கருணாநிதி,ஜெயலலிதா சிறந்த தலைவர் யார்?

பெரும் படை கொண்டு தாக்க வரும் பாரசீகத்தை எதிர்க்க தன் நம்பிக்கைக்கு உரிய வெறும் 300 பேருடன் செல்கிறார் ஸ்பார்ட்டன்ஸ் மன்னர். படத்தை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, முப்பதாயிரம் பேர் கொண்ட படையை வெறும் 300 பேரைக் கொண்டு வெல்லப்போகின்றானா இந்த மன்னன் என்ற கோபம் வந்தது.  கொடூர திட்டமிட்ட தாக்குதல்களை நிகழ்த்தி பாரசீகத்தின் படை வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குலைத்து, பாரசீக மன்னனைக் கதி கலங்க வைக்கிறான் ஸ்பார்ட்டன்ஸின் தலைவன்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு வெறியே ஏற்பட்டது. இப்படிப்பட்ட தலைவனிடம் அல்லவா நாம் வேலை செய்ய வேண்டும், இவன் அல்லவா நம்மை ஆள வேண்டும் என்று பேராசைப்பட்டேன்.

நயவஞ்சகன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டான் ஸ்பார்ட்டன்ஸ் தலைவன். ஸ்பார்ட்டன்ஸ் படைகள் பாரசீகப் பெரும் படைகளால் சூழப்பட்டு விட்டன. சுற்றிலும் ஆயிரக்கணக்கான எதிரிகள் ஆயுதங்களோடு வெறும் முன்னூறு வீரர்களைக் கொண்ட படையினைக் கொல்ல வெறியோடு காத்திருக்கிறார்கள்.

தன் படைகள் பாரசீகத்தால் சூழப்படுவதற்கு முன்பு தன் படை வீரனை அழைத்து விரைந்து நாட்டுக்குச் சென்று தங்களது வெற்றியைச் சொல் என்கிறான் ஸ்பார்ட்டன்ஸ் தலைவன். வீரனுக்கு குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் குழப்பம் ஏற்பட எதற்கு அந்த மன்னன் இப்படி சொல்கிறான் என்று புரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள். பின்னர் இவன் எப்படி தங்களது வெற்றியைச் சொல் என்கிறான்? புரியாமல் படத்தைத் தொடர்ந்தேன். மேலும் தன் மனைவிக்கு அவள் அணிவித்த மாலையை கழட்டி தந்து அனுப்பி வைக்கிறான். மனைவியிடம் போருக்குச் செல்ல விடை பெறும் போது நான் வருவேன் அல்லது இந்த மாலை வரும் என்றுச் சொல்கிறான். மாலையைக் கழட்டிக் கொடுத்தவுடன் தெரிந்து விடுகிறது மன்னன் சாகப்போகிறான் என்று. ஆனால் அவன் வார்த்தையோ ஸ்பார்ட்டனுக்கு வெற்றி என்பது.

எப்படி? எப்படி வெற்றி கிடைக்கும் ஸ்பார்ட்டனின் தலைவனுக்கு?

வீரர்களிடம் சொல்கிறான் அனைவரும் நன்கு சாப்பிட்டுக் கொள்ளுங்கள் ஏனென்றால் நாளை நமது சாப்பாடு நரகத்தில் என்று எக்காளமிடுகிறான்.

தியாகம்… தியாகம்… சாகப்போகிறோம் என்று தெரிந்தே சாவை முத்தமிடத் துடிக்கும் வீரம்.  தலைவன் சொல் கேட்டு அவனுக்காகவே, அவன் சொல்லுக்காகவே உயிரைத் துறக்கும் வீரர்கள். ஏனென்றால் தலைவன் என்பவனின் ஒவ்வொரு சொல்லும், செயலும் தன் நாட்டு மக்களின் நன்மைக்காகவே என்று சாவை முத்தமிடப்போகும் வீரர்களுக்கு தெரியும். தலைவனின் மூச்சும், சிந்தனையும் மக்களின் நன்மைக்காகவே இருக்கும் என்பது அந்த சுத்த மாவீரர்களுக்குத் தெரியும்.

பாரசீகத்தலைவன் தன் முன்னால் மண்டியிடு என்று ஆணையிடுகிறான். முன்னூறு வீரர்களோடு சுற்றி வளைக்கப்படும் மாவீரன் ஸ்பார்ட்டன்ஸ் தலைவன், தன் மண்ணுக்கு மரியாதை செய்கிறான். மண்டியிடச் சொன்னப் படைத்தளபதியைக் கொல்கிறான். கோபம் கொண்ட பாரசீக வீரர்கள் அம்புகளையும், ஈட்டிகளையும் எரிகிறார்கள். சாவு அணைக்க வருகையிலும் எதிரிகளைக் கொல்கிறார்கள் ஸ்பார்ட்டன் வீரர்கள். நெஞ்சு முழுதும் அம்புகள் தைக்கின்றன. இதயங்களைப் பிளக்கின்றன ஈட்டிகள். கண்களில் வெறி தாண்டவமாடுகிறது. கைகள் ஏந்திய வாட்கள் பாரசீக வீரர்களின் தலைகளைக் கொய்து தள்ளுகின்றன. அம்புகளும், ஈட்டிகளும் உடல் முழுக்க தைக்கக் தைக்க மரணத்தை முத்தமிடுகிறார்கள் வீரர்கள். தலைவன் கடைசி வரை போராடுகிறான். பாரசீக மன்னனை நோக்கி ஈட்டியை வீசுகிறான். அது பாரசீக மன்னனின் கன்னத்தைக் கிழிக்கிறது. அரண்டு போய் விடுகிறான் பாரசீக மன்னன். ஸ்பார்ட்டன்ஸ் வீரம் பார்த்து அம்புகளை எய்த வீரர்களும் கலங்கி நிற்கின்றார்கள்.

(இந்தியா, இலங்கை, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான் கொடுத்த ஆயுதங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் எதிராய் இலங்கை யாழ்ப்பாணத்தில் நிராயுதபாணியாய் நின்று தங்கள் இன்னுயிரை விட்ட தமிழர்களையும், கொல்லப்படுவோம் என்றும் தெரிந்து இடம் மாறாமல் வாழ்ந்த அவர்களின் வீரத்தைப் பற்றியும் எண்ணித் தமிழனாய் பிறந்ததில் பெருமிதம் கொள்கிறது இதயம்). இதோ இந்த இணைப்பிலிருக்கும் ஸ்பார்ட்டன்ஸ் வீரத்தைப் பாருங்கள்.

போர் முடிந்தது. ஸ்பார்ட்டன்ஸ் தலைவன் கொல்லப்படுகிறான். ஆனால் வெற்றி என்று தன் நாட்டுக்கு சொல்லச் சொன்னானே மன்னன் அது என்ன ஆயிற்று என்று பார்த்தேன். மன்னனின் மாலையைக் கொண்டு சென்ற வீரன் படையினரோடு பேசுகிறான். முன்னூறு வீரர்களைக் கொண்டு முப்பதாயிரம் வீரர்களை எதிர்த்த ஸ்பார்ட்டன்ஸ் வீரர்களை நினைத்துப் பாரசீகம் நடு நடுங்கிக் கிடக்கிறது. இதோ இன்று திரண்டு நிற்கும் இருபதாயிரம் வீரர்களால் பாரசீகத்தின் முப்பதாயிரம் வீரர்கள் எவ்வாறு வெற்றி கொள்ளப்படுவார்கள் என்று விளக்குகிறான் அந்த வீரன். அப்போது தான் எனக்குப் புரிந்தது. 300 வீரர்களைக் கொண்டு பாரசீகத்தை நடுங்க வைக்கவும், தன் இறப்பால் தன் நாட்டு வீரர்களுக்கு வெற்றி பெரும் வழியைச் சொல்லவும், மரணத்தை மணக்கச் சென்ற ஸ்பார்ட்டன்ஸ் மன்னனை எண்ணி மனசு விம்மியது.

மன்னன் தன் மரணத்தால் தன் நாட்டு மக்களின் வெற்றிக்கு வழி வகுத்தான். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 300 ஸ்பார்ட்டன்ஸ் தலைவன் ஒரு உதாரணம்.

: – பஞ்சரு பலராமன்

தலைப்பைத் தவறாக எழுதி விட்டேன். மன்னிக்கவும்.

3 Responses to கருணாநிதி,ஜெயலலிதா சிறந்த தலைவர் யார்?

  1. வீரம் புதைக்கபடுவதில்லை,விதைக்கப்படுகிறது.

    தலைப்பில் சிறு திருத்தம். தலைவன் என்பதற்கு பதில் துரோகி என்று இருக்க வேண்டும்.

  2. Er,L.C.NATHAN சொல்கிறார்:

    INDIYAAVUM KURIPPAAKA THAMIZHAKAMUM EEZHA THAMIZHAR KALUKKU SEITHA THROOKANGKALUKKU MANNIPPU KETKAVENDUM. ADTHTHU VARUM VIDITHALAIPPOORIL KANDIPPAAKA THANI EEZHAM KIDAIKKUM!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: