பழ கருப்பையா தாக்குதல் பின்னனி என்ன?

கடந்த வாரமென்று நினைக்கிறேன். ஜெயா டிவியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரபி பெர்னாட்டும் பழ கருப்பையாவும் உரையாடிக் கொண்டிருந்தனர்.  எப்போதும் ரபி பெர்னாட் எடுத்துக் கொடுக்க பேட்டி கொடுக்க வருபவர்கள் தலையாட்டியும், ரபி பெர்னாட்டின் புள்ளிகளுக்கு இடையே தங்களது கருத்தையும் இணைத்து ஒரு வழியாக ஒப்பேற்றுவார்கள். ஆனால் ரபி பெர்னாட்டின் வேலை அதிமுகவின் இலக்கிய அணித் தலைவரான பழ கருப்பையாவிடம் எடுபடவில்லை. அவர் பாட்டுக்கு திமுகவை தாளித்துக் கொண்டிருந்தார்.

துக்ளக்கில் எழுதி வரும் பழ கருப்பையா திமுகவை சாடியே தனது கட்டுரைகளை எழுதுவார். அதில் உண்மைகளும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட திரு ராஜாவை விமர்சிப்பார். திமுகவின் குடும்ப அரசியலை விமர்சிப்பார். இப்படி இன்னும் பல.  கட்டுரைகளில் இலக்கிய மேற்கோள்களும், உவமைகளும் சரளமாய் கையாள்வார். அந்த அளவுக்கு இலக்கிய ஆளுமையும், வார்த்தைப் பிரயோகங்களிலும் தனக்கென்ற ஒரு பாணியைக் கொண்ட நல்ல எழுத்தாளர் பழ.கருப்பையா.

ஆனால் நேருக்கு நேர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக முதலமைச்சரை  மான..கெட்…னே என்று திட்டினார். இவ்வார்த்தையைக் கேட்ட ரபி பெர்னாட் முகத்தில் ஈ ஆடவில்லை. பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திக்கென்றது. அரை நிமிடம் அதிர்ச்சியில் உரைந்த ரபி பெர்னாட் நிகழ்ச்சியை முடிப்பதாக அறிவித்து முடித்து விட்டார்.

படித்தவர், பண்பாளர் என்ற வகையில் பழகவின் இவ்வார்த்தைப் பிரயோகம் சற்றும் உகந்தது அல்ல.  மாநிலத்தின் முதலமைச்சர் என்ற வகையில் கலைஞருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் பழ.க அதை மறந்து விட்டார் என்பது தான் ஆச்சரியம். முதலமைச்சரை ஒருமையில் பேசுவது, தீச்சுடு சொற்களால் விமர்சிப்பது என்பதெல்லாம் படித்தவர்களுக்கு அழகல்ல. சர்ச்சைகள், கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருக்கலாம். அதற்காக மரியாதைக் குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது நன்றாக இருக்காது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் அதை மறந்து தமிழ் விழாவா என்ற ஆவேசத்தில் பழகவின் வார்த்தைகள் கோபத்தில் வெளிப்பட்டிருக்கும் என்றாலும் பத்திரிக்கை துறையில் இருக்கும் பழ. கவின் இவ்வார்த்தை மிகவும் அதிகப்படியான தனி மனித தாக்குதல் என்றே நான் நினைக்கிறேன்.

கலைஞரின் தமிழ் பொங்கிய மனோகராவினால் எத்தனையோ இளைஞர்கள் அவரின் பால் கவரப்பட்டார்கள். கலைஞரின் அரசியல் பாதை எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அவரின் தமிழ் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும். கலைஞர் தமிழர்களில் மரியாதைக்குரிய தலைவர் என்பது உண்மை.

பழ.கவின் பேச்சால் ஆவேசப்பட்டவர்கள் பழ.கவின் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது ஜன நாயக விரோத செயல். இதை கலைஞர் அனுமதிக்க மாட்டார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி போராட்டம்  நடத்தி இருக்கலாம். அல்லது காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருக்கலாம். அதை விடுத்து தாக்குதல் என்பது தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கி விடும் என்பதை தாக்குதல் நடத்தியவர்கள் மறந்து விட்டார்கள் போலும். தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதால் பழ.கவின் மீதான தாக்குதலுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் இப்பதிவை எழுதினேன். மற்றபடி நான் எந்தக் கட்சிக்கு ஆதரவாளனும் இல்லை. எதிர்ப்பாளனும் இல்லை என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பஞ்சரு பலராமன்

One Response to பழ கருப்பையா தாக்குதல் பின்னனி என்ன?

  1. lnarendran சொல்கிறார்:

    INRU VARAI INTHA THAAKKUTHAL KURITHTHU KARUNAANITHI VAAEE THIRAKKAVILLAIYEE YEAN?? IVAR SOLLITHTHAAN THAAKKUTHAL NADANTHTHATHAA??

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: