ஒரு குட்டியின் குட்டிக்கதை

அந்தக் குழந்தையின் பெயர் வர்ஷா. அவளுக்குத் தாய் இல்லை. அப்பாவிடம் வளர்ந்தாள். தாயில்லாத குழந்தையாக இருந்தால் தறுதலையாக மாறிவிடும் என்று எதுகை மோனையாக யாரோ சொல்லி வைத்ததை நினைத்து பயந்து, வர்ஷாவை மிகவும் கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்த்தார் அப்பா.

ஒரு நாள் வர்ஷா தனது பாடப் புத்தக்கத்திலிருந்து ஒரு பேப்பரைக் கிழித்து, பென்சில் பாக்ஸில் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர், “பேப்பரைக் கிழிப்பியா..?” என்று ஆக்ரோஷத்துடன் அவளைத் திட்டி, கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்தார். சில நிமிடங்களில் மீண்டும் அவரிடம் வந்த வர்ஷா, கண்களில் பயத்தோடு கலர் காகிதம் சுற்றப்பட்ட ஒரு பரிசுப் பெட்டியை தன் அப்பாவிடம் நீட்டி, “ஹாப்பி பர்த் டே டாடி” என்றாள். “தாங்க் யூ” என்று சம்பிரதாயமாக சொல்லியபடியே பரிசு பொருளைப் பிரிக்க, அதற்குள் ஒரு காலியான பென்சில் பாக்ஸ்!

அவருக்கு வர்ஷாவின் இந்த ஏமாற்றும் விளையாட்டு பிடிக்கவில்லை. “யாரையும் ஏமாற்றி இப்படி விளையாடக்கூடாதுனு உனக்குத் தெரியாதா? வீட்ல இருக்கற பழக்கம்தான் வெளியிலேயும் வரும்” என்று அவர் மீண்டும் கோபத்தில் வெடிக்க, அப்பாவின் இந்த ரியாக்ஷனை எதிர்பாராத வர்ஷாவின் கண்களில் மளமளவென நீர் வழிய… “அது காலி பாக்ஸ் இல்லை டாடி. அதுல உங்களுக்கு நான் ஹண்ட்ரட் கிஸ்ஸஸ் வச்சிருக்கேன்! நல்லாப் பாருங்க!” என்று குழந்தை அழுதுகொண்டே சொன்னபோது, அவள் அப்பாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தன் தவறை உணர்ந்தவர் தரையில் மண்டியிட்டு, “ஸாரிடா” என்று சொல்லி, தன் குழந்தையை அள்ளி மார்பில் அணைத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து அவருக்கு எங்கு, யார் மீது கோபம் வந்தாலும், தன் மகள் கொடுத்த முத்தங்களால் நிறைந்த பென்ஸில் பாக்ஸை நினைத்துக் கொள்வார். அப்போது கோபங்கள் மறைந்து எதிரில் நிற்கும் மனிதர்கள் மீது அவருக்கு ஒரு புரிதல் மலரும்!

உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் யார்?’ என்று மாவீரன் அலெக்ஸாண்டரை கேட்டால்… ‘கிரேக்க அறிஞன் அரிஸ்டாட்டில்’ என்று சொல்வான். அரிஸ்டாட்டிலைக் கேட்டால், ”தத்துவமேதை பிளாட்டோ”வை கைகாட்டுவார். பிளாட்டோவைக் கேட்டால், ‘பகுத்தறிவு பகலவன் சாக்ரடீஸ்’ என்பார். ‘உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் யார்?’ என்று அதே கேள்வியை சாக்ரடீஸைப் பார்த்துக் கேட்டால்… ‘குழந்தை’ என்று பதில் சொல்வார்.

மிகமோசமான உணர்ச்சி கோபம். மிகச்சிறந்த கேடயம் புன்னகை. அதனால் எதிரியின் முன்னால் நின்றால்கூட உங்களின் புன்னகை, அவர்களை பலவீனப்படுத்திவிடும்.

நன்றி : சுகபோதானந்தா, அவள் விகடனில் ரிலாக்ஸ் ஃப்ளீஸ் பெண்ணே தொடரிலிருந்து

அடியேன் படித்த நல்ல விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

One Response to ஒரு குட்டியின் குட்டிக்கதை

  1. Er,L.C.NATHAN சொல்கிறார்:

    manathai neruda vaiththa pathivu.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: