூட சோம்பல் பட்டுக்கிட்டு காய்ச்சின பாலை எடுத்துக் குடிச்சிட்டு படுத்துக்கிடுவா. எட்டு மணிக்கு எழுந்து, பயலை அவசர அவசரமா குளிக்க வச்சு, ட்ரெஸ்ஸை போட்டு விடுவதற்குள் பள்ளி வேன் வந்து விடும். வேக வேகமா பயலைக் கூட்டிக்கிட்டு ஓடுவா. இவ்வளவுக்கு துணி துவைக்க ஆளு, பாத்திரம் தேய்க்க ஆளு, வீடு துடைக்க ஆளு, துணிகளை தேய்த்து தர ஆளு என்று அனைத்துக்கும் வேலையாட்கள் வேறு இருக்கின்றார்கள். ஆனாலும் அவள் குழந்தை இன்னும் பள்ளிக்கூட வேனுக்கு, காலையில் ஓடிக் கொண்டே தான் இருக்கிறான்”  – இது வரை கதை சொன்னது அந்த வீட்டு வேலைக்காரி த்ரிஷா.

பொரணி பேசும் கவிதா இப்போது தொடர்கிறாள்.

”அவள் புருஷன் இருக்கானே அவன் பார்க்கிறதுக்குதான் ஆம்பளை மாதிரி இருப்பான். ஆனா அவன் பொம்பளை. இந்தத் தெருவுல எந்த வீட்டுப் பொம்பளை எட்டு மணிக்கு எந்திரிக்கிறா. இவளைத் தவிர. அவளைத் தட்டிக்கேட்க அவனுக்குத் துப்பில்ல. இவனெல்லாம் ஒரு ஆம்பளை”

இதைக் கேட்ட கவிதாவின் பாட்டி சொன்னாள்

”அடிப் போடி போக்கத்தவளே, அவன் சாமானே சரணம்னு கிடக்கிறான். இவ என்னவோ பேசுறாளே”

கதை முடிஞ்சிருச்சு. இனிமேல் தான் கதையின் கிளைமாக்சே வருகிறது வாசகர்களே. தொடர்ந்து படியுங்கள்.

மீந்து போன குழம்பு

வேலைக்காரிக்கு….

பக்கத்து தெரு

அத்தையுடன்

பகிர்ந்து சாப்பிட

நெய் பணியாரங்கள்…

வீடு தேடி வரும்

தோழிக்குத் தரும்

அரைத்த மருதாணி…

இப்போது எதுவுமே இல்லை !

பகுத்துக் கொடுக்கும்

பழக்கத்தையே

பாழாக்கி விட்டது

குளிர்பதனப் பெட்டி

மேற்படி கவிதையை எழுதியவர் போளூர் சி.ரகுபதி. நன்றி ரகுபதி அவர்களே.

பிரிய வாசகர்களே, இப்போது தெரிகிறதா இக்கதை என்ன சொல்ல வருகிறது என்று. உங்களின் மேலான கருத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவன்

உங்களின் மனம் கவர்ந்த குஞ்சாமணி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: