வயித்தெரிச்சலில் குஞ்சு

என்னடா இது ? குஞ்சுக்கு எப்படி வயிறு இருக்கும் என்று யோசிக்கும் வாசகர்களே, உங்கள் நினைப்பைக் கொண்டு போய் அனுஸ்காவின் மடியில் போட. எப்போது பார்த்தாலும் உங்களுக்கு இதே நினைப்பா இருந்தால் நான் என்னதான் செய்வது ?

மேட்டர் எழுதுவதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகி விடுகிறது. சரி போகட்டும் கதைகள்.

எனக்கு ஏன் வயித்தெரிச்சல் ஏற்பட்டது என்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள். படித்த பிறகு உங்களுக்கு அது எரிந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மேட்டர் ஒன்னு :

ஒரு தனி மனிதன் 158 திருமணங்களைச் செய்து சந்தோஷமாக வாழ்ந்தார் என்றால் நம்ப முடிகிறதா? பெர்சியா நாட்டை சேர்ந்த ஃபாத் அலி ஷா என்ற அரசர்தான் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர். ஷாவுக்கு நிஜப் போர் என்றால் போர் அடிக்கும். எந்த எதிரி மன்னனாவது போர் தொடுக்கத் தயாரானால், வெள்ளைக் கொடியோடு ஆரவாரமாகக் கிளம்பிவிடுவார். அந்த நாட்டு இளவரசியைத் தன் மனைவியாக்கிக்கொள்வார். இப்படியே 158 பேரைத் திருமணம் செய்திருக்கிறார் ஷா. கடைசி வரை அவருக்குப் பாதி மனைவிகளின் பெயரே தெரியாதாம். 158 மனைவிகள் மூலம் 260 குழந்தைகளையும் பெற்றிருக்கிறார். அவர் இறக்கும்போது அவருக்கு இருந்த பேரக் குழந்தைகளின் எண்ணிக்கை 780

மேட்டர் ரண்டு :

சென் என்பவர் பீஜிங் நகரப் பெண். லண்டனில் படிக்கும்போது ஆலன் என்கிற குதிரை யோடு பழகினார். படிப்பு முடிந்து சென் கிளம்பும்போது, ஆலனால் தாங்க முடியவில்லை. சென் எங்கே சென்றாலும் பின் தொடர ஆரம்பித்தது. ஆலனின் அன்பை உணர்ந்து, சென் இப்போது அதற்கு மனைவியாகிவிட்டார்!

மேட்டர் மூனு :

ஸ்வீடன் நாட்டுச் சடங்கு இது. திருமண வரவேற்பின்போது மாப்பிள்ளையையும், மணப்பெண்ணையும் விருந்துக்கு வந்தவர்கள் எல்லோரும் முத்தமிடுவார்கள். சும்மா இல்லை… மாப்பிள்ளை வெளியே சென்றால் படாரென அந்த அறையில் உள்ள ஆண்கள் மணப்பெண்ணை முத்தமிடக் குவிந்துவிடுவார்கள். அதேபோல் மணப்பெண் மாப்பிள்ளையைவிட்டு நகர்ந்தால், எல்லாப் பெண்களும் மாப்பிள்ளைக்கு கிஸ்ஸடிக்க கியூ கட்டி நிற்பார்கள்

படித்து விட்டீர்களா ? இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு வயிறு எரிகிறதா இல்லையா என்று.  ஸ்வீடனில் பிறந்திருக்கலாம் போல. அந்த மச்சக்காரா ராஜாவை நினைத்து நினைத்து எல்லாமே பற்றி எரிகிறது.  ஆனந்த விகடனில் வந்த இணைப்பில் இருந்த மேட்டர் தான் மேலே நீங்கள் படித்தது.  நன்றி ஆனந்த விகடன்

எரிச்சலுடன்

உங்களின் குஞ்சாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: