கலைஞரின் அரசியல்

அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவருக்கு காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை 5.30 வரை தான் வேலை நேரம். சனி, ஞாயிறு விடுமுறை வேறு. அத்துடன் பத்தாயிரத்துக்கும் மேல் சம்பளம் என்று அள்ளிக் குவிக்கின்றார்கள். இத்துடன் லஞ்சம் வேறு வசூலித்து தன் பெண்டாட்டிகளுக்கு பிறரின் காசில் காசு மாலை வாங்கிப் போடுகின்றார்கள். டாஸ்மாக்கும் அரசு நிறுவனம் தான்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பத்து மணி வரை வேலை. விடுமுறை கிடையாது.கிட்டத்தட்ட 12 மணி நேரம். சம்பளமோ பத்தாயிரத்துக்கும் கீழே. அவர்கள் செய்வதோ குடிப்பவரையும், குடிகாரர்களின் குடும்பத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் வேலை. ஒரு பக்கம் குடி குடியென்று தமிழகமெங்கும் சாராயக்கடைகளில் சரக்கு விற்கும் அரசு, அந்தச் சாராயக் கடை மூலம் வரும் வருமானத்தில் மக்கள் நலப் பணி செய்கின்றார்கள். இது தான் ஜன நாயகத்தின் வலிமை. ஜன நாயகம் என்பது மக்களை வாழ வைக்கவில்லை. மாறாக கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.

சம்பளக் குறைவை எதிர்த்து, டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருக்கின்றார்கள். உடனே முதல்வர் அவர்கள் மதுவிலக்குப் பற்றியும் யோசித்து நல்ல முடிவெடுக்க வேண்டியிருக்கிறது என்று டாஸ்மாக் பணியாளர்களின் வேலை நிறுத்ததை கேலி செய்கிறார். மதுவிலக்கு அமுல் செய்தால் டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்ற அர்த்தத்தில் பேசியிருக்கிறார்.  ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை நிறுத்ததிற்கு தேதி குறித்திருக்கின்றார்கள்.

வேலை நிறுத்தத்தைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் மதுவிலக்குப் பற்றிப் பேசியது தான் கலைஞரின் அரசியல்.

என்ன நடக்கிறது என்று பார்த்தால் ஒரு உண்மை வெளிச்சத்துக்கு வரும். அது என்ன என்பதைப் பற்றி போராட்டம் முடிந்த பிறகு பார்ப்போம்.

– அரச்சான்.

2 Responses to கலைஞரின் அரசியல்

  1. சரவணன் சொல்கிறார்:

    Er.L.C.NATHAN அவர்களே
    கருத்துக்களை தமிழில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

  2. Er.L.C.NATHAN சொல்கிறார்:

    kudikaaranum ,karunaakanithiyum ontruthaan!! iruvar paechum vidinthaal poochu!karunaakanithiyin aatchi eppothu tholaiyum?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: