மடக்கப்பட்ட மதுரை திலகமும் போராட்ட அறிவிப்பும்

இன்றைய தினமலரை வாசித்துக் கொண்டிருந்த போது, கீழே இருக்கும் விளம்பரம் கண்ணில் பட்டது. குறிப்பாக சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்று ஒரு அமைப்பின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கீழே அந்த போராட்ட விளம்பர அறிவிப்பை படித்துக்கொள்ளவும். அது என்ன மடக்கப்பட்ட மதுரை திலகம் என்று தெரிய ஜூவியை குடைந்தேன். செய்தியும் கீழே இருக்கிறது.

சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடப்படும் அளவுக்கு போராட்டம் நடத்தப்படும் என்று ஒரு அமைப்பு சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுகிறது. சட்டம் ஒழுங்கிற்கு சவால் என்றால் என்ன அர்த்தம் என்றும் புரியவில்லை. காவல்துறைக்குச் சவாலா என்றும் புரியவில்லை. அந்தச் செய்தி யாரைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது என்றும் புரியவில்லை. சட்டம் ஒழுங்கிற்குச் சவால் விடும் போராட்டம் என்றால் என்ன? ஏன் இப்படியெல்லாம் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டு அரசை மிரட்டுகின்றார்கள்?பத்திரிக்கையாளர்களை மிரட்டுகின்றார்கள்?  என்பதே புரியவில்லை. பெரியார் வழியில் நேதாஜியை நினைத்துப் போராட்டம் என்றால் நேதாஜி துப்பாக்கி தூக்கி நாட்டுக்காக, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார். அது போல இந்த அமைப்பும் துப்பாக்கி தூக்குமா என்பது தெரியவில்லை.

தமிழ் நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.

தனிப்பட்ட ஒரு நபர் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்கிற போதுஅந்த அமைப்பு ஏன் போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்றும் புரியவில்லை. அந்த மடக்கப்பட்ட திலகம் என்பது யார் என்பதும் புரியவில்லை. சட்டப்படி அவதூறு மீதான நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டுவது ஏன்? எதற்காக?

ஒரே குழப்பம். இது பற்றி யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் எழுதுங்களேன்.

– குடிகாரன்

நன்றி : ஜூவி மற்றும் தினமலர்

தினமலரில் வெளியான அந்த போராட்டச் செய்தி


ஜூவியில் வெளியான அந்தச் செய்தியில் மதுரை திலகம் ஒருவரை மேலிட போலீஸார் செமையாக கவனித்து அனுப்பியதாகவும், அந்த திலகத்தின் மீது சொத்து பறிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கழுகார் சொன்னதாக இருக்கிறது.  அந்தச் செய்தியை வெளியிடவே பயமாக இருக்கிறது. ஏனென்றால் என் வாழ்நாளில் பகிரங்கமாக மிரட்டல் விட்ட அமைப்பை இப்போது தான் பார்க்கிறேன்.

– அரச்சான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: