ஹரியுடன் நான் திமிர்தனம் பற்றி விகடனில்

ஜூலை 15ம் தேதியன்று ஹரியுடன் நான் திமிர்த்தனம் என்ற பதிவை எழுதினேன். இவ்வார ஜூனியர் விகடனில் என் பதிவுக்கு ஆதரவு கிடைக்கும் வகையில் வெளியான செய்தியினை கீழே படிக்கவும்.

மிஸ்டர் மியாவ் பக்கத்தில் வெளியான செய்தி கீழே. நன்றி ஜூனியர் விகடன் மற்றும் மிஸ்டர் மியாவ்

விஜய் டி.வி-யின் ‘சூப்பர் சிங்கர்’ போட்டி நிகழ்ச்சியில் சிறுவர்களைக்கூட பாலமுரளி கிருஷ்ணா, ஜானகி, சித்ரா, மனோ உள்ளிட்ட ஜாம்பவான்கள் ”வாங்க… போங்க…” என்று மிகுந்த மரியாதையாக அழைக்கின்றனர். ஆனால், ஜெயா டி.வி-யில் ‘ஹரியுடன் ஒரு நாள்’ இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அதில் பாடும் டீன் ஏஜ் பாடகர், பாடகிகளை ”வா… போ…” என்று ஒருமையில் சொல்வதோடு, பாடுவதில் இருக்கும் சிறு சிறு குறைகளையும் முகத்தில் அடித்தாற்போல படுகாட்டமான வார்த்தைகளால் விளாசுகிறாராம். கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க ஜேம்ஸு!

ஜேம்ஸ் எத்தனை சொல்லியும் கேட்பதாகத் தெரியவில்லை. தொடர்ந்து அதே வேலையைச் செய்து வருகிறார். ஒரு கலைஞனுக்கு மக்கள் ஆதரவு தேவை என்கின்ற போது மீடியாக்களில் தான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதம் சிறிதும் தெரியாமல் இரண்டு படங்களில் இசைக்கோர்வை செய்ததற்காக அலட்டலாக, மண்டைக் கர்வத்துடன், நக்கலுடன் இளம் பாடகர்களை விமர்சிக்கும் இவரின் ஆட்டம் எத்தனை நாள் செல்கிறது என்று பார்க்கலாம். ஹரிஹரனும், சரத்தும் எதிரே டேபிள் போட்டு அமைதியாக பேச ஆரம்பித்து விட்டனர். வறட்டுக் கவுரத்தினால் கர்வம் பிடித்து ஆடும் ஜேம்ஸ் அதன் பின் விளைவை அனுபவித்தே ஆவார்.

பின்குறிப்பு : இராவணன் படத்தில் வரும் உயிரே போகுதே பாடல் ஏதோ ஒரு பாடலின் மாற்றுக் காப்பி போல தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மானிடம் சரக்குத் தீர்ந்து விட்டதா என்று தெரியவில்லை. மேலும் இருபது லட்சத்துக்கு கூட விற்காத ஆடியோ ரைட்ஸ் இருக்கும் நிலையில் மூன்று கோடிக்கும் மேல் கொடுத்து ரஹ்மானை ஏன் புக் செய்கிறார்கள் என்பது வேடிக்கையானது.  இசையமைப்பாளர்களின் ஆட்டம் அடங்கி வரும் நேரத்தில் ஜேம்ஸின் மண்டைக்கர்வமும் ஒழிக்கப்பட்டு விடும் என்று நம்பலாம்.

காப்பி ரைட் : பஞ்சரு பலராமன்

2 Responses to ஹரியுடன் நான் திமிர்தனம் பற்றி விகடனில்

  1. […] பதிவு 2 (ஹரியுடன் நான் விகடனில்) […]

  2. Ramesh. R சொல்கிறார்:

    ஒரு சிறந்த பாடகர் என்பவர் எல்லாவிதமான பாடல்களையும் அதாவது கர்நாடக சங்கீதம், மெல்லிசை எனக்கூறப்படும் மேலோடி சாங்க்ஸ், மேல்நாட்டு சங்கீதம் எனப்படும் மேற்கத்திய இசை அதாவது வெஸ்டேர்ன் சாங்க்ஸ், நாட்டுப்புற இசை எனக்கூறப்படும் கிராமிய இசை உட்பட அனைத்து தரப்பட்ட இசைமுறைகளையும் தெரிந்திருக்க வேண்டும்.. இதில் ஏதாவது ஒரு இசை வகையில் பாண்டித்தியம் பெற்றிருக்கலாம்.. அதாவது மிகச்சிறப்பாகப் பாடக்கூடிய திறன் பெற்றிருக்கலாம். ஆனால் அனைத்துவகையான இசைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று.. அப்படிப்பட்ட பாடகர்கள்தான் அப்படிப்பட்ட இசைவல்லுனர்கள்தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, P.B.ஸ்ரீநிவாஸ், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றவர்கள். உதாரணமாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்களிடம் இந்த வாத்தியத்தில் மேல்நாட்டு இசையை வாசித்துக் காட்ட முடியுமா என்று கேட்பார்கள்.. அதை அந்த மேல்நாட்டு இசையை நாதஸ்வரத்தில் வாசித்துக் காட்டுவார்கள்.. அப்படி எல்லாவிதமான இசைவகைகளையும் தெளிவாக அக்கால இசைஅமைப்பாளர்களும், பாடகர்களும் கற்றிருந்தனர்.. அப்படி அனைத்து இசைகளையும் தெரிந்திருந்ததால் பல மறக்கமுடியாத சிறப்பான பாடல்களையும், பாடல் மெட்டுகளையும் நமக்குத் தந்தனர்.. இருந்தும் அந்த பாடகர்களுக்குத் தலைக்கனமோ, கர்வமோ இருக்கவில்லை.. ஆனால் இப்போது அரைகுறையாகக் கற்றுக்கொண்டு இரண்டொரு நாட்களில் மறந்துவிடுகிற பாடல்களைப் பாடுகிற பாடகர்கள், அப்படிப்பட்ட பாடல்களுக்கு இசைஅமைக்கிற இசையமைப்பாளர்கள், மற்றும் வார்த்தைகளே புரியாத அளவிற்கு ஆபாசமாகவும், இரட்டை அர்த்தத்துடன் பாடல்வரிகளை எழுதுகிற நாலாந்தர பாடலாசிரியர்கள்(?!) ஆடுகிற ஆட்டமும்,. அடிக்கிற கூத்தும் தாங்கமுடியவில்லை.. இதுல இசைப்புயல், கவிப்பேரரசு, இசைக்காத்து, வெங்காயம்-னுலாம் பட்டம் வேறு.. அந்தப்பாடல்களை வெச்சி சோடி நெ.1 , சோடி நெ.2 ஜூனியர்-னுலாம் பட்டம் வேறு.. அதுல இப்படிப்பட்ட நடுவருங்க எவனெவனோ வந்து உக்காந்துகிட்டு ஒங்க ரெண்டுபேருக்கும் கெமிஸ்டிரி சரியில்ல, பிசிக்ஸ் சரியில்ல, பாலாஜி சரியில்ல,, இப்புடி கட்டிப்புடிக்கணும்,.. இப்பிடியெல்லாம் கமெண்ட்ஸ் வேறு.. என்ன சார் இதெல்லாம்?.. சினிமாவுக்கூட சென்சார் வேணாம்.. கொஞ்ச பேர்தான் சினிமாவுக்குப் போவாங்க.. கண்டிப்பாக டி.வி.க்கு சென்சார் வேணும்ங்க.. அதேபோல இந்த ஹரிஹரன்,.. இவுரு நல்ல பாடகரா இருக்கலாம்.. ஆனா அவுரு பண்ற பந்தா.. முதல்ல இப்படிப்பட்ட நிகழச்சிகளில எப்படி உட்காரணும்னு யாராவது இவருக்குக் கத்துக் கொடுங்க சார்.. கால் மேல் கால் போட்டுக்கிட்டு கைய வீசிக்கிட்டு இவரு ஒக்காந்துகிட்டிருக்குறது அவருக்கு இசைகிட்டக் கூட மரியாதையா இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.. அடுத்தது ஜேம்ஸ் வசந்தன் ஹரிஹரனாவது பரவாயில்ல.. இந்த ஆளு ஜேம்ஸ் வசந்தன் மரியாதை-நா என்னான்னு கேட்பான் போல இருக்கு.. எல்லாரையும் சகட்டு மேனிக்கு அவன், இவன்-ந்குறதும், கேவலமா பேசுறதும்,, எதோ இவன் ஒருத்தன்தான் இசக்குன்னே பொறந்திருக்குற மாதிரி பேசுறதும், பண்ணுற பந்தா தாங்க முடியலை.. அதனாலதான் இந்த ஆளை அவரு பாணியிலேயே அவன், இவன்-நு எழுதியிருக்கேன்.. இவங்க ரெண்டுபெரையாவது கொஞ்சம் மன்னிக்கலாம்.. அந்த ஆளு சரத் யாருங்க அந்த ஆளு,, அந்த ஆள எங்க இருந்து புடிச்சாங்க?.. இசைக்கு மொழி தேவையில்லைதான்.. ஆனால் பாடல் வரிகளைப் புரிந்துகொள்ள மொழி கண்டிப்பாகத் தெரிஞ்சிருக்கணும்,, ஆனால் கொஞ்சம் கூட அறிவே இல்லாத.. சாரி..மொழியறிவே இல்லாத சரத்(இந்த ஆளுக்குத் தமிழ் சரியாகத் தெரியாது) இந்த ஆளு சரத் போட்டியாளர்களைக் கிண்டல் செய்வதும், அவர்கள் பாடுகிற பாடல்களின் வரிகளைக் கிண்டல் செய்வதும் ரொம்ப ஓவர்.. இந்த மூணு பேரும் உண்மையான சிறந்த பாடகரான எஸ்.பி.பி. அவர்களின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்.. அதில் எஸ்.பி.பி. அவர்கள் போட்டியாளர்களிடம் எப்படி நாகரிகமாக தவறுகளைத் திருத்துகிறார்.. என்பதைப் பார்த்துப் பாடம் படிக்கவேண்டும்.. முதலில் ஹரிஹரன், ஜேம்ஸ், சரத் இவனுங்க நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: