நித்தியானந்தர் நல்லவர்

நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு மனிதனுக்கு ஆன்மீகம் தான் அவனது வாழ்க்கையில் முழுமையைத் தர முடியும் என்றார்.

ஆன்மீக வழி நடப்போர் தவறு செய்ய முடியாதவர்களாக மாறி விடுவார்கள். அவ்வாறு தவறு செய்தால் அதற்கான பலனை உடனுக்குடன் அனுபவித்து விடுகின்றார்கள். அதற்கு நித்தியானந்தர் ஒரு உதாரணம் என்றார். ஆச்சரியமாய் இருந்தது. தப்புச் செய்யும் ஆன்மீகவாதிகள் மாட்டிக் கொள்வதைத் தான் நாம் பார்த்து வருகின்றோமே. ஆகவே நண்பர் சொன்ன விஷயம் சரியானதாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.

தொடர்ந்து தான் செய்த தவறுக்கான தண்டனையை நித்தியானந்தர் பெற்று விட்டார். அவரின் பாபங்கள் சரி செய்யப்பட்டு விட்டன. ஆகவே நித்தியானந்தர் இனி மனம் திருந்திய நல்லவராகத்தான் வாழ்வார் என்றும் சொன்னார். தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அடைந்து விட வேண்டுமாம். அவ்வாறு தண்டனையை அனுபவித்து விட்டால் அவன் நல்லவனாகி விடுகிறானாம்.  சரிதானே? சோ நித்தியானந்தர் இனி நல்லவராக வாழ்வார் என்று நம்பலாம். ஆனால் நித்தியானந்தரை நிந்தித்தவர்களுக்குத் தண்டனை என்ன என்று கேட்க நினைத்தேன் மறந்து விட்டேன்.

சரி ஆன்மீகம் எப்படி மனிதனுக்கு முழுமையைத் தர முடியும் என்று கேட்டேன். வாழ்ந்து பாருங்கள் அப்போதுதான் உங்களுக்கு அது புரியும் என்றார்.

ஏனென்றால் இவ்வுலகில் ஆத்தீகவாதிகளை விட நாத்திகர்களான ஆத்திகர்கள் தான் அதிகம் என்றார்.

இதற்கு அவர் சொன்ன உதாரண புருஷன் : கண்ணதாசன்

– பஞ்சரு பலராமன்

2 Responses to நித்தியானந்தர் நல்லவர்

  1. Er,L.C.NATHAN சொல்கிறார்:

    karunaanithi kudumbaththai nannbar vittuvttaaree!!veliyil naaththeekam ,ullukkull aanmeekam!! nantraakaththaan vaazhkiraar, KARUNAANITHI!!!!!!!!

    • அனாதி சொல்கிறார்:

      ஏன் முதல்வரின் மீது இத்தனை கோபம் உங்களுக்கு???? யாரும் செய்யாததையா செய்து விட்டார்? கலைஞரையும் கும்பிடும் மக்களும் இருக்கின்றார்களே ? மனதுக்குள் இத்தனை கோபம் வைத்திருப்பது உங்கள் நலத்துக்கு நல்லதல்ல நாதன். அவரவர் செயலுக்குண்டான பலனை அவரவர்கள் அனுபவிப்பார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: