அரசியல் நாகரீகம் – ஒரு பார்வை

ஜூலை 29, 2010

அரசியலில் நாகரீகம் என்பது மருந்துக்குக் கூட தமிழகத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஜெயலலிதாவை எப்படி எல்லாம் அழைப்பார் என்பது உலகிற்கே தெரிந்த ஒன்று. ஏனென்றால் இதே ஜெயலலிதாவிற்கும் இவ்ர் தான் ஐந்து வருடங்களுக்கு முதல்வர் என்பதையும் மறந்து விடுகிறார். ஒரு முதல்வரை எவ்வாறு அழைக்க வேண்டுமென்பது கூட தெரியாமல் மூச்சுக்கு மூச்சு பெயர் சொல்லி அழைத்து வருவது முன்னாள் முதல்வரின் அரசியல் நாகரீகம்.

படித்த, பண்பட்ட, அரசியல்வாதிகளில் மூத்தவருமான, மதிப்பிற்குரிய தலைவருமான முதல்வர் அவர்கள், அரசியல் நாகரீகத்தை கிஞ்சித்தும் கடைபிடிக்க வில்லை என்பதும் இதே நாகரீகத்தை முன்னாள் முதல்வரும் கடைபிடிப்பதைக் கண்டு நாம் எப்படிப் பட்ட தலைவர்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து வேதனை தான் ஏற்படுகிறது.

ஒரு தடவை திரு நேரு அவர்கள் தன் ஆட்சியைப் பற்றி தானே விமர்சித்து புனை பெயரில் கட்டுரை வெளியிட்டாராம். அந்தளவுக்கு மக்களின் மீதும், ஜன நாயகத்தின் மீது அபிமானமும், இந்தியாவின் வளர்ச்சியின் மீது அக்கறையும் கொண்ட தலைவர்கள் இருந்த இந்தியாவில், இப்போது இருக்கும் தலைவர்களின் யோக்கியதையை என்னவென்று சொல்வது.

கக்கன் என்ற உள்துறை அமைச்சரைப் பற்றி பத்திரிக்கையில் வெளியான செய்தி ஒன்றினைப் படித்தேன். அரசுப் பதவியில் இருந்து இறங்கிய அடுத்த நாள், பஸ்ஸில் சென்றாராம் அவர். இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகளில் எவராவது இத்தகைய தூய உள்ளத்தோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்களா என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்?

தமிழக அரசியலைப் பொறுத்தவரை தலைவர்களைப் பார்த்து தான் பிறரும் தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதை ஆணித்தரமாய் சொல்லலாம். அதிமுக முன்னாள் அமைச்சர்களும், திமுக அமைச்சரும் பேசிய் பேச்சுக்களே அதற்கான ஆதாரங்கள்.

”தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசுன்னு சொல்ற ஜெயலலிதா இன்னும் மேஜராகலையா? அந்த அம்மாவை எப்படி கன்னித்தாய்னு கூப்பிடுறாங்க? குழந்தை கிழந்தை பெத்து இருந்தாதானே அதுக்கு குடும்பத்தோட அருமை தெரியும்…”

–  திரு மு.க. அழகிரி – திமுக மத்திய அமைச்சர்

”கருணாநிதி பிறந்த நாளுக்கு நைட்டு ரெண்டரை மணிக்கு கனிமொழி வாழ்த்து சொல்லுறார். அடுத்து கட்சியில புதுசா சேர்ந்த குஷ்பு வாழ்த்து சொல்லுறார். இதுல என்னாச்சு தெரியுமா… குஷ்பு வீட்டுல பிரச்னையாகிடுச்சு. (கண்ணடித்து ஜாடை காட்ட… அவர் முகத்தைப் பார்க்க சகிக்கவில்லை!) அவங்க குடும்பத்துல மட்டுமில்ல… கருணாநிதியால பல குடும்பத் துலயும் பிரச்னைதான். அழகிரி ஒரு அமாவாசை. அவர் ஆட்டம் இன்னும் ஆறு மாசத்துக்குத்தான். அதுக்கு அப்புறம் அம்மா ஆட்சிதான்!”

– திரு ராம ராஜன் – அதிமுக

”டேய், போலீஸ்காரங்களா… என்னாங்கடா நினைச் சிட்டு இருக்கீங்க. நான் தேனியில் ரூம் போட்டு இருந்தேன். ஒரு போலீஸ்காரன் உள்ளே வந்து, ‘கூட்டத்துல நீங்க அப்படிப் பேசணும்… இப்படிப் பேசணும்… என்ன பேசப் போறீங்கன்னு எழுதிக் கொடுங்க…’னு எனக்கே கிளாஸ் எடுக்குறான். நான் என்ன உன்னைப் பெத்த அம்மாவையா தாக்கிப் பேசப் போறேன்? சரிதான் போடா… எங்க அம்மா பரம்பரை பணக்காரங்க. ஆனா அவங்க மதுரையில திருட்டு சி.டி., பழைய துணி வித்துட்டு திரிஞ்சாங்க. அவங்களுக்கு என்ன பாரம்பரியம் இருக்கு? அவங்களுக்கு எப்படி நாகரிகம் தெரியும்? தா.கிருஷ்ணனை கொலை செஞ்சவன் யாரு? தினகரன் பத்திரிகையை எரிச்சு ரவுடித்தனம் பண்ணினது யாரு? எங்க அம்மாவுக்கு 10 மொழி தெரியும். உனக்குத் தமிழும் ஒழுங்கா வராது. இங்கிலீஷ§ம் தெரியாது. உனக்கு எல்லாம் ஒரு மத்திய மந்திரி பதவி… அதான் மொழி தெரியாம பயந்துட்டு நாடாளுமன்றத்துக்குப் போகாம மாலத்தீவுல போயி படுத்துக்கிற…”

– முன்னாள் அமைச்சர் திருமதி வளர்மதி – அதிமுக

(இதே முன்னாள் அமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினரைப் பற்றி அமைச்சரின் பேச்சு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஏதோ இந்தியாவில் ஒட்டிக் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகம், இருக்கிறது என்பதற்கு சாட்சியாய் சில நீதிபதிகளும், நேர்மை தவறாத காவல்துறை அதிகாரிகளும் இருக்கின்றார்கள் என்பதே சாட்சி. அவர்களையும் முன்னாள் அமைச்சர் ஏகத்துக்கும் பேசியிருப்பதை வைத்து, என்ன எழுதுவது என்றே புரியவில்லை)

”கருணாநிதி குடும்பத்து ரகசியம் எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். அதையும் சொல்லுறேன் கேளுங்க. (பல வார்த்தைகள் இங்கு பிரசுரிக்க முடியாதவை…) கருணாநிதி வீட்டுத் திண்ணையில் யார் யாரெல்லாம் படுத்துக் கிடந் தாங்கனு எனக்குத் தெரியும். ..”

– ராஜ்யசபா எம்பி திரு எஸ். எஸ். சந்திரன், அதிமுக

நன்றி : செய்தி வழங்கிய ஜூவி

: அரச்சான்


தமிழக அமைச்சர்களின் கல்வி நிலையங்கள்

ஜூலை 29, 2010

தமிழகத்தில் இன்றைக்கு ஒரு மாணவன் தரமான கல்வியைப் பெற வேண்டுமென்றால் குறைந்த அளவாக கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டும். அரிசி கொடுக்கிறேன், நிலம் கொடுக்கிறேன், டிவி கொடுக்கிறேன், கேஸ் இணைப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லும் திமுக முதலமைச்சரை அனைவருக்கும் கல்வி இலவசமாய் அதுவும் தரமாய் கொடுக்கிறேன் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். சொல்ல மாட்டார் என்றே நம்புகிறேன். அவர் அவ்வாறு சொல்லமாட்டார் என்பதற்கு காரணம் கீழே இருப்பதை படித்து விட்டு நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள்.  தமிழர்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் தனியார் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இருக்கவே கூடாது. கல்வி அனைவருக்கும் இலவசமாய் கிடைத்தால் தானே வாழ்வில் முன்னேற்றம் வரும். திமுகவும், அதிமுகவும் தமிழக மக்களுக்கு செய்யும் நன்மைகளை இதை வைத்து முடிவு கட்டிக் கொள்ளலாம்.

– அரச்சான்.

”சாமானியர்களின் இயக்கம், குடிசைவாசிகளின் கொலுமண்டபம் என்று சொல்லப்பட்ட தி.மு.க., இன்று புதிய முதலாளிகளின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. ஒரு குடும்பத்தின் ஆட்டுவிப்பில் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டு இருக்கிறது. வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் என்றால், சேலம்-ஈரோடு சாலையில் 75 ஏக்கரில் வி.எஸ்.ஏ. தொழில்நுட்பக் கல்லூரி, 89-ம் ஆண்டு புல்லட் பைக் வைத்திருந்த கே.என்.நேருவுக்கு திருச்சி-மணப்பாறை சாலையில் ‘ஏ டு இசட்’ கல்லூரி, சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு கடலூரில் பொறியியல் கல்லூரி, 89-ல் அரசியலுக்கு வந்தபோது சொந்த வீடுகூட இல்லாத பொன்முடிக்கு, இன்று விழுப்புரத்தில் ஒரு பொறியியல் கல்லூரி, எம்.ஜி.ஆரின் உதவியால் படித்த துரைமுருகனுக்கு வேலூரில் சப்தகிரி பொறியியல் கல்லூரி, ஒன்றியச் செயலாளராக இருந்த பொங்கலூர் பழனிச்சாமி, இன்று அமைச்சராகிக் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி, எ.வ.வேலுவுக்கு எத்தனை கல்லூரிகளோ, தெரியாது…! இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சத்தியப்பிரமாணம் எடுத்தவர்களே கல்விக் கொள்ளை அடிக்கும் சாதனை கிடை யாது…”
– மதிமுக நாஞ்சில் சம்பத் சொன்னதாக ஜூவியில் வெளியான ஜூவியின் கேள்விக்கு அவரின் பதில் தான் மேலே இருப்பது. நன்றி : ஜூவி மற்றும் நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு.

மாட்டிக் கொண்ட எழுத்தாளர்

ஜூலை 27, 2010

அன்பு வாசகர்களே, சற்று நேரத்திற்கு முன்புதான் ஒரு எழுத்து ஆளர் தானாகவே பொறிக்குள் வந்து மாட்டிக் கொண்டதாக பதிவிட்டிருக்கிறார்.

தனது ஃப்ளாக்கில் வாசகர்கள் கமென்டை கேன்சல் செய்தவர் , ட்வீட்டரில் பட்டயக் கிளப்பபோகிறாராம் இந்த அரி பரி எழுத்து ஆளர். கமென்ட்ஸ் போடவெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். எந்த வித எதிர்ப்புக்கு கருத்துக்கும் பதில் சொல்லத் தெரிய வேண்டும். அந்தளவுக்கு தைரியமெல்லாம் அவரிடம் கொஞ்சம் கூட கிடையாது.

புகழுரைகளை மட்டும் வெளியிட்டு சொரிந்து கொள்வார். மிளகாய் பொடி தூவி வரும் கடிதத்தை ஙோத்தா நொம்மா கடிதம் என்பார். அதைப் படித்து விட்டு உச்சி முதல் உள்ளங்கால் வரை புளகாங்கிதப் படும் அடிப்பொடிகள் ஒரு கடித்தை தட்டி விடும். அக்கடிதமும் உடனே பதிவேற்றப்படும்.உடனே கடிதம் எழுதிய அடிப்பொடிகள், குண்டிக்குள் கார மிளகாயைச் சொருகியது போல குதிப்பார்கள். போட்டோ போடுவார்கள். இன்னும் என்னென்னவோ ரகளையை செய்வார்கள்.

இதே அமெரிக்காவாக இருந்தால் ( வேண்டாம், ரொம்பக் காரமாய் இருக்கிறது)

ஆக இத்தனை நாளும் பதிவுலகில் அவரின் எழுத்தைக் கலாய்த்துக் கொண்டிருந்த வாசகர்களுக்கு இனிமேல் அவரின் ஒவ்வொரு பதிவையும் விமர்சிக்கலாம். ஜமாயுங்கள்.

பாவம் எழுத்து ஆளர்.

– குஞ்சு குலசேகரன்


மக்களாட்சி என்ற கட்டுக்கதை

ஜூலை 27, 2010

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுவர்களால் ஆளப்படுவது இந்தியா என்று இதுதான் மக்களாட்சி என்றும் சொல்கின்றார்கள். கீழே இருக்கும் செய்தியைப் படித்து விட்டு இந்தியாவில் நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளின் கண்கட்டு வித்தைகளில் ஒன்று மக்களாட்சி என்பது. மக்கள் இன்றைக்கும் ஏழைகளாய், அடிமைகளாய், சேவகர்களாய் வாழ்ந்து வருகிறார்கள். நமது இந்தியா ஒரு அடிமைகள் தேசம் என்பதை நீங்கள் மறுப்பீர்களா?

– பஞ்சரு பலராமன்.

போபால் :போபால் விஷ வாயு சம்பவத்தை விசாரித்த என்.கே.சிங் கமிஷனின் ஆவணங்கள் தலைமை செயலகத்திலிருந்து காணாமல் போய்விட்டன. எனவே, இந்த விஷ வாயு சம்பவம் குறித்து மீண்டும் தீர விசாரிக்கப்படும், என, மத்தியப்பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச சட்டசபையில் நேற்று போபால் விஷ வாயு சம்பவம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப் ஆகியூல் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:உலகின் மிக மோசமான அழிவு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தண்டிக்காமல் விடுவதில்லை;பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீட்டு தொகையை வாங்கித் தருவது என, எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.விஷ வாயு சம்பவத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு ஆலையின் தலைவர் வாரன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டும் பாதுகாப்பாக தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எந்த சூழ்நிலையில் யாருடைய உத்தரவின் பேரில் அவர் பாதுகாப்பாக அனுப்பப்பட்டார், என்பதற்கு அப்போதைய மாநில முதல்வர் அர்ஜுன்சிங் பதில் சொல்லியே ஆக வேண்டும்.விஷ வாயு சம்பவம் குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட ஒருநபர் என்.கே.கமிஷனின் விசாரணை நீட்டிக்கப்படவில்லை.

அப்போதைய அரசு இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய அரசின் சொல்படி தான் செயல்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தான் எப்படி பேச வேண்டும், என்பது கூட மத்திய அரசிடம் கேட்டு தான் அப்போதைய முதல்வர் பதில் அளித்துள்ளார். என்.கே.கமிஷன் விசாரணை அறிக்கை குறித்த ஆவணங்கள் கூட தலைமை செயலகத்திலிருந்து காணாமல் போய்விட்டன. அந்த அளவுக்கு யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகத்தை காப்பாற்ற முயற்சிகள் நடந்துள்ளன.பல ஆயிரம் பேர் பலியான இந்த சம்பவத்தை குற்ற வழக்காகவோ, பல பேர் கொல்லப்பட்ட சம்பவ வழக்காகவோ கருதி சி.பி.ஐ.,இந்த வழக்கை விசாரிக்காமல் சாதாரணமாக விசாரித்துள்ளது.எனவே, அப்போதைய சம்பவத்தின் பின்னணியை மீண்டும் நாங்கள் தீர விசாரிப்போம்.இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

–   நன்றி தினமலர்


ஒரு குட்டியின் குட்டிக்கதை

ஜூலை 26, 2010

அந்தக் குழந்தையின் பெயர் வர்ஷா. அவளுக்குத் தாய் இல்லை. அப்பாவிடம் வளர்ந்தாள். தாயில்லாத குழந்தையாக இருந்தால் தறுதலையாக மாறிவிடும் என்று எதுகை மோனையாக யாரோ சொல்லி வைத்ததை நினைத்து பயந்து, வர்ஷாவை மிகவும் கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்த்தார் அப்பா.

ஒரு நாள் வர்ஷா தனது பாடப் புத்தக்கத்திலிருந்து ஒரு பேப்பரைக் கிழித்து, பென்சில் பாக்ஸில் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர், “பேப்பரைக் கிழிப்பியா..?” என்று ஆக்ரோஷத்துடன் அவளைத் திட்டி, கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்தார். சில நிமிடங்களில் மீண்டும் அவரிடம் வந்த வர்ஷா, கண்களில் பயத்தோடு கலர் காகிதம் சுற்றப்பட்ட ஒரு பரிசுப் பெட்டியை தன் அப்பாவிடம் நீட்டி, “ஹாப்பி பர்த் டே டாடி” என்றாள். “தாங்க் யூ” என்று சம்பிரதாயமாக சொல்லியபடியே பரிசு பொருளைப் பிரிக்க, அதற்குள் ஒரு காலியான பென்சில் பாக்ஸ்!

அவருக்கு வர்ஷாவின் இந்த ஏமாற்றும் விளையாட்டு பிடிக்கவில்லை. “யாரையும் ஏமாற்றி இப்படி விளையாடக்கூடாதுனு உனக்குத் தெரியாதா? வீட்ல இருக்கற பழக்கம்தான் வெளியிலேயும் வரும்” என்று அவர் மீண்டும் கோபத்தில் வெடிக்க, அப்பாவின் இந்த ரியாக்ஷனை எதிர்பாராத வர்ஷாவின் கண்களில் மளமளவென நீர் வழிய… “அது காலி பாக்ஸ் இல்லை டாடி. அதுல உங்களுக்கு நான் ஹண்ட்ரட் கிஸ்ஸஸ் வச்சிருக்கேன்! நல்லாப் பாருங்க!” என்று குழந்தை அழுதுகொண்டே சொன்னபோது, அவள் அப்பாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. தன் தவறை உணர்ந்தவர் தரையில் மண்டியிட்டு, “ஸாரிடா” என்று சொல்லி, தன் குழந்தையை அள்ளி மார்பில் அணைத்துக் கொண்டார்.

அன்றிலிருந்து அவருக்கு எங்கு, யார் மீது கோபம் வந்தாலும், தன் மகள் கொடுத்த முத்தங்களால் நிறைந்த பென்ஸில் பாக்ஸை நினைத்துக் கொள்வார். அப்போது கோபங்கள் மறைந்து எதிரில் நிற்கும் மனிதர்கள் மீது அவருக்கு ஒரு புரிதல் மலரும்!

உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் யார்?’ என்று மாவீரன் அலெக்ஸாண்டரை கேட்டால்… ‘கிரேக்க அறிஞன் அரிஸ்டாட்டில்’ என்று சொல்வான். அரிஸ்டாட்டிலைக் கேட்டால், ”தத்துவமேதை பிளாட்டோ”வை கைகாட்டுவார். பிளாட்டோவைக் கேட்டால், ‘பகுத்தறிவு பகலவன் சாக்ரடீஸ்’ என்பார். ‘உலகின் மிகச் சிறந்த ஆசிரியர் யார்?’ என்று அதே கேள்வியை சாக்ரடீஸைப் பார்த்துக் கேட்டால்… ‘குழந்தை’ என்று பதில் சொல்வார்.

மிகமோசமான உணர்ச்சி கோபம். மிகச்சிறந்த கேடயம் புன்னகை. அதனால் எதிரியின் முன்னால் நின்றால்கூட உங்களின் புன்னகை, அவர்களை பலவீனப்படுத்திவிடும்.

நன்றி : சுகபோதானந்தா, அவள் விகடனில் ரிலாக்ஸ் ஃப்ளீஸ் பெண்ணே தொடரிலிருந்து

அடியேன் படித்த நல்ல விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


உங்களுக்கு அவசியமானது

ஜூலை 25, 2010

உங்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அனாதி ப்ளாக்கின் ஸ்டேட்டிக்ஸ் பற்றிய விபரத்தை கீழே பாருங்கள். நேற்றைக்கு அரச்சான் எழுதிய பதிவினை படித்த் தனி ஐப்பி அட்ரஸ் எத்தனை என்று பாருங்கள். பேஜ் வியூ 2200க்கும் மேலே என்று வெப்சை அவுட்லுக் சொல்கிறது. இத்தனைக்கு நீங்களே காரணம். உங்களின் அன்பிற்கும் எங்களது நன்றி.

– அனாதியும் அவனது நண்பர்களும்.

இன்று காலையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு விஷயத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவ்விஷயம் அனைவருக்கும் உபயோகமான ஒன்று.  முடிந்தால் அனைவரும் பின்பற்ற முயலுங்கள். உங்களின் உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யக்கூடியது.

நான்கு நண்பர்கள் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். ஜோக் ஒன்று சொல்லப்பட்ட அந்த நான்கு நண்பர்களில் ஒருவர் மிகவும் சத்தமாக சிரித்து மகிழ்ந்திருக்கிறார். இவர் சத்தமாக சிரிப்பதைக் கண்டு என்ன இப்படி சிரிக்கின்றார் இவர் என்று மேலும் கீழும் பார்த்தபடியே ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டு அதை வாய் விட்டு சொல்லியபடியே சென்றிருக்கின்றனர். அனைவரும் இதைக் கேட்ட பின்பு, மெதுவாக நண்பரிடம் மெதுவாக சிரிக்கலாமே என்று கேட்க, அதற்கு சத்தமாக சிரித்த நண்பர் சொல்லியிருக்கிறார்.

எனக்கு சிரிக்கணும் என்று தோன்றியது சிரித்தேன். பிறர் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி எனக்கு என்ன கவலை. அது என்னைப் பற்றி நினைப்பவரின் பிரச்சினை என்று சொல்லி விட்டார்.  மேட்டர் ஓவர்.

நடிகர் விஜய்யின் படத்தில் கூட ஒரு சீன் வரும். திருமணத்தின் போது மாமா பெண், இவரைக் கல்யாணம் கட்டிக் கொள்ளப் பிடிக்காமல் ஓடி விடுவாள். விஜய் அது பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை. டீக்கடையில் ஒருத்தன் எனக்கே ஒரு மாதிரியாக இருக்கும் போது, இவருக்கு எப்படி இருக்கும் என்று பேசுவான். அதைக் கேட்ட விஜய், என்னைப் பிடிக்கவில்லை என்பது என் மாமா பெண்ணின் பிரச்சினை. அவளுக்குண்டான பிரச்சினை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். போய் வேலையைப் பாருங்கடா என்பார்.

பிறர் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? அப்படிக் கவலைப்பட ஆரம்பித்தால் நம் வாழ்க்கை பிறர் கையில் அல்லவா சென்று விடும். ஆகவே நாம் நமக்காக மட்டுமே வாழ்வோம்.

– அன்புடன் பஞ்சரு பலராமன்


அதிகாரத்தின் ஆட்டம் அடங்காது

ஜூலை 24, 2010

ஆயிரக்கணக்கில் வருகை தரும் வாசக நண்பர்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவிக்கிறோம். இத்தனை வாசகர்கள் படிக்க வருகின்றார்கள் என்ற சந்தோஷம் ஒரு பக்கமிருந்தாலும் தினம் தோறும் பதிவுகள் எழுத வேண்டிய அவசியத்தையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஏனென்றால் வாசகர்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை.

– அனாதியும் அவனது நண்பர்களும்.

அதிகாரத்தின் ஆட்டம் அடங்காது

அதிகாரம் எப்போதுமே ஜெயித்துக் கொண்டிருக்கும். அதிகாரத்தின் செயலே அது நினைப்பது நடக்க வேண்டுமென்பதுதான். வெற்றி என்றால் அதிகாரம். இதை ஒவ்வொருவரும் மறந்து விடுவதுதான் பிரச்சினைகளுக்கு காரணம்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர்களுக்கு உள்ளூர தார்மீகக் கோபம் இருக்காது என்றா நினைக்கின்றீர்கள்?நிச்சயமாய் இருக்கும். ஆனால் இந்தக் கோபம் அவர்களுக்கு சத்ரு ஆகி விடுமென்பதால் அதிகாரத்தின் நிழலில் ஒதுங்கி விடுகின்றார்கள். அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதிகாரத்தைப் போற்றிப் பாட வேண்டும். இல்லையெனில் குடிக்க கஞ்சியும், இருக்க வீடும் இல்லாமல் நடுத்தெருவில் கிடக்க நேரிடும். மக்களுக்காக ஓடி ஓடி உழைத்த உத்தமர் கக்கன் கடைசிக் காலத்தில் அரசாங்க ஆஸ்பத்திரியின் வராண்டாவில் கிடந்து செத்தார். எந்த மக்களுக்காக உழைத்தாரோ அந்த மக்களில் ஒருவர் கூட அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் நலன் மீது அக்கரை என்பது ஆபத்தில் கொண்டு சேர்க்கும் வழியாக ஆகிவிட்டது.

ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷினால் இன்று தமிழகக் கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய ஆபத்து உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் மனிதர்களுடையே இருக்கும் உறவுப் பிணைப்பை இம்மாதிரியான கார்பொரேட் நிறுவனங்களின் விற்பனைக் கூடங்கள் உடைக்கின்றன. அதன் பலனாக அவைகளுக்குத் தேவையான வருமானத்தை பொதுமக்களிடமிருந்து பெற்று விடுகின்றன. கார்ப்பொரேட் நிறுவனங்கள் பொதுமக்களின் நன்மையினை என்றுமே சிந்தித்தது இல்லை. இவைகள் அதிகார வர்க்கத்தின் நிழல் உலக அடியாட்களாய் இருக்கின்றன.

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷூக்கு எதிராய் எத்தனை போராட்டங்கள் நடந்தன. ஆனால் அப்போராட்டங்களால் என்ன நடந்தது? ரிலையன்ஸ் இன்று நன்றாகவே வியாபாரம் செய்கிறது. எதிர்ப்பும், போராட்டமும் இன்றைக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் தொழிலாக மாறிவிட்டது.

அதிகாரமும், ஆட்சியும், அரசியல்வாதிகளும் என்றைக்குமே மக்களுக்கு நல்லது செய்யவே மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை பொன்னும், பொருளும் கொட்டிக் கொடுக்கும் நிறுவனங்களே. ஒரே ஒரு ஓட்டுப் போடும் மக்கள் அல்ல. இதை என்றைக்கும் நாம் மறந்து விடக்கூடாது. மறந்து விடுவதால் தான் மக்கள் நலன், ஜன நாயகம் என்றெல்லாம் சிந்தித்து எழுதவும், பேசவும் முற்படுகிறோம். எழுதுவதாலும், பேசுவதாலும் அதிகாரம் தன் பாதையை என்றைக்குமே மாற்றிக் கொள்ளப் போவதில்லை. அதிகாரத்தை அனுசரித்துச் சென்றால் வாழும் வரைக்கும் பிரச்சினைகள் இல்லாமல் வாழலாம். எதிர்த்தால் சிறையில் கிடக்கலாம். எது நல்லது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்லி முடித்து விடுகிறேன்.

வளர்ச்சி என்பது பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரம் மேன்மையடைவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. இதோ இந்த நீதிபதிகள் சொல்வதைப் படியுங்கள். யாருக்குத் தெரியும் இந்தக் கருத்துக்களை கூறியதால் நாளை இவர்கள் மர்மமாக கொல்லப்படவும் கூடும். அப்போதும் பத்திரிக்கைகள் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளும். ஏனென்றால் கார்ப்பொரேட் நிறுவனங்கள் வழங்கும் காசில் தான் பத்திரிக்கை அதிபர்களின் பிள்ளைகள் ஆடி காரில் வலம் வருகின்றார்கள்.  கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படித்துப் பாருங்கள். இந்தப் பதிவுக்கும் இச்செய்திக்கும் இருக்கும் உண்மையினை நீங்கள் உணரலாம்.

– அரச்சான்


%d bloggers like this: