பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு சில கேள்விகள்

நேற்றைக்கு கலைஞர் டிவியில் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் பேட்டி காணப்பட்டார். பந்த் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எண்ணெய் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைகின்றன என்பதால் எண்ணெய் மார்க்கெட்டின் குருடு ஆயில் விலைக்கேற்ப விலை உயர்த்தப்படுகிறது. மேலும் ஆயில் கம்பெனிகளே இனிமேல் விலையேற்றத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று முன்பே பிஜேபி செய்ததை நாங்கள் நிறைவேற்றினோம் என்றார். மேலும் இந்தியாவில் தான் உலகிலேயே பெட்ரோல் விலை குறைவு என்றும், அதுவுமின்றி மேல்தட்டுப் பணக்காரர்கள் பயன்படுத்தும் பெட்ரோல் விலையைத்தான் அதிகரித்தோம் என்றார்.

பீட்டர் அல்போன்ஸ் அவர்களே, டிவிஎஸ், டிவிஎஸ் எக்செல் போன்ற வண்டிகளையும், பைக்குகளையும் எந்த மேல் தட்டு வர்க்கம் பயன்படுத்துகிறது என்று சொல்வீர்களா? மேலும் ஆட்டோ, கால் டாக்சி போன்றவைகளையும், பஸ்களையும், லாரிகளையும் எந்த மேல்தட்டு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?

அமெரிக்காவில் பெட்ரோலின் விலை என்னவென்று எங்களுக்கு தெரியாதா? இன்னுமா நீங்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நம்பிக்கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் நம்புகின்றீர்கள்?

இரண்டு இலக்க விகிதத்தில் உயர்ந்து நிற்கும் விலைவாசியை இந்த விலையேற்றம் மேலும் உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றீர்களே இது உங்களுக்கு நியாயமா அய்யா?

வெறும் பதினாறு ரூபாய் பெருமானமுள்ள பெட்ரோலுக்கு வரி என்ற பெயரில் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளை அடித்து, உங்களைப் போன்றவர்கள் சம்பளமாய் பெறுகின்றீர்களே, அதை நீங்கள் மறந்து விட்டீர்களா? வியர்வை சிந்தி ஏழைகள் உழைக்கும் காசை அட்டை போல் உறிஞ்சும் வரியை விதித்து உங்களின் கட்சிக்காரர்கள் விமானத்தில் பறக்கவும், சொகுசு பங்களாக்களில் வசிக்கவும் மக்கள் பணத்தைப் பயன்படுத்தி வருகின்றீர்களே உங்களுக்கு கொஞ்சமேனும் மனச்சாட்டி என்ற ஒன்று இருந்தால் இப்படியெல்லாம் மக்களை வாட்டி, வதைத்து வரும் உங்கள் கட்சி செய்த இந்தப் பிரச்சினைக்கு சாமரம் வீசுகின்றீர்களே நியாயமா ?

அய்யா, உங்களுக்கும் ஏழைகளுக்கும் வயிறு ஒன்றுதான். பசியும் ஒன்றுதான். காலையில் பத்து இட்லிக்கும் மேல் உங்களால் சாப்பிட முடியுமா? ஏன் அய்யா பொதுமக்களின் சொத்தில் வாழும் நீங்கள், உங்களை வாழ வைப்பவர்களையே வாட்டி வதைக்கின்றீர்களே தர்மமா இது?

வாழும் போது பலரை வாழ வைத்து பார் போற்ற வாழுங்கள் அய்யா. ஏழைகளின் சாபம் பொல்லாதது அய்யா.

பஞ்சரு பலராமன்

4 Responses to பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு சில கேள்விகள்

 1. அனாதி, நாதன் என்ன அல்போன்ஸின் பொண்டாட்டி பிள்ளைகளை பற்றியா சொன்னார். அவர் ஊழலில் சம்பாதித்த திறமையை பற்றி தானே சொல்கிறார். தமிழருவி மணியன் என்று ஒரு அரசியல்வாதி இருக்கிறார், புத்தகங்கள் தான் என் ஒரே சொத்து என்று. நீங்கள் தான் விளக்க வேண்டும் நியாயமான வழியில் கோடிகணக்கில் காசு சம்பாதித்து கொண்டே அரசியல்வாதியாக ஆவது எப்படி என்று.

  அல்போன்ஸ் ஒரு மட்டமான அரசியல்வாதி என்பதில் முன்பின் கருத்து இல்லை. அது தான் உண்மை. இவர்களிடம் கருணை, நன்றி உணர்வு, சேவை இதெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இவர்களின் அழிவுகாலத்தை இவர்களே தீர்மானிகிறார்கள்.

  அரசியலில் சேர்க்கும் சொத்து என்றும் நிலையற்றது. எங்கிருந்து பிடுங்கபட்டதோ அங்கேயே போய்சேரும். வாரிசுகள் தெருவில் தான் நிறுத்தபடுவார்கள்

  • அனாதி சொல்கிறார்:

   மீனாட்சி நாச்சியார் – பெயரே படு ரகளையாய் இருக்கிறதே ( இது சாரு நிவேதிதாவின் டச்). அரசியல் என்றால் என்னவென்று நினைக்கின்றீர்கள் மீனாட்சி( என் அத்தை மகள் பெயர் இது என்றெல்லாம் எழுதலாமென்று பார்த்தேன். ஆனால் எனக்கு அத்தையே இல்லையே நான் என்ன செய்ய).

   அரசியலுக்கு வருவது மக்கள் சேவைக்காக என்றா நினைக்கின்றீர்கள்? அந்த நினைப்பெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கள். மக்கள் சரியில்லை. ஆகையால் அவர்களின் பிரதி நிதி( கவனித்தீர்களா?)கள் சரியில்லை. அல்போன்ஸின் பேச்சு நேற்று மகா மட்ட ரகமாய் இருந்தது.

   நம் பேட்டியை எவரும் பார்க்கப் போவதில்லை என்றும், கலைஞர் செய்திகள் சேனலையெல்லாமா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற நினைப்பாலும் பேசியிருப்பார் போல. இருப்பினும் அல்போன்ஸ் அவர்களின் மனதில் அவர் கலைஞரின் மீது வைத்திருக்கும் மரியாதையை பேட்டியைக் கவனித்த போது தெரியவந்தது. உள்ளே இருப்பது தானே வெளியில் வரும்.

   அரசியல், வட்டி பிசினஸ் செய்பவர்களின் குடும்பங்கள் அனாதையாய், பிச்சை எடுத்து திரிந்து கொண்டிருக்கின்றன. ஆனானப்பட்ட சதாம் ஹீசேனையே தூக்கில் போட்டார்கள். ராஜ பக்‌ஷேவெல்லாம் சும்மா பச்சா.

   விதி விளையாட ஆரம்பித்து விட்டால் தூசுக்கு நிகராகி விடுவார்கள். அதுவரை கஷ்டத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

   ஆமா நீங்கள் ஆண் பிள்ளை தானே?????

   – குஜால் குஞ்சுமணி

 2. Er,L.C.NATHAN சொல்கிறார்:

  thenkaasiyil ivar vakkeel vealai paarkkum pothu oru pazhaya scooteril vanthaar!! ippothu ivarathu kathai “””neyil appam mithakkum “”” kathaithaan!!!!! adeyappaa,engineeringcollege yenna!, lodgekal yenna!,..karunaanithiyidam evarukku ulla selvaakku yenna,athanaal ivar adikkum kollai yenna!!”ivarkal yellam “”kungkumam sumantha kazhuthaikal””!!! busil payanam seitha “”kakkan”” avrkazhukku 100 vathu pirantha naal kondaada ippothe vasoolikkum thiramai yenna!ivar pontra congress kaararkalaal thamiznaattil kaamaraaja aatchi varavee varaathu !!

  • அனாதி சொல்கிறார்:

   நாதன் அவர்களே, பீட்டர் சார் கடைசி வரை ஓட்டை ஸ்கூட்டரிலேயே தான் போக வேண்டுமென நினைக்கின்றீர்களா? கக்கனை எத்தனை மக்கள் கண்டு கொண்டார்கள் என்று சொல்வீர்களா? காலம் மாறி விட்டது நாதன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டியதுதான். அதற்காக காசு சம்பாதிக்கக் கூடாது என்றால் அது சரியா?

   ஊழல், லஞ்சம் போன்றவை எல்லாம் இன்றைக்கு பெரிய அரசியல்வாதிகளுக்கு அலர்ஜி. தன் பிரபல்யத்தையும், அதிகாரத்தையும் வைத்து பிசினஸ் செய்து, அதன் மூலம் சம்பாதிப்பது தான் இன்றைய ட்ரெண்ட்.

   சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் போக்கினை நாம் சுட்டிக்காட்டலாம். தனி மனித தாக்குதல் தேவையில்லை என்பது என் எண்ணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: