தொடர்ச்சி : ஹரியுடன் நான் திமிர்தனம் – ரமேஷ்

அன்பு ரமேஷ்,

உங்களின் நீண்ட பதிவை பின்னூட்டத்தில் வெளியிடுவது உசிதமல்ல என்பதால் தனி பதிவாக்கி விட்டேன். அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு.  எவ்ளோ பெரிய பாடகர் ஹரிஹரன்? என்று கேட்கும் உங்கள் நண்பர்கள் மிகவும் நல்லவர்கள்.  ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சிக்கு நல்ல பெயர் வேறு வைத்திருக்கின்றீர்கள்.  மனிதனை மதிக்கத்தெரியாதவனெல்லாம் மனிதனே இல்லை என்பது எனது எண்ணம். தான் என்ன சமுதாயத்திற்கு கொடுக்கின்றமோ அதைத் தான் சமுதாயமும் திரும்பவும் தரும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால் அனாதிக்கு ஏகப்பட்ட மெயில்கள் வருகின்றன. அத்தனையும் மூவரைப் பற்றிய விமர்சனம் தான். ஹரிஹரன் பற்றி என் நண்பர் சொன்னது “ தகர டப்பாவிற்குள் கூலாங்கல்”.

பஞ்சரு பலராமன்

+++ /// +++

“ஹரிஹரன் எவ்ளோ பெரிய பாடகர்… எத்தனை சூப்பர் ஹிட் சாங்க்ஸ் கொடுத்திருக்கார் தெரியுமா?… அவரப் பத்தி விமர்சனம் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு?…. ” இப்படியெல்லாம் பல்வேறு கண்டனக் குரல்கள் எனது நண்பர்களிடமிருந்து…

உண்மைதான் நண்பர்களே.. ஹரிஹரன் ஒரு சிறந்த பாடகர் என்பதை நான் மறுக்கவில்லை.. எப்படிப்பட்ட மகா மேதையாகவே இருந்தாலும் பணிவும் பண்பும் இல்லையெனில் அவர் மேதையாக மட்டுமல்ல மனிதனாகவே மதிக்கத் தகுதியற்றவர் என்பதுதான் உண்மை!.. முதலில் ஒரு அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாகரிகம் தெரிய வேண்டும்.. மாபெரும் இசைக்கலைஞன், இசை மேதை என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது.. அவர் நடத்துகிற நிகழ்ச்சி ஒரு இசைப் போட்டி .. இசையை மதிப்பவராக இருப்பின் அப்படித்தான் அசால்டாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு காலை ஆட்டிக்கொண்டு அலட்சியமாக போட்டியாளர்களை விமர்சிப்பாரா?.. அந்த ஜேம்ஸ் வசந்தன் போட்டியாளர்களை அநாகரிகமாக விமர்சிக்கிறார்.. அஹ்டைக் கேட்டு ரசிக்கிறார் ஹரிஹரன்.. அதேபோல தமிழ் மொழியறிவே சிறிதும் இல்லாத சரத் நையாண்டியாக “என்ன நீ பாடுற?..” “ஒரே பிளாட்-ஆ இருக்கு?”.. “நல்லால்லே!.. நீ வேணும்னா மலையாளத்துல ட்ரை பண்ணு!..” என்று ஒரு விதமாக மலையாளம் கலந்த தமிழில் போட்டியாளர்களை கேவலமாக விமர்சிக்கிறார்.. அதைக்கேட்டு ஹரிஹரனும் “கெக்கே..பிக்கே..” என்று நையாண்டியாக சிரிக்கிறார்.. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் ஒரு இசைப்போட்டி நிகழ்ச்சியைப் போலவே தெரியவில்லை.. “நையாண்டி தர்பார்” போலத் தெரிகிறது.. இந்த நிகழ்ச்சிக்கு “3 Idiots !..” என்று பெயர் வைக்கலாம்..

இதே ஜெயா தொலைக்காட்சியில் “என்னோடு பாட்டு பாடுங்கள்” என்றொரு நிகழ்ச்சி வந்தது.. அதைப் பார்த்திருப்பீர்கள்.. அதிலும் திரு.எஸ்.பி.பி. அவர்கள் போட்டியாளர்களை விமர்சனம் செய்வார்..எப்படி?.. “நீங்க நல்லா பாடினீங்கம்மா.. சின்ன சின்னத் தவறுகள்தான்.. பல்லவியில கொஞ்சம் சுருதி மிஸ் பணிடீங்க.. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணீங்கன்னா நல்ல பாடுவீங்க.. நானெல்லாம் ஆரம்பத்துல இதைவிட நெறைய தப்பா பாடியிருக்கேன்.. இன்னும் கொஞ்சம் கேர் எடுத்து நல்லா பாடுங்க”.. இப்படி நாகரிகமாத்தான் தவறுகளை எடுத்துச் சொல்வார்..

இந்த ஜேம்ஸ் வசந்தன் மாதிரியோ, சரத் மாதிரியோ கிண்டலாக, நையாண்டியாக ஒருமையில் பேச மாட்டார்.. அவரும் ஹரிஹரன் போல, சரத் போல வேற்று மொழிக்காரர்தான்.. ஹரிஹரன்,சரத் இருவருக்கும் மலையாளம் தாய்மொழி.. எஸ்.பி.பி. அவர்களுக்கு தெலுங்கு தாய்மொழி.. ஆனால் தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும்.. தமிழ் மொழிக்கே உரித்தான லகர, ளகர, ழகர உச்சரிப்பில் அவ்வளவு கவனமாக இருப்பார்.. இப்போதைய பாடகர்களைப் போல (சரத், ஹரிஹரன் உட்பட..) கேவலமாகத் தமிழ் பேசவோ, பாடவோ மாட்டார்..

இப்போது பாடுகிறார்களே.. வந்தேமாதரம் என்று பாடச் சொன்னால் “வந்த்தேஏஏஏஏஏ மாத்தறோம்!..” என்று கத்துகிறார்கள்.. அதையும் பாட்டு என்று நம்மவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.. அது மட்டுமல்ல இதற்கே தங்களை ஒரு பெரிய மேதை என்று நினைக்கிறார்கள்.. பாடகர் திரு.ஜேசுதாஸ் அவர்கள் ஒரு முறை “பிள்ளை நிலா..” என்று பாடுவதற்குப் பதிலாக “பில்லை நிலா” என்று பாடிவிட்டார்.. காரணம் அவரது தாய்மொழி மலையாளம்.. அதனால் ஏற்பட்ட பிரச்சனை.. அதை பிறர் எடுத்துக் காட்டியவுடன் எல்லோரிடமும் “அடடா.. தவறாகப் பாடிவிட்டேனே…. முன்பே எடுத்துச் சொல்லக் கூடாதா?”.. மன்னித்துவிடுங்கள்!.. என்று மன்னிப்புக் கேட்டார்.. பாடும்போது தவறு நேர்வது சகஜம்.. ஆனால் அதை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.. ஆனால் இப்போது என்ன நடக்கிறது “ஸ்டைல்” என்ற பெயரில் தமிழைக் கொலை செய்து பாடுவதையே சரி என்கிறார்கள் இப்போதைய பாடகர்கள்.. எந்த மொழிக்காரர்களும் எந்த மொழியிலும் பாடலாம்.. இசைக்கு மொழி கிடையாது.. ஆனால் எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியின் சிறப்பை உணர்ந்து அந்த மொழியின் பெருமை கெடாத வண்ணம் பாடவேண்டும்.. செய்வார்களா?…”

ரமேஷ்

One Response to தொடர்ச்சி : ஹரியுடன் நான் திமிர்தனம் – ரமேஷ்

  1. […] பதிவு 4 (தொடர்ச்சி : ஹரியுடன் நான் திமிர்த்தனம் – ரமேஷ் ) […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: