ஹரியுடன் நான் – வாசகரின் பின்னூட்டம்

ஒரு வாசகரின் பின்னூட்டத்தை ஒரு பதிவாக்கி விட்டேன்.  நன்றி திரு ரமேஷ். என் நண்பர்கள் மூலமாக இவ்விஷயத்தை ஜெயா டிவி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்குமாறு சொல்லியிருக்கிறேன். ஜெயா டிவி நிர்வாகம் நேயர்களுக்கு மதிப்புக் கொடுக்கிறதா? இல்லை அலட்டல் பேர்வழிகளுக்கு மதிப்புக் கொடுக்கின்றார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சக மனிதனை மனிதனாக மதிக்காவரை  நாமும் மனிதர்களாக மதிக்க வேண்டியதில்லை. ஹரிஹரன் மற்றும் ஜேம்ஸ் பங்கு பெறும் படைப்புகளைப் பார்ப்பதையும், கேட்பதையும் தவிர்க்க வேண்டும். தமிழனுக்கு ஜேம்ஸும், ஹரிஹரன் மற்றும் சரத் மூவரும் மரியாதை தர மாட்டார்கள். ஆகவே இவர்களை நாம் முற்றிலுமாக புறக்கணிப்போம்.

அன்புடன் பஞ்சரு பலராமன்

ஒரு சிறந்த பாடகர் என்பவர் எல்லாவிதமான பாடல்களையும் அதாவது கர்நாடக சங்கீதம், மெல்லிசை எனக்கூறப்படும் மேலோடி சாங்க்ஸ், மேல்நாட்டு சங்கீதம் எனப்படும் மேற்கத்திய இசை அதாவது வெஸ்டேர்ன் சாங்க்ஸ், நாட்டுப்புற இசை எனக்கூறப்படும் கிராமிய இசை உட்பட அனைத்து தரப்பட்ட இசைமுறைகளையும் தெரிந்திருக்க வேண்டும்.. இதில் ஏதாவது ஒரு இசை வகையில் பாண்டித்தியம் பெற்றிருக்கலாம்.. அதாவது மிகச்சிறப்பாகப் பாடக்கூடிய திறன் பெற்றிருக்கலாம். ஆனால் அனைத்துவகையான இசைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று..

அப்படிப்பட்ட பாடகர்கள்தான் அப்படிப்பட்ட இசைவல்லுனர்கள்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, P.B.ஸ்ரீநிவாஸ், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றவர்கள். உதாரணமாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்களிடம் இந்த வாத்தியத்தில் மேல்நாட்டு இசையை வாசித்துக் காட்ட முடியுமா என்று கேட்பார்கள்.. அதை அந்த மேல்நாட்டு இசையை நாதஸ்வரத்தில் வாசித்துக் காட்டுவார்கள்.. அப்படி எல்லாவிதமான இசைவகைகளையும் தெளிவாக அக்கால இசைஅமைப்பாளர்களும், பாடகர்களும் கற்றிருந்தனர்.. அப்படி அனைத்து இசைகளையும் தெரிந்திருந்ததால் பல மறக்கமுடியாத சிறப்பான பாடல்களையும், பாடல் மெட்டுகளையும் நமக்குத் தந்தனர்.. இருந்தும் அந்த பாடகர்களுக்குத் தலைக்கனமோ, கர்வமோ இருக்கவில்லை..

ஆனால் இப்போது அரைகுறையாகக் கற்றுக்கொண்டு இரண்டொரு நாட்களில் மறந்துவிடுகிற பாடல்களைப் பாடுகிற பாடகர்கள், அப்படிப்பட்ட பாடல்களுக்கு இசைஅமைக்கிற இசையமைப்பாளர்கள், மற்றும் வார்த்தைகளே புரியாத அளவிற்கு ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடன் பாடல்வரிகளை எழுதுகிற நாலாந்தர பாடலாசிரியர்கள்(?!) ஆடுகிற ஆட்டமும்,. அடிக்கிற கூத்தும் தாங்கமுடியவில்லை.. இதுல இசைப்புயல், கவிப்பேரரசு, இசைக்காத்து, வெங்காயம்-னுலாம் பட்டம் வேறு.. அந்தப்பாடல்களை வெச்சி சோடி நெ.1 , சோடி நெ.2 ஜூனியர்-னுலாம் பட்டம் வேறு.. அதுல இப்படிப்பட்ட நடுவருங்க எவனெவனோ வந்து உக்காந்துகிட்டு ஒங்க ரெண்டுபேருக்கும் கெமிஸ்டிரி சரியில்ல, பிசிக்ஸ் சரியில்ல, பாலாஜி சரியில்ல,, இப்புடி கட்டிப்புடிக்கணும்,.. இப்பிடியெல்லாம் கமெண்ட்ஸ் வேறு.. என்ன சார் இதெல்லாம்?..

சினிமாவுக்கூட சென்சார் வேணாம்.. கொஞ்ச பேர்தான் சினிமாவுக்குப் போவாங்க.. கண்டிப்பாக டி.வி.க்கு சென்சார் வேணும்ங்க..

அதேபோல இந்த ஹரிஹரன்,.. இவுரு நல்ல பாடகரா இருக்கலாம்.. ஆனா அவுரு பண்ற பந்தா.. முதல்ல இப்படிப்பட்ட நிகழச்சிகளில எப்படி உட்காரணும்னு யாராவது இவருக்குக் கத்துக் கொடுங்க சார்..

கால் மேல் கால் போட்டுக்கிட்டு கைய வீசிக்கிட்டு இவரு ஒக்காந்துகிட்டிருக்குறது அவருக்கு இசைகிட்டக் கூட மரியாதையா இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.. அடுத்தது ஜேம்ஸ் வசந்தன் ஹரிஹரனாவது பரவாயில்ல.. இந்த ஆளு ஜேம்ஸ் வசந்தன் மரியாதை-நா என்னான்னு கேட்பான் போல இருக்கு.. எல்லாரையும் சகட்டு மேனிக்கு அவன், இவன்-ந்குறதும், கேவலமா பேசுறதும்,, எதோ இவன் ஒருத்தன்தான் இசக்குன்னே பொறந்திருக்குற மாதிரி பேசுறதும், பண்ணுற பந்தா தாங்க முடியலை.. அதனாலதான் இந்த ஆளை அவரு பாணியிலேயே அவன், இவன்-நு எழுதியிருக்கேன்..

இவங்க ரெண்டுபெரையாவது கொஞ்சம் மன்னிக்கலாம்.. அந்த ஆளு சரத் யாருங்க அந்த ஆளு,, அந்த ஆள எங்க இருந்து புடிச்சாங்க?.. இசைக்கு மொழி தேவையில்லைதான்.. ஆனால் பாடல் வரிகளைப் புரிந்துகொள்ள மொழி கண்டிப்பாகத் தெரிஞ்சிருக்கணும்,, ஆனால் கொஞ்சம் கூட அறிவே இல்லாத.. சாரி..மொழியறிவே இல்லாத சரத்(இந்த ஆளுக்குத் தமிழ் சரியாகத் தெரியாது) இந்த ஆளு சரத் போட்டியாளர்களைக் கிண்டல் செய்வதும், அவர்கள் பாடுகிற பாடல்களின் வரிகளைக் கிண்டல் செய்வதும் ரொம்ப ஓவர்.. இந்த மூணு பேரும் உண்மையான சிறந்த பாடகரான எஸ்.பி.பி. அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்.. அதில் எஸ்.பி.பி. அவர்கள் போட்டியாளர்களிடம் எப்படி நாகரிகமாக தவறுகளைத் திருத்துகிறார்.. என்பதைப் பார்த்துப் பாடம் படிக்கவேண்டும்..

முதலில் ஹரிஹரன், ஜேம்ஸ், சரத் இவனுங்க நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்..

One Response to ஹரியுடன் நான் – வாசகரின் பின்னூட்டம்

  1. […] பதிவு 3 (ஹரியுடன் நான் வாசகரின் பின்னூட்டம்) […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: