தீவிரவாதி என்பவன் யார்?

அன்பார்ந்த காதலர் உலகமே!

வணக்கம்.

உங்களின் காதலன் முதன் முதலாய் எழுதுகிறேன்.

என்னை உங்களுக்குப் பிடிக்கும் தானே?

ஏனென்றால் நான் உங்களுக்குள்ளே இருக்கின்றேன்

காதல் இல்லாத இடம் ஏது இவ்வுலகில்?

காதல் காதல் காதல் என்று கதறினானே பாரதி

உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்றானே பாரதி
இதுவும் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

காதலிக்காதவன் உலகில் வாழ தகுதியற்றவன்
அவன் அதி தீவிரவாதி
அவன் மற்ற காதலர்களால் கொல்லப்பட வேண்டியவன்
காதலித்தவனுக்கு மட்டுமே இவ்வுலகம் சொந்தம்
காதலிக்காதவர்கள் மடிந்து போக வேண்டும்

என் இனிய காதலர்களே

அதோ பாருங்கள்
தன் காதலியிடம் கண்களால்
இதயத்தில் வழியும் ரத்தத்தோடு
விடை பெறுகிறானோ விடுதலை வீரன்

காதலன் பிரிவால்
உயிரே பிரிவதைப் போல
துவண்டு விழுகிறாளே காதலி

அவளைப் பாருங்கள் காதலர்களே

காதலை விட விடுதலை முக்கியமா?
யாருக்காக விடுதலை?
எவருக்காக விடுதலை?

காதல் காதல் காதல் இல்லையெனில்
வாழ்க்கை ஏன என் நேசத்துக்குரிய காதலர்களே
ஆனால் காதலியை இழந்த காதலர்களால்
காதல் வாழ்கிறது என் காதலுக்குரிய காதலர்களே

என் ப்ரிய காதலர்களே !

கலீல் ஜிப்ரானை உங்களுக்கு தெரியுமா?
அவன் ஒரு கவிஞன்
காதலைப் பாடிய கடவுளின் கவிஞன் அவன்
வாழ்க்கையைப் பாடிய அமர காவிய நாயகன்
வார்த்தைகள் விளையாட்டில் விற்பனன்
அவனைப் பற்றிய ஒரு பதிவை கீழே படியுங்கள்
காதலிக்காதவர்களே நீங்களும் காதலிப்பீர்

உலகத்தின் அழகான வார்த்தைகள் ஒருவனிடம் மண்டியிட்டுக்கொண்டிருந்தன.

என்னையும் உன் காவியங்களில் சேர்த்துக்கொள் என்று அவனிடம் கெஞ்சின.

பெண்கள் அவனது வார்த்தைகளிடம் அடிமையாயிருந்தனர்.

வார்த்தைகள் அவனிடம் அடிமையாயிருந்தன.
முறிந்த சிறகுகள் என்கிற தன் காதல் காவியத்தை கலீல்ஜிப்ரான் உலகத்திற்குக் கொடுத்தார்.

அந்த அளப்பெரிய காதலனுபவத்தை ஜிப்ரானுக்கு பரிசளித்தவள் அவனது செல்மா.

ஜிப்ரான் தன்னுடைய பதினெட்டாவது வயதில் தன் தந்தையின் ஆத்ம நண்பரான பாரிஸ் எபாண்டி கராமி என்பவருடைய செல்ல மகளாக செல்மாவைச் சந்திக்கிறான். முதல் பார்வையில் அந்த ஆன்மாவை உருக்கும் காதல் பிறந்துவிடுகிறது. தன்னுடைய இன்னொரு பாதியைக் கண்டுகொண்டதாக ஜிப்ரானின் மனம் கூத்தாடியது. செல்மா பேரழகி. இவளுடைய அழகை எந்த ஓவியனாலும் முழுமையாகப் பிரதிசெய்துவிடமுடியாது அவ்வளவு அழகு அவள். ஜிப்ரான் செல்மாவைச் சினேகிக்கத் தொடங்கினான். செல்மாவும்..

எப்போதும் காதலுக்கு அந்தஸ்து எதிரியாகவே இருக்கிறது. காதலுக்கு மட்டும் விதவிதமான எதிரிகள். சிலசமயங்களில் காதலர்களே காதலின் எதிரிகளாகிவிடுகிறார்கள். பேரழகியும் பணக்காரியுமான செல்மாவை அடைந்துவிட நிறையப்பேர் துடிக்கிறார்கள். அவர்களுடைய தூக்கத்தையெல்லாம் செல்மா கெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆனால் செல்மாவின் கனவுகளில் ஜிப்ரான் அலைந்துகொண்டிருந்தான்.

இந்தக் காதலுக்கு வில்லன் ஒரு பாதிரியார் வடிவத்தில் வந்தான். கழுத்தில் சிலுவையும் மனசுள் அழுக்கையும் சுமந்துகொண்டிருக்கும் பாதிரி. தன்னுடைய மருமகனுக்கு செல்மாவை மணமுடிப்பதன் மூலம் அவனைப் பெரும் பணக்காரனாகவும் அழகியின் கணவனாகவும் மாற்றி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று திட்டம் போட்டான்.

செல்மாவின் தந்தையை வார்த்தைகளால் மயக்கி அந்தத் திருமணத்தை நடத்தியும் முடித்துவிட்டான். காதலின் வெளியில் சுதந்திரமாக மிதந்துகொண்டிருந்த செல்மாவினதும் ஜிப்ரானினதும் சிறகுகள் முறிந்து விழுந்தன. செல்மாவின் தந்தை கடுமையாக நோயுற்றிருக்கையில் இந்தத் திருமணம் நடந்தது. அதற்கு முன்பாக ஜிப்ரானை அழைத்த செல்மாவின் தந்தை “ஜிப்ரான் என்னை உன் தந்தைபோலவும் செல்மாவை உன் தங்கையைப்போலவும் நேசிக்கவேண்டும்” என்று சொன்னார். ஜிப்ரான் தன் காதலை உள்ளே ஒழித்து வைத்துக்கொண்டு புன்னகை புரிந்தான்.

ஜிப்ரானின் பிரியத்துக்குரிய செல்மாவின் இல்வாழ்க்கை பூத்துக் குலுங்க வேண்டும் என்று அவன் பிரார்த்தித்தான்.

ஆனால் அவனுடைய ஒப்பற்ற மலர் வாடிவதங்கியது. செல்மாவின் கணவன் நாள் முழுதும் மதுவிடமும் மாதர்களிடமும வசமிழந்து கிடந்தான். தன் இனிய காதலியின் வாழ்வின் துயரங்களில் எல்லாம் அவளுக்கு துணையிருந்தான் ஜிப்ரான். திருமணத்திற்குப்பின்பும் அவளைச் சந்தித்து அவளுக்கு ஆறுதலாயிருந்தான் எல்லையற்ற தன் நேசத்தை அவளுக்கு வழங்கினான். தன்னுடைய இதயத்தை அவளுடைய துயரங்களின் கல்லறையாக மாற்றினான்.

ஆனால் விதி எல்லாவற்றையம் விட வலியது. திருமணத்திற்குப் பிறகு ஜிப்ரானைச் சந்திக்கக் கூடாதென்று செல்மாவுக்கு தடை விதிக்கப்பட்டது தனது மனதுக்கு ஆறதலாக இருந்த ஒரே ஒரு ஆத்ம நண்பனை காதலனையும் இழந்து செல்மா துன்பத்தில் உழன்றாள். கருவுற்றிருந்த செல்மா தன் குழந்தையின் மழலைச் சொல்லாவது தன் துயரங்களினின்றும் தன்னை விடுவிக்கும் என்று நம்பினாள்.

குழந்தை பிறந்து தன் தாயின் கண்களை ஒரு முறை பார்த்தது. இந்த உலகத்தின் பேரன்பு முழுவதையும் தன் குழந்தைக்காக வைத்துக்கொண்டிருந்த செல்மா தன் மகனை முத்தமிட்டாள். ஆனால் அந்தக் குழந்தை அதுவே அவனது தாயைப் பார்த்த கடைசித் தடைவை தனது தாய் இந்தப்பூமியின் தன்பெயரால் துன்பப்படகூடாது என முடிவு செய்தவனைப்போல அந்தக் குழந்தை இறந்து போயிற்கு ஒரு கறுத்தநாளில். தனது மகனின் இறந்து போன உடலை முத்தமிட்டபடி செல்மா சொன்னாள் “மகனே நீ என் துயரங்களை போக்க வந்தவன் துயரங்களில்லா தேவதைகளின் நகருக்கு என்னை அழைத்துச் செல்ல வந்தவன்” அந்த வார்த்தைகளே செல்மாவின் இறுதி வார்த்தைகள். தன்னுடைய பிரியமான காதலனும் தனக்கு கிடைக்காமல் மகனும் கிடைக்காமல் உயிர்வாழ விரும்பாத செல்மா மரித்தாள்.

செல்மாவின் கணவன் அவளது மரணத்தின் போதும் குடித்துக் கும்மாளமிட்டான். மணப்பெண்போல் அலங்கிரிக்கப்பட்ட செல்மாவின் உடலை கல்லறைத் தோட்டத்திற்கு ஜிப்ரான் எடுத்துச் சென்றான். அவளுடைய குழந்தையை அவளுடைய உள்ளங்கைகளிலேயே வைத்தான். (தாயின் கரங்களே குழந்தையின் சவப்பெட்டியானது என்று எழுதுகிறான் ஜிப்ரான் பின்னர்) தனது பியம் முழுவதுமே மண்ணில் புதைந்து போவதை ஜிப்ரான் பார்த்தான். இனி என்றைக்குமே தனது முறிந்த சிறகுகளால் பறக்கவியலாது என்பதை அவன் உணர்ந்தான்.

அவன் சொல்கிறான்….

ஓ பெய்ரூட் நகரில் சிதறிக் கிடக்கும் என்து இளம் பருவத்து நண்பர்களே

பைன் மரக் காட்டினருகே அமைந்துள்ள அந்த சமாதியைக் கடந்துசெல்லும் போது அதன் அருகே அமைதியாய் மெல்ல நடந்த செல்லுங்கள்

உங்கள் காலடியோசைகள் இறந்தவரின் ஆழ்ந்த உறக்கத்தை கலைத்து விடக்கூடாது.

செல்மாவின் சமாதியின் முன்னால் அடக்கமாக நில்லுங்கள்

அவள் உடலை மூடியிருக்கும் மண்ணை வாழ்த்துங்கள்

என்பெயரை ஆழ்ந்த பெருமமூச்சுடன் உச்சரித்துவிட்டு

தனக்குத் தானே இப்படிச் சொல்லுங்கள்

காதலின் சிறைக்கைதியான கடல்கள் கடந்து வாழும்

ஜிப்ரானின் எல்லா நம்பிக்கைகளும் இங்கே தான் புதையுண்ட கிடக்கின்றன.

இந்த இடத்தில் தான் அவன் தனது மகிழ்ச்சியை இழந்தான்

இங்கே தான் அவன் கண்ணீர் வற்றிப் போயிற்று

இங்கே தான் அவன் தனது சிரிப்பை மறந்து போனது.

வாழ்நாள் முழுதும் தன் செல்மாவைக் காதலித்துக்கொண்டிருந்த கலீல் ஜிப்ரான் அவளது கல்லறையில் எதிரில் சொல்லிய வாசகங்கள் இவை. என்றைக்கும் தீராக்காதல் அவனுடையது.

நன்றி: திரு. அகிலன். இணையதளம் : http://www.agiilan.com

மல்லிகை மகள் பிப்ரவரி இதழில் வெளியான  அகிலனின் ஒரு காதலன் ஒரு காதலி கட்டுரையியில் இருந்து ஒரு பகுதி

காதலோடு,
உங்களின் உள்மனதோடு கலந்து கிடக்கும்
உங்களின் ப்ரியத்துக்குரிய
உங்கள் காதலன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: