உங்களுக்கு அவசியமானது

உங்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அனாதி ப்ளாக்கின் ஸ்டேட்டிக்ஸ் பற்றிய விபரத்தை கீழே பாருங்கள். நேற்றைக்கு அரச்சான் எழுதிய பதிவினை படித்த் தனி ஐப்பி அட்ரஸ் எத்தனை என்று பாருங்கள். பேஜ் வியூ 2200க்கும் மேலே என்று வெப்சை அவுட்லுக் சொல்கிறது. இத்தனைக்கு நீங்களே காரணம். உங்களின் அன்பிற்கும் எங்களது நன்றி.

– அனாதியும் அவனது நண்பர்களும்.

இன்று காலையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவ்விஷயம் அனைவருக்கும் உபயோகமான ஒன்று.  முடிந்தால் அனைவரும் பின்பற்ற முயலுங்கள். உங்களின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யக்கூடியது.

நான்கு நண்பர்கள் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஜோக் ஒன்று சொல்லப்பட்ட அந்த நான்கு நண்பர்களில் ஒருவர் மிகவும் சத்தமாக சிரித்து மகிழ்ந்திருக்கிறார். இவர் சத்தமாக சிரிப்பதைக் கண்டு என்ன இப்படி சிரிக்கின்றார் இவர் என்று மேலும் கீழும் பார்த்தபடியே ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டு அதை வாய் விட்டு சொல்லியபடியே சென்றிருக்கின்றனர். அனைவரும் இதைக் கேட்ட பின்பு, மெதுவாக நண்பரிடம் மெதுவாக சிரிக்கலாமே என்று கேட்க, அதற்கு சத்தமாக சிரித்த நண்பர் சொல்லியிருக்கிறார்.

எனக்கு சிரிக்கணும் என்று தோன்றியது சிரித்தேன். பிறர் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி எனக்கு என்ன கவலை. அது என்னைப் பற்றி நினைப்பவரின் பிரச்சினை என்று சொல்லி விட்டார்.  மேட்டர் ஓவர்.

நடிகர் விஜய்யின் படத்தில் கூட ஒரு சீன் வரும். திருமணத்தின் போது மாமா பெண், இவரைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் பிடிக்காமல் ஓடி விடுவாள். விஜய் அது பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை. டீக்கடையில் ஒருத்தன் எனக்கே ஒரு மாதிரியாக இருக்கும் போது, இவருக்கு எப்படி இருக்கும் என்று பேசுவான். அதைக் கேட்ட விஜய், என்னைப் பிடிக்கவில்லை என்பது என் மாமா பெண்ணின் பிரச்சினை. அவளுக்குண்டான பிரச்சினை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். போய் வேலையைப் பாருங்கடா என்பார்.

பிறர் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அப்படிக் கவலைப்பட ஆரம்பித்தால் நம் வாழ்க்கை பிறர் கையில் அல்லவா சென்று விடும். ஆகவே நாம் நமக்காக மட்டுமே வாழ்வோம்.

– அன்புடன் பஞ்சரு பலராமன்

2 Responses to உங்களுக்கு அவசியமானது

  1. Er,L.C.NATHAN சொல்கிறார்:

    MIKA NALLA PATHIVU

  2. Ramesh.R சொல்கிறார்:

    திரு. பலராமன் அவர்களே.. மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறிர்கள்.. நம்மில் பெரும்பாலானோர் தம்மைப் பற்றிய எண்ணத்தைவிட அடுத்தவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியே மிகவும் கவலைப் படுகிறார்கள்.. நன்றாகக் கூறியுள்ளிர்கள்.. பாராட்டுக்கள்..
    என்றென்றும் அன்புடன்
    ரமேஷ்.ஆர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: