எந்திரன் திரைப்படமும் தமிழக அரசியலும்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ரஜினி காந்தின் எந்திரன் திரைப்படம் சிலருக்கு நல்லதையும், சிலருக்கு கெடுதலையும் கொண்டு வந்து சேர்க்கவிருக்கிறது.

தமிழ் நாட்டில் இசை வெளியீட்டு விழா வைத்தால் கலைஞரை அழைக்க நேரிடும் என்பதாலும், வியாபாரம் கெட்டு விடும் என்பதாலும் மலேசியாவில் வைத்திருக்கின்றார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் தங்களது வியாபாரத்தில் அரசியல் குறுக்கீட்டை விரும்பவில்லை என்ற போதிலும் அவர்களின் வரலாறு அரசியல் நாற்றமடிக்கும். திட்டமிட்டு கலைஞரை அகற்றி இருக்கிறார்கள். கலைஞருக்கு எதிராய் அரசியல் செய்த வரலாற்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொண்டிருப்பது இங்கு குறிப்பிடப் பட வேண்டிய விஷயம். கார்ப்பொரேட் நிறுவனங்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும், நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்ளவும் சில நபர்களை புகழ் மிக்கவர்களாக மாற்றி விடும். அப்படி சன் பிக்சர்ஸிடம் சிக்கிக் கொண்டவர் ரஜினி. இனி ரஜினியின் அடுத்தபடம் எப்படி இருக்கும்? எத்தனை கோடி பட்ஜெட் என்பதெல்லாம் ஊகிக்க முடியாத ஒன்று. இப்படத்தோடு ரஜினியின் ஆட்டமும் முடிந்து விடக்கூடிய அபாயமும் இருக்கிறது. தொடர்ந்து கவனித்து வருவோம்.

சங்கர் இத்துடன் முடிந்து விடுவார் என்றே நினைக்கிறேன். ரஜினி தான் சிலருக்கான டார்கெட்டாக மாறி விடுகிறது. இனி சங்கர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏனென்றால் உச்சகட்டத்தில் இருந்த சில நடிகைகள் ரஜினியுடன் நடித்த பிறகு ஃபீல்ட் அவுட் ஆன கதைகளை நாம் அறிவோம். ரஜினியின் ராசி அப்படி.

ஒரு வேளை எந்திரன் மிகப் பெரும் வெற்றி பெற்றால் அது திமுகவிற்கு எதிராக திருப்பி விடக்கூடிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனென்றால் ஏற்கனவே ரஜினி திமுகவிற்கு ஆதரவாய் வாய்ஸ் கொடுத்திருக்கிறார் என்பது தெரிந்த சமாச்சாரம். 60,000 கோடி ஊழல், விலை வாசி ஏற்றம், மின்வெட்டினால் திமுகவின் மீது எரிச்சலிலும், வெளியில் சொல்ல முடியாத கோபத்திலும் படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் தெரியாமல் அனைவரும் இருக்கின்றார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

எந்திரன் படம் மொத்தத்தில் தமிழக மக்களின் பணத்தை உறிஞ்சப் போவது உறுதி. ரஜினியும், சன் பிக்சர்ஸும் கோடிக்கணக்கான பணத்தை அள்ளப் போகின்றார்கள். ஏனென்றால் விளம்பர உத்தி என்ற ஏமாற்று வித்தையை நன்கு கற்றவர்கள் சன் பிக்சர்ஸ். ஏமாறவே பிறப்பெடுத்தவர்கள் தமிழர்கள்.

ரஜினியும், சன் பிக்சர்ஸ் இருவருக்கும் வாரிக் கொடுக்கப்போகும் மக்களுக்கு கிடைக்கப்போவது என்னவோ கிழவனும் கிழவியும் ஆடும் ஆட்டம் தான். ரஜினி என்ற கிழவனும், ஐஸ்வர்யா ராய் என்ற கிழவியும் காதலிப்பதைப் பார்க்க 1000 ரூபாய் கொடுக்க காத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

– அரச்சான்

2 Responses to எந்திரன் திரைப்படமும் தமிழக அரசியலும்

 1. Saravanan சொல்கிறார்:

  If you’re not intrested no need to see …

  No one is forcing you to see the flim….
  Now a days every thing business then how you say Sun Pictures doing wrong things ?

  Please stop thing like this !

  Thanks for understanding….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: