கிளாடியேட்டர் மேக்ஸிமஸ்

அன்பு வாசகர்களே,

தொடர்ந்து தாங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு உங்களின் ஒருவனான குடிகாரன் நன்றியினைத் தெரிவிக்கிறான். பெண்களின் பெயரில் வரும் மெயில்கள் ஒவ்வொன்றும் அமெரிக்கா வைத்திருக்கும் அணுகுண்டு போலவே தெரிவதால், அனாதியின் அறிவுறுத்தல் படி யாருக்கும் நாங்கள் பதில் மெயில் அனுப்புவதில்லை. ஆகவே பதில் மெயில் கிடைக்காதவர்கள் மன்னியுங்கள்.

அனாதியின் பதிவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஒரே வரியில் இப்படிச் சொல்லலாம். எதுவும் உண்மை இல்லை ஆனால் அனைத்தும் உண்மை.

காற்று வெளியில் டிஜிட்டல் உருவில், எழுத்துக்களாய் மிதந்து கொண்டிருக்கும் எங்களின் எண்ணங்கள் லட்சக்கணக்கான தடவை படிக்கப்படுகிறது என்ற சந்தோசத்தில் கிளாடியேட்டரை தொடருகிறேன். அனாதி தற்காலிகமாக பிசினஸில் கவனம் செலுத்துவதால் தொடர்ந்து நாங்களே எழுதுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி கிளாடியேட்டர்…..

கிளாடியேட்டர் படம் பார்த்திருக்கின்றீர்களா? சோம்பல் படாமல் ஒதுக்கி விடாமல் கொஞ்ச நேரம் வரிகளின் ஊடே புகுந்து வாருங்கள். உங்களுக்குள் எழும் உணர்ச்சிகளை உணருங்கள்.

படைத்தளபதி மேக்ஸிமசுக்கு அரசர் கொடுக்கும் மரியாதையைக் கண்டு பொறாமை கொள்ளும் அரசனின் மகன் தளபதியின் அன்பு மனைவியாம் ஆரணங்கு, அழகின் உருவம், அன்பின் வடிவம், ஆன்ந்தத்தின் வாசல், வாழ்க்கையின் வசந்தம், குதூகலத்தின் வடிவாய் திகழ்ந்தவளை தன் போர் வீர்ர்களை வைத்து கற்பழித்துக் கொன்று தூக்கில் தொங்குவிட்டான்.

கைகளில் தவழ்ந்த சொர்க்கம், மழலை பேசி கடவுளின் மொழியைக் காதால் கேட்க வைத்த அரும்பு, வீசும் இளம் தென்றல், பிஞ்சு விரல்களில் இன்பத்தை வாரி வழங்கியன், சிரித்தால் சொர்க்கத்தையே கண்ணில் காட்டியவன், அழுதால் நரகத்தின் வாசலைக் காட்டியவன், அழகன், அன்பன், இன்பமான மேக்ஸிமஸின் குழந்தையைக் கூட தூக்கில் தொங்க விட்டான் அரசனின் மகன்.

இனி வாழ்வெதற்கு? ஏன் உயிர் வேண்டும்? உடம்பும் மனசும் ஒருங்கே செத்து பிணம் போல கிடந்த தளபதியை அடிமைகளை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஒருவன் கண்டெடுத்து உயிர்ப்பிக்கின்றான். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று தமிழர்கள் சொல்வார்கள். உலகத்தையே தன் வெற்றியால் நடுங்க வைத்த வீரத்தளபதி மேக்ஸிமெஸ் உப்பிட்டவருக்காக உழைத்தான். அதுவும் பிறரைக் கொன்று வாழ்ந்தான்.உலகிற்கே முன்னுதாரணமாய் வாழ்ந்தவனின் இன்றைய நிலையை பார்த்தீர்களா அன்பு உள்ளங்களே?

தனக்குப் பிரச்சினையாக வந்து விடுவானே என்ற நினைப்பில் தளபதியின் குடும்பத்தையே கொன்றானே படுபாவி அரசன் மகன், அவன் ரோம் நகரில் என்ன செய்து கொண்டிருந்தான் தெரியுமா? ரோம் நகரத்து மக்களுக்கு இலவச சாப்பாடு, இலவச குடி, என்னேரமும் கேளிக்கைகள் என்று மக்களை போதையிலையே வைத்திருந்தான். மந்திரி பிரதானிகளை மதிப்பதில்லை, ஆட்சியையும் ஒழுங்காய் நடத்துவதில்லை, எதிர் கருத்துச் சொல்பவரை சிறையில் அடைத்தான். விஷம் வைத்துக் கொன்றான். நாட்டைச் சுடுகாடாக்கி, தன் வீட்டை எமனின் அலுவலகமாக்கினான். எதிர்ப்பவருக்கு பரிசாக சாவை வாரி வழங்கினான். சலாமிடுபவருக்குச் சன்மானம், பதவி, புகழ், பணம், குட்டி, குடி என்று அள்ளி இரைத்தான். ரோம் நகரத்து மக்களை யோசிக்கவே விடுவதில்லை. சாப்பாடு இலவசம், குடியும் இலவசம் அத்தோடு கேளிக்கைகளும் இலவசமாய் கிடைக்க, ரோம் நகரத்து மக்கள் உழைப்பதையே மறந்து விட்டனர். இலவசத்தின் வலிமை இது. மக்களை மாக்களாக்கினான். அரசனை எதிர்ப்பார் இல்லை. கேள்வி கேட்பார் யாருமில்லை.

ரோம் நகரத்து தெருக்களில் மது வழிந்தோடியது. காமமும், போதையும் வழிந்தோடிய ரோம் நகரத்தில் இரக்கமோ, அன்போ, பாசமோ ஏதுமின்றி காட்டு மனிதர்களை, அரக்கர்களைப் போல மக்களை மாற்றினான் அரசன்.

அடிமைகளை வைத்து அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொன்று சாகச் செய்தான். அவர்களை தன் பலி ஆடுகளாய் மாற்றினான். தங்களுக்குள்ளேயே அடிமைகள் அடித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் கொலை செய்தார்கள். அவர்களை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடினான் அரசன். அடிமைகளின் கொலையாட்டத்தையே கேளிக்கையாக்கினான். மக்களை கொலை வெறி பிடித்தலையும் மிருகங்களாக்கினான்.

அங்கு வந்து சேர்ந்தான் அடிமைகளோடு அடிமைகளாய் மாறிக் கிடந்த வீரத்தளபதி, ஆண்மையின் மகன் மேக்ஸிமஸ். அடிமைகளால் தளபதியை நெருங்கவே முடியவில்லை. நடந்த அத்தனை கொலைப்போட்டிகளிலும் அடிமைகளை இரக்கமின்றிக் கொன்றான் மேக்சிமஸ். கேளிக்கைகளில் மூழ்கி மூளை மழுங்கிக் கிடக்கும் மக்களை பார்த்துக் காரித் துப்பினான் தளபதி. மக்கள் தளபதியை அடையாளம் கண்டனர். மழுங்கிய மூளைகளில் புது ரத்தம் பாய உணர்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். கண்டான் அரசன் மகன். கிலி பிடித்தாட்டியது. மக்களின் வெறித்தனத்தில் அரசனின் மகனும் மாட்டிக் கொண்டான். செய்த வினை பிடித்தாட்டியது. அரசனின் மகனை தளபதியோடு மோத மக்கள் ஆர்ப்பரித்தனர். வழி இல்லை. தப்பிக்கவும் மார்க்கமில்லை.

வாழ்வா? சாவா? அரசன் மகன் முன் நின்று எள்ளி நகையாடியது விதி. காலன் கெக்கொளி கொட்டினான். எமகிங்கரர்கள் வேலை வந்து விட்டது என்று ஸ்ட்ராங்கான பாசக்கயிற்றை எடுத்துக் கொண்டு எருமையின் மீது ஏறினர். எமனோ தனக்குள் சிரித்துக் கொண்டான்.

ரோம் நகரத்தில் வானுயர்ந்து நின்றது கேளிக்கை அரங்கம். மக்கள் தலைகளால் நிரம்பிக் கிடந்தது அவ்வரங்கம். போட்டி அதுவும் யார் வாழ்வது என்பதில் போட்டி. போர்க்களங்களில் வெட்டித் தள்ளிய குருதி கொப்பளித்துக் கிடந்த தலைகளின் மீது நடந்த படைத்தளபதிக்கும், சுகத்தில் திளைத்து, கேளிக்கைகளில் மூழ்கிய சோம்பேறி அரசனுக்கும் போட்டி. வாள்கள் பளபளவென்று மின்னின. இடையில் சூது செய்தான் அரசன். தளபதியை அணைப்பது போல அணைத்து, விஷக்கத்தியை இடுப்பில் சொருகினான். சுற்றிலும் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளம். அரசனின் கத்தி இடுப்பில் குத்தி குருதி வழிந்தோடுகிறது. விஷமோ உடம்பின் நரம்பெங்கும் நர்த்தனம் ஆடுகிறது. ஆனால் தளபதியோ கல்தூண் போல நிற்கின்றான். நடக்கிறது சண்டை.

அன்பு உள்ளங்களே இதுவரை என்னோடு, என் வரிகள் ஊடே உங்களின் உணர்ச்சிகளை ஒருங்குவித்து பயணித்த அன்பானவர்களே, இதோ இந்த வீடியோவைப் பார்த்து முடியுங்கள்.

அன்புடன்

குடிகாரன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: