திமுக இளைஞரணி போராட்டம் – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

வாசகர்கள் தோல்வி பயத்தில் திமுகவினர் என்ற எங்களது பதிவினைப் படித்திருக்கலாம். அதில் திமுக இளைஞரணி நடத்திய போராட்டம் சட்டத்திற்குப் புறம்பானது என்று எழுதியிருப்போம். திரு சோ அவர்களும் எங்களது கருத்தையை தன் பதிலில் பதிவு செய்திருக்கிறார்.

கேள்வி : சொத்துக் குவிப்பு வழக்கைத் தாமதப்படுத்துவதை கண்டித்து, ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக இளைஞரணி போராட்டம் அறிவித்துள்ளதே? இது சரியா?

சோவின் பதில் : நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிற ஒரு வழக்கில் – ஒரு தரப்பு பதிவு செய்கிற மனுவை எதிர்த்து – வீதியில் போராட்டம் நடத்துகிற உரிமை எதிர் தரப்பினருக்கு உண்டு – என்பது புதிய சட்ட வழிமுறை. இனிமேல் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில், ஒரு தரப்பினர் வாதங்களை, மற்ற தரப்பினர் நீதிமன்றத்தில்தான் சந்திக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. இது கழகத்தின் சட்டப்புரட்சி

மேற்படி பதில் மூலம் திமுகவின் இந்தப் போராட்டம் நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் தலையிடுவது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகிறது. வாதிக்கும், பிரதிவாதிக்குமான வழக்குகளில் பதிவு செய்யப்படுகின்ற வாதங்களுக்குப் போராட்டம் நடத்த ஆரம்பிப்பது, சட்ட ஆட்சிக்கு அழகல்ல என்பது அனைவரின் கருத்தாகும். நீதிமன்றமும், நீதிபதிகளும் இவ்வித போக்கினை கண்டித்திட வேண்டும். இதே போன்று நாளை அதிமுவினர் போராட்டம் நடத்த துணிந்தால் என்னவாகும் என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நீதியை எதிர்த்துப் போராட துணிவு பெற இச்சம்பவம் தூண்டுகோலாய் அமைந்து, அது திமுகவின் வரலாற்றில் தீர்க்கவே முடியாத கருப்புப் புள்ளியாக மாறிவிடும்.

– குலசேகர பாண்டியன்

நன்றி : துக்ளக் மற்றும் சோ

2 Responses to திமுக இளைஞரணி போராட்டம் – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

  1. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    vaaythaa vaangkuvathu thani oruvarin urimai. vazhakkai visaariththu, athan nilamaikku earppa neethipathi vaytha koduppathum neethipathiyin thani urimai. enavae thi mu ka vin seyal sattappadi thavarruthaan ! naalai, a thi mu ka vinar tha, kiruttinan vazhkil mael murraieedu sey endru veethiyil pooraadinaal sattam ozhngku ennaavathu.??

  2. shraans Raja சொல்கிறார்:

    Hi,

    Neenga orey adiya cho va nammpathir kal, Cho eppavume JJ and BJP, RSS support.

    Enakku oru dought neenga avaala

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: