இந்தியாவில் நடந்த மேட்ச் ஃபிக்சிங் என்னவாயிற்று?

ஓகஸ்ட் 31, 2010

பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் ஃபிக்சிங்கில் சிக்கியதை ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸார் கண்டுபிடித்திருக்கின்றனர். புக்கி என்பவர் கோட் மூலம் பண மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், அந்த புக்கியுடன் பாகிஸ்தான் வீரர்கள் இருக்கும் வீடியோவையும் டெலிவிஷன் சானல்கள் ஒளிபரப்பி வருகின்றன.

கிரிக்கெட் ரசிகப் பெருமக்களே, நீங்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டு வருகின்றீர்கள் என்பதை கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்கள். கிரிக்கெட் இந்தியாவில் மாபெரும் சூதாட்டமாக விளையாடப்பட்டு வருகிறது. உங்களின் நேரத்தை அந்தத் திருடர்கள் திருடிக் கொள்கின்றார்கள். உங்களால் கோடிகளில் கொட்டும் பணமழை பெறும் வீரர்கள், ரசிகர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்பட வில்லை. ஆட்டோகிராப் வாங்குகிறேன் பேர்வழி என்று, ஏமாந்து போய்க்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள் என்பதை இப்போதாவது உணர முயற்சியுங்கள். உடனே அனைத்து வீரர்களும் அப்படி இல்லையே என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். எந்த புத்திசாலியும் எளிதில் கண்டுபிடித்து விடுவான் யார் யாருக்கெல்லாம் சம்பந்தம் இருக்கிறது என்பதை.

பாகிஸ்தானில் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிலேயே (கவனிக்க…) இம்மாதிரி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் என்ன நடந்தது? இதுவரை மேக்ஸ் ஃபிக்சிங்கில் சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு எந்த வித தண்டனையும் பெற்றுத் தரவுமில்லை. அதுபற்றி எவரும் பேசுவதும் இல்லை. பிசிசிஐ இந்திய மக்களை ஏமாற்றுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சிபிஐ இந்தப் பத்திரிக்கைக்கு வழங்கிய தகவலில் அசாருதீன், மோங்கியா, மனோஜ் பிரபாகர், ஜடேஜா மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. இவர்கள் செய்தது, பார்லிமெண்டை தகர்க்க முற்பட்ட அப்சல் குரு செய்த தவறுக்கும் ஈடானது.

பொதுமக்களின் பணம் எந்த வித வரம்புகளுக்கும் உட்பட்டு செலவு செய்யப்படுவது இல்லை என்று எக்ஸ்பிரஸ் இந்தியா குற்றம் சாட்டியிருக்கிறது.   இது பற்றிய செய்தியை கீழே படித்துப் பார்க்கவும்.

– விடுதலையும் சுதந்திரமும்

சிபிஐயின் ரிப்போர்ட் பற்றி அறியவும், இந்திய வீரர்கள் செய்திருக்கும் அக்கிரமச்செயல்களை இந்த லிங்கில் படிக்கவும்

http://www.yehhaicricket.com/CBI/players/MAzharuddin.html

நன்றி : எக்ஸ்பிரஸ் இந்தியா

NEW DELHI, OCTOBER 31: In what officially opens Indian cricket’s can of worms, the CBI has alleged that Mohammed Azharuddin fixed cricket matches with the help of Ajay Jadeja and Nayan Mongia for large sums. In fact, according to the agency, Azharuddin has confessed to doing so and has even named Jadeja and Mongia.

The CBI report, a copy of which is with The Indian Express, also states that Manoj Prabhakar, the man who seized the moral high ground in the case, introduced several foreign players to bookies and also provided information to bookies about Test matches, one-day internationals, even a Ranji Trophy match.

The report names England’s Alec Stewart, Australia’s Mark Waugh as well as Sri Lanka’s Arjuna Ranatunga among the foreign players who were either offered or paid money by bookies.

The CBI, however, admits that it can’t do much about these findings since it lacks direct evidence needed for a court of law. According to the report, the following are the main findings:

Ajay Sharma
Sharma introduced Azhar, Prabhakar and Jadeja to bookie Mukesh Gupta (MK). He also introduced Azhar to “big time punter” Ajay Gupta. Sharma received lakhs from MK and Gupta for this service.

Sharma also provided information regarding matches to MK and was key in getting a “tailor-made pitch” for a Test Match on MK’s instructions. The CBI, however, admits that it lacks concrete evidence to establish these facts in a court of law and blames delay for this.

Manoj Prabhakar

Prabhakar is close to several bookies and punters, namely MK, Tipu Kohli, Anand Saxena, Sanjeev Chawla. He introduced several foreign players and provided information on several matches to MK. For introducing the foreign players and providing information on matches, he received large sums of money from MK.

Md Azharuddin

Azhar has fixed matches/performances for MK and Ajay Gupta with the help of Jadeja and Mongia. He also got large sums of money, running into lakhs, from MK and Gupta Associates. He also received money through physio Ali Irani who was well aware of Azhar’s activities.

Ajay Jadeja

Jadeja was close to bookies and punters, namely Uttam CHand, Rajesh Kalra, Rattan Mehta and Krishan Kumar (implicated in the Cronje case). He provided “assessment of matches” and passed on information to bookie Uttam Chand for money. He also met MK and offered his services for fixing matches and received money from MK at the meeting. He is also named by Azhar as one of the players who was “with him” in fixing matches, with Nayan Mongia.

Foreign players

Those who were introduced by Prabhakar to bookies and were either offered or paid money include: Alec Stewart, Brian Lara, Mark Waugh, Dean Jones, Hansi Cronje, Arvinda D’Silva, Arjuna Ranatunga, Martin Crowe, Salim Malik.

Asif Iqbal, former Pak captain, is close to Mumbai bookie Anil Steel and has provided information on matches and received “gifts” from him.

Kapil Dev

The CBI says it has found no concrete evidence to link Kapil to the scandal. Prabhakar’s allegation that he was offered Rs 25 lakh by Kapil to underperform against Pakistan during the Singer Cup in Sri Lanka has not been established.

The BCCI

Although there is no direct evidence to suggest the involvement of any baord members in match-fixing, their “resolute indifference” does give rise to suspicion “that there was perhaps more than meets the eye.” The agency says: “It defies credulity to believe that the apex body was oblivious to such rampant match fixing and therefore did not find the need to investigate thoroughly the results of matches which are patently questionable.”

BCCI is in control of huge amounts of public funds without any rules or accountability.

http://www.expressindia.com/ie/daily/20001101/isp01034.html


தமிழக சட்டம் ஒழுங்கும் ஆளும் கட்சியும்

ஓகஸ்ட் 29, 2010

முதல்வர் அவர்கள்,  மாவட்ட ஆட்சியாளர் கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று பெருமிதமாக அறிவித்திருக்கிறார்.   எல்லாம் சரிதான். முதலில் ஆளும் திமுக கவுன்சிலர், வார்டு மெம்பர் முதற்கொண்டு, சாதாரண திமுக தொண்டன் முதல் கொண்டு காவல்துறையினரை மிரட்டுகின்றார்களே அதை என்ன செய்வதாம். முதலில் இந்த அறிவுரைகளை தங்கள் கட்சியினருக்கு அல்லவா சொல்ல வேண்டும்.

காவல்துறையினரில் சில கருப்பு ஆடுகளைத் தவிர மற்றவர்கள் சிறப்பாகத்தான் செயல்படுகின்றார்கள். இருபத்து நான்கு மணி நேர ஊழியர்களுக்கு முதலில் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். சாதாரண போலீஸுக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி, இலவசமாய் வீடு, இலவசமாய் அனைத்தும் வழங்க வேண்டும். லட்சங்களில் சம்பளம் வாங்கினால் அவர்கள் லஞ்சப்பணத்திற்கு ஏன் ஆசைப்படுகின்றார்கள்?

தன் வாழ் நாளையே காவல் பணியில் தொலைத்து விட்டு, ரிட்டயர்ட் ஆகும் போது சக்கையாய் மாறுபவர்கள் காவல்துறையினர். மேலதிகாரிகளுக்கு சாதாரண போலீஸ்காரர்கள் செய்து வரும் பணிகளைக் கண்டால் உள்ளம் துடித்துப் போய் விடும். அந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் பணி செய்யும் காவல்துறையினரின் செயல்பாடுகளில் அக்கிரமத்துடன், ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தில் சிபாரிசுக்குச் செல்லும் கட்சியினரைக் கட்டுப்படுத்தினாலே போதுமானது.

காவல்துறை என்றைக்கும் மக்கள் நண்பனாகத்தான் இருந்து வருகிறது. ஆளும்கட்சியின் அடிப்பொடிகள் தலையிடாவிட்டால் தமிழக சட்டம் ஒழுங்கு மிக மிகச் சிறப்பாக இருக்குமென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

– சுதந்திரம்


கற்பு என்றால் என்ன? விவகாரமான பதிவு(18+)

ஓகஸ்ட் 29, 2010

உயர் ஜாதி வர்க்கத்தினரிடையே காணப்படும், மிக உயர்வான பழக்கம் என்று ஒன்று இருக்கிறது. தன் மனைவியை மற்றொருவன் அனுபவிக்க அனுமதிப்பது என்பது தான் அது. தன்னால் இயலாத போது, காசு கொடுத்து ஆண் மாடல்களை அழைத்து வந்து தன் மனைவியை புணர வைப்பது என்பது இன்றைய மேட்டுக்குடி கலாச்சார வாழ்க்கையின், மிக உச்சமான கலாச்சாரம்.

எனக்குத் தெரிந்த வகையில் சில ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களை தங்கள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து வருவார்கள். உணவோடு, தன் அழகான மனைவியையும் விருந்தாக்கி அதன் விளைவாக கோடிகளில் வருமானம் கொட்டும் ஏற்றுமதி ஆர்டர்களை பெற்றிருக்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்மணிகளின் அழகு குறையக் குறைய தங்கள் தங்கையையோ அல்லது தன் உறவினர் பெண்களையோ இறக்குமதியாளர்களுக்கு விருந்தாய் படைத்து, தங்கள் தொழிலை வளம் பெறச் செய்து வருவதையும் நான் அறிந்திருக்கிறேன். இது பிசினஸ்ஸில் லாபம் குவிக்க உதவும் ஒரு வகை உத்தி.

அடுத்து, மிகப் பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்கள், தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த ஆபாசமாய் பெண்களை காட்டி, வாடிக்கையாளர்களை கவர்வார்கள். இதற்கும் மேற்கண்ட சம்பவத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்த வகை விளம்பரங்களில் தன் உடலை பலர் பார்க்க வேண்டுமென்ற நோய் பிடித்தவர்களான பெண்களை, மேற்படி நிறுவனங்கள் காசைக் கொடுத்து கூட்டி வந்து பார்வையாளர்களுக்கு பந்தி வைப்பார்கள். இதற்கு ஏதுவாய் அழகிப் போட்டிகளை நடத்தி, பெண்களின் தலையில் கிரீடம் வைத்து, அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி விடுவார்கள். உன் உடல் அழகானது, நீ பலருக்கு விருந்தாக மாறக்கூடிய தன்மை கொண்டவள் என்று அவர்களுக்கு அதீத நம்பிக்கையை ஊட்டுவார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும்.

மேட்டுக்குடி கற்பு என்பதற்கான ஒரு உதாரணம் இருக்கிறது. உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. முதலில் சல்மான்கானுடன் சுற்றிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, பின்னர் பலரும் அறியும் வண்ணம் விவேக் ஓபராயுடன் காதல் கொண்டிருந்தார். அதன் பின்னர் அமிதாப்பச்சனின் மகனைத் திருமணம் செய்து கொண்டார். இதே போல, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி, அடிக்கடி ஆண் நண்பர்களை மாற்றியதால்,வெகுண்டெழுந்த தந்தை விஷ ஊசி போட்டுக் கொன்றதை நாம் அறிவோம். சாதாரண குடும்பங்களில் பேணப்படும் கற்பு, மேட்டுக்குடியினரிடையே இல்லாமல் போய் விடுகிறது. இன்றைக்கும் ஐஸ்வர்யா ராயை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றார்கள். ஏன் இந்த வித்தியாசம் என்று யோசித்துப் பார்த்தால் பணம் என்ற ஒற்றைச் சொல் நம் முன்னே நின்று நகைக்கும்.

பணமிருந்தால் போதும் – அது எந்த வித சமூகக்கட்டுப்பாட்டுக்கும் கட்டுப்படாத தன்மையை அளித்து விடும் என்ற நிலைக்கு இன்றைய சமூகம் வந்து விட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது எந்த விதமான வாழ்வியல் சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதற்கு, இன்றைய் அமெரிக்காவின் நிலையே உதாரணம்.

இதோ அடுத்த ஒரு மேட்டுக்குடி கலாச்சாரத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

மிகப் பெரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமான சந்தோஷம் தேவைப்படுகிறது. ஆண்களுக்கு அழகிய பெண்களும், பெண்களுக்கு அழகிய ஆண்களின் மீது ஆசை ஏற்படுகிறது. டிஸ்கொதே என்ற பெயரில் அவரவர்களுக்குப் பிடித்தவர்களுடன் ஆடுகின்றார்கள். இன்றைய பணக்கலாச்சாரத்தில் தன் மனைவியை திருப்திப்படுத்தாத கணவன்மார்கள், தன் மனைவி தன்னை விட்டு அகன்று விடாமல் இருக்க சில விஷயங்களை விட்டுக் கொடுக்கின்றார்கள். அதுதான் இளவயது ஆண்களை தங்கள் மனைவிகளை அனுபவிக்க தங்கள் வீடுகளுக்கே அனுமதிப்பது என்பது. இதுபற்றிய விரிவான கட்டுரை ஒன்று பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்திருக்கிறது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இதே சென்னையில் இருக்கும் மிக உயர்ந்த நட்சத்திர ஹோட்டலுக்கு ரெகுலராக தண்ணி அடிக்க வரும் பிரபலத்தின் வேலை என்ன தெரியுமா? இளம் பெண்களை தனது பத்திரிக்கை மூலமாக மடக்கி கொண்டு வந்து ஒரே ஒரு முறை மட்டும் அனுபவிப்பது மட்டுமே. அந்தப் பெண் மறுமுறை ஆசைப்பட்டால், அவர் உதாசீனப்படுத்தி விடுவார்.ஆனால் வெளியாரிடத்தில் தான் ஒரு பெண்களை ஆதரிக்கும் ஆபத்பாந்தவன் என்பதாய்க் காட்டிக் கொள்வார். ஒரு முறை ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து, அவளுக்கு நிரம்ப ஊற்றி விட்டு காரில் அழைத்துச் சென்றார் இந்தப் பிரபலம். இதைப் பார்த்த நான்,அங்கிருக்கும் ஒருவரிடம் ரகசியமாய் விசாரித்தேன். இதுபற்றிய கணக்கு வழக்குகளை அவர் விலாவரியாகச் சொன்னார். கேட்ட எனக்கு கதி கலங்கி விட்டது. சரி போகட்டும் இந்தக் கதை. நம் கதைக்கு வருவோம்.

இளம் வயது ஆண்களை அனுப்பி வைக்க, ஏஜென்சிகளும் நடத்தப்படுகின்றனவாம். அந்தப் பையன்கள், சற்றே வயதான் பெண்களுக்கு உகந்த நண்பர்களாகவும், அவர்களின் குழந்தைகளுக்கு தோழனாகவும், படுக்கையில் பட்டையக் கிளப்பும் வாலிபனாகவும் இருக்கின்றார்களாம். இவர்களின் பைகளில் என்றைக்கும் வயாகரா மாத்திரைகள் இருந்து கொண்டே இருக்குமாம். இது போன்ற ஏஜென்சிகளின் வருமானம் கோடிகளில் கொட்டுகிறதாம். கணவன்கள் பல்வேறு இளம் பெண்களின் கவட்டிகளுக்குள் கிடப்பதை மனைவிமார்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். இப்படி ஒரு ஒப்பந்தம் இன்றைக்கும் நடைமுறையில் இருந்து வருகிறதாம். இதைத் தான் மேட்டுக்குடிக் கலாச்சாரம் என்கிறார்கள். இந்த மேட்டுக்குடி வர்க்கத்தினருக்குத்தான் இந்திய அரசு பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

இந்தியாவில் 35 சதவீத மக்கள் படிப்பறிவற்றவர்களாகவும், இருபது கோடி மக்கள் வாரம் நூறு ரூபாய்க்கு குறைவாக சம்பாதிப்பவர்களாகவும், 10 கோடி மக்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கிடைப்பதாகவும் பத்திரிக்கைகள் சொல்கின்றன.இந்திய ஆட்சியாளர்களுக்கு இதுபற்றிய ஒரு சிந்தனை கூட இல்லை. ஏனென்றால் இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் மேட்டுக்குடித்தனக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏழைகளின் பிரச்சினை பற்றி தெரியவே தெரியாது. பதவியும், பணமும் தான் அவர்களின் குறியாய் இருக்கிறது. ஏழைகள் ஏழைகளாக இருந்தால் தான் தாங்கள் என்றைக்கும் வளமோடு வாழ முடியும் என்று அவர்கள் முடிவு கட்டிக்க்கொண்டிருக்கிறார்கள். ஆகையால் தான் ஒரு ரூபாய் அரிசியும், ஆயிரம் ரூபாய் காசும் கொடுத்து தங்கள் வெற்றிகளை உறுதி செய்து கொள்கின்றார்கள். அதுவுமின்றி ஏழைகளுக்கு மட்டும் தான் கற்பு வேண்டுமென்று பேசுவார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்று வரும் விபச்சாரத்தைக் கண்டு கொள்ளாதவர்கள், ஏழைகள் வசிக்குமிடங்களில் நடக்கும் விபச்சாரத்தை சட்டதை வைத்து ஒடுக்குவார்கள். மேட்டுக்குடித்தனக்காரர்கள் செய்யும் விபச்சாரம் என்பது வெளியில் வரவே வராது. ஏழைகள் தான் பத்திரிக்கைகளில் சந்தி சிரிக்க வைக்கப்படுகின்றார்கள்.

மேட்டுக்குடி கலாச்சாரத்தில் கற்பு என்பது வெறும் பேச்சாய் தான் இருக்கிறது. அதே சாதாரண குடும்பங்களில் கற்பு என்பது அவர்கள் வாழ்வியலின் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வாசகர்களே, உங்களுக்கு தேவை மேட்டுக்குடி கலாச்சாரமா இல்லை சாதாரண குடும்பக் கலாச்சாரமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பட உதவி : இந்தியா டுடே

அன்பன் குஞ்சாமணி குலசேகர பாண்டியன்


அனாதியின் பதிவிற்கு எதிராய்

ஓகஸ்ட் 28, 2010

அன்பின் அனாதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவை படித்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், உங்களைப் போன்ற மேட்டுக்குடித்தனக்காரகளின் வெற்றியைக் கொண்டாடும், திமிர்த்தனம் சார்ந்த பொதுவாழ்வு தந்த பொருள்வாழ்வு – கலைஞர் இன் கார்ப் பதிவிற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் திரு நரேந்திர மோடி என்று பத்திரிக்கைகள் சொல்கின்றன. ஆனால் கலைஞரை அவ்வாறு சொல்லவில்லையே ஏன்? தங்கள் தொழிலில் சிறந்து, இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரராக ஆன முதல்வருக்கு, தமிழ் நாட்டை மட்டும் ஏன் மற்ற மாநிலங்களை விட, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்ற முடியவில்லை?

தொழிலில் முன்னனியில் இருக்கும் இவரது குடும்பத்தார்களும் ஆட்சியில் தானே இருக்கின்றார்கள், தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த தெரிந்த இவர்களால், தமிழகத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை ஏன்? தமிழகத்தின் வளர்ச்சி நிதிகள் எல்லாம் எங்கே செல்கின்றன? 400 கோடி செலவு செய்து, கோவையில் போடப்பட்ட சாலைகள், வளர்ச்சிப் பணிகள் எல்லாம் ஒரு மழைக்குப் பிறகு பூமியில் புதையுண்டு போகின்றனவே ஏன்? தரம் எங்கே சென்றது அனாதி? அது என்னதான் ஆனது?

இதுபற்றியெல்லாம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் பொத்தாம் பொதுவாய் பாராட்டுகின்றீர்களே இது தான் உங்களின் தர்மமா? ஒரு தமிழன் தன்னையும், தன் குடும்பத்தையும் மட்டும் வளர்த்துக் கொண்டு, தன்னை நம்பிய தமிழ் நாட்டு மக்களை ஒரு ரூபாய் அரிசி வாங்கித் தின்னும் சூழ் நிலையில் வைத்திருக்கிறாரே, அதைப் பற்றிய ஒரு வார்த்தையும் நீங்கள் சொல்லவில்லையே ஏன்?

எங்கு பஞ்சைப் பராரிகளும், கையாலாகாதவர்களும், ஏழைகளும் நிறைந்திருக்கின்றார்களோ அங்கு தானே அரசு மானிய விலையில் அல்லது இலவசமாய் உணவோ அல்லது பொருளோ அளிக்கும். திமுக அரசு இலவசத்தைக் கொடுத்து, எங்கள் சாதனை பாரீர் என்று என்று மார்தட்டிக் கொள்கிறது. இது சாதனையா? தமிழகத்தின் அரசியல் தரத்தை, தமிழக மக்களை ஏழைகளாக மாற்றி, தானும் தன் குடும்பமும் இந்தியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வராக மாறியதை தாங்கள் பாராட்டியது கண்டு மனது வேதனை அடைகிறது.

அதிகாரம் கையில் இருந்த காரணத்தால் தான் வெறும் ஒன்பது ஆண்டுகளுக்குள் டைனோசார் வளர்ச்சியாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் திமுக குடும்பத்தார்கள். இவர்கள் அதிகாரத்தில் இல்லையென்றால் கொசு கூட கோபாலபுரத்திற்கு போகாது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பாராட்டத்தான் செய்வீர்கள், ஏனென்றால் நீங்களெல்லாம் மேட்டுக்குடித்தனக்காரர்கள் என்பதால் தானே?

– குஞ்சாமணி எனும் குலசேகர பாண்டியன்


பொதுவாழ்வு தந்த பொருள்வாழ்வு – கலைஞர் இன் கார்ப்

ஓகஸ்ட் 28, 2010

பட உதவி : இந்தியா டுடே இதழ்

இந்த மாத இந்தியா டுடேயில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப் படித்ததும் திமுக மீது இந்தியா டுடேவிற்கு இருக்கும் உட்கோபம் நன்கு புரிபடுகிறது. அதிமுக இந்தக் கட்டுரையை, தன் பிரச்சார உத்தியாகப் பயன்படுத்த ஆரம்பித்தால் திமுகவினருக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம். ஏனென்றால் பிறரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் மனிதர்கள் தான் உலகில் அதிகம்.

கிட்டத்தட்ட 20 சானல்கள்,  45 எஃப் எம் சானல்கள், நான்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், ஃப்ளைட்ஸ்,  நான்கு பத்திரிக்கைகள், வார இதழ்கள், டிடிஎச் சர்வீஸ், சுமங்கலி கேபிள் விஷன் மூலம் மாதம் 90 கோடி ரூபாய் வருமானம்,  1000ம் கோடிக்கும் அதிக பெருமானமுள்ள சன் மூவிஸ் நிறுவனம் என்று கிட்டத்தட்ட இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக திமுக குடும்பத்தலைவர் திகழ்கிறார் என்று பெருமையாக இந்தியா டுடே எழுதியிருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய இண்டஸ்ட்ரியான தமிழ்த் திரைப்படத்துறையில் திமுக குடும்பத்தலைவரின் ஆதிக்கம் பெரும்பான்மையானது என்றும் எழுதியிருக்கிறது.

தமிழன் என்ற வகையில் கலைஞரின் இவ்வளர்ச்சியைக் கண்டு மனது மகிழ்ச்சியில் திளைக்கிறது.

திமுக தலைவரின் குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் இன்னும் பெரிய பெரிய வெற்றிகளைக் குவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

– அனாதி


தலைகீழ் விகிதங்கள் (18+)

ஓகஸ்ட் 26, 2010

டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அடடா மழைடான்னு யாரோ பாடுவதும் ஆடுவதுமாய் மசமசப்பாய் தெரிந்தது. நேற்றைக்கு அடித்த மப்பில் ஒரு எழவும் புரியவில்லை.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? தண்ணி அடித்தவன் தான் உண்மை பேசுவானாமே? அப்படின்னா தமிழ் நாடே உண்மை பேசுதான்னு கேக்குறீங்க. அது நமக்குத் தெரியாது.

டிவியில பார்த்தா ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தாள்.  அவளையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திக்குன்னு ஆயிடுச்சு. என்னடா இது நமக்கு மட்டும் தான் இப்படித் தோணுதான்னு நினைச்சேன். அதாவது எனக்கு எல்லாமே தலைகீழா தெரியுது. மேலே இருப்பது கீழே இருக்கிறா மாதிரியும், கீழே இருக்கிறது மேலே இருக்கிறா மாதிரியும் இருக்கும்.

இந்தப் படத்தைப் பாருங்க. நான் நினைச்சது உங்களுக்கும் தோணுதான்னு சொல்லுங்க.

ஓகே.

– குஷியுடன், குஷாலுடன் உங்கள் குடிகாரன்


மெட்ரிக் பள்ளிகளின் பெட்டிகள்

ஓகஸ்ட் 26, 2010

அனாதி பிளாக்கில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பதிவுகளை அடிக்கடி எழுதி வருகிறோம். இந்திய மக்கள் பொருளாதாரத்திலும், வாழ்க்கை முறையிலும் வளர்ச்சி பெற வேண்டுமானால் கல்வி, இந்தியர் அனைவருக்கும் இலவசமாய்க் கிடைத்தல் வேண்டும். திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது. மெட்ரிக் பள்ளிக் கட்டணத்தை சரி செய்வதாக அறிவித்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தன் வேலையை முடித்து விட்டாலும், இன்னும் எந்தெந்த பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் என்பதை இதுவரை அந்தக் கமிட்டி பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை. இது பற்றியும் நாங்கள் எழுதியிருந்தோம். ஏற்கனவே இந்தப் பிரச்சினையில் ஆளும் கட்சிகள் பெட்டிகளை பெற்று விடுமோ என்று கூட தெரிவித்திருந்தோம்.

திமுகவினர் என்றைக்கும் மக்கள் நலனுக்கு எந்த வித திட்டத்தையும் செய்யவே மாட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். மக்கள் நலனுக்காக கொண்டு வரப்படும் எந்தத் திட்டமானாலும் அதன் மூலம் வருமானம் பெறவே கவனம் செலுத்துகிறார்கள் என்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் நாம் அறியலாம்.

மெட்ரிக் பள்ளிக் கட்டணம் குறித்த ஒரு கேள்வி பதிலில் சோ அவர்களின் பதிலை படித்துப் பாருங்கள். அரசின் ஒவ்வொரு அறிவிப்பும், எவ்வாறு சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களுக்கு வருமானம் தருகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மெட்ரிக் பள்ளிகள் முதல் பொறியியல் கல்லூரிகள் வரை இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்த தமிழக அரசு, திடீர் பல்டி அடித்ததன் காரணம் என்ன?(சூட்கேசுகள்தான் காரணம் என்கிறானே என் நண்பன்). – கே.சண்முகம், ஆதமங்கலம் புதூர்

சோவின் பதில் : ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அமைச்சர் ‘இந்தத் தெருவை ஒன்வே ஆக்கப்போகிறோம்’ என்று அறிவிக்கப்போவதாகச் சொல்வார்; செய்ய வேண்டாம் என்று கெஞ்சி வியாபாரிகள் பணம் தருவார்கள். அப்புறம் வேறு வழியில்லை நிர்பந்தம் அதிகம் என்பார்; மேலும் பணம் கிடைக்கும். வேறு ஒரு தெரு,  நிஜமாகவே ஒன்வே ஆகும்; அதை விலக்கப் பணம் கிடைக்கும் ‘ என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

அந்த ஆந்திரப் பிரதேச அமைச்சர் பிடித்தது ‘தெரு’. நமது அரசு பிடித்தது ‘பள்ளிக்கூடங்கள்’. புதிய கட்டணம் கட்டாயமாக வரும் என்று அறிவித்தால், ‘ஐயோ வேண்டாம்’ என்று கூறி, பள்ளி நிர்வாகங்கள் பணம் தருவதற்கு வாய்ப்புண்டு. ‘இப்போதைக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று அறிவித்தால் – ‘ரொம்ப நன்றி’ என்று கூறி,  பள்ளிகள் பணம் தர வாய்ப்புண்டு. ‘திரும்பி வரும்’ என்றாலும் வாய்ப்புண்டு. இது ஒரு தங்கச் சுரங்கம்.

தங்களுக்கு கிடைத்த இந்த ஆட்சி ஏமாந்த பொதுமக்களால் கிடைத்தது என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் போதும். ஆனால் அவர்கள் வரலாற்றில் பொதுமக்கள் நன்மை என்றைக்குமே திமுகவினர் நன்மைக்காகவே என்பதாகத்தான் இருந்து வருகிறது என்பது சோகம்.

ஆனால் எனக்கொரு நம்பிக்கை இருக்கிறது. முதல்வர் அப்படி இருக்கமாட்டார் என்று உள்ளூர நம்பிக்கை இருக்கிறது. என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

– சுதந்திரம்


%d bloggers like this: