உல்லாசகங்கோ உற்சாககங்கோ – விமர்சனம் இரண்டு

சாரு நிவேதிதாவின் மனம் கொத்திப் பறவை விமர்சனம் இரண்டைப் பற்றி எழுதலாமென்று பார்த்தேன். எழுதுவதற்கு ஒரு மேட்டரும் தேரவில்லை. மேலும் அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு அவன் இப்படிப் பேசுகிறான், இவள் இப்படிப் பேசுகிறாள் என்று ஏகத்துக்கும் எழுதி கிண்டலடிப்பது. இவரைப் பற்றி மற்றவர்கள் கிண்டலடித்தால் தீவிரவாதிகள் என்று எழுதுவது என்று குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார் போலும். உபயம் நித்தியானந்தா அவர்கள் என்று நினைக்கிறேன். தமிழ் இலக்கிய உலகில் மிகக் கேவலமான முறையில் தனி மனித தாக்குதல்களை நிகழ்த்துவதில் சாருவிற்கு நிகர் சாருதான். இவருக்கு உதவும் நண்பர்கள் இவரைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூட நம்பக்கூடிய சில சம்பவங்களையும் அவர் எழுதுகிறார். ஆகவே அடியேன் விமர்சிக்கும் அளவிற்கு சாருவின் எழுத்தில் சாரமும் இல்லை, சரக்கும் இல்லை.

குசு விடுவது, கூத்தியாக்கிட்டே போவது, கூட்டாளிகளுடன் தண்ணி போடுவது, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு குட்டி போட போவது போன்ற வழக்கமான புலம்பல்களை விகடன் வெளியிடுவதைக் கண்டு விகடனின் நிலைமை இந்தளவுக்கா ஆகி விட்டது என்று வருத்தம் ஏற்பட்டு விட்டது. சொல்ல ஒன்றுமில்லை. பதிவர்கள் தேவலாம் போல. சாரு நிவேதிதா ஒரு காலிப்பெருங்காய டப்பாவாகிவிட்டார். அவருக்கும் வயதாகிறது அல்லவா? தனது ப்ளாக்கில் தனக்கு ஆண்மை வேறு இல்லை என்று எழுதி விட்டார். ஆகவே, முடிந்த கதையைப் பற்றிப் பேசி இனி பிரயோசனம் ஏதும் இல்லை. ஆகவே நண்பர்களே அவரின் படைப்புகளைப் பற்றி விமர்சிக்க ஒன்றுமில்லை என்பதால் இத்துடன் விமர்சனத் தொடர் முற்றும் பெறுகிறது. இனி ராமகிருஷ்ணனின் தொடர்களைப் பற்றி விமர்சிக்க இருக்கிறேன். தொடர்ந்து கவனித்து வாருங்கள்.

– ரகளை ரப்பரு

One Response to உல்லாசகங்கோ உற்சாககங்கோ – விமர்சனம் இரண்டு

  1. Er,L.C.NATHAN சொல்கிறார்:

    well said! keep it up!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: